எமது விடு­தலை தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­யான நிலைப்­பாட்டை பகி­ரங்­க­மாக வெளியிட வேண்­டு­மென கோரிக்கை விடுத்­துள்ள தமிழ் அர­சியல் கைதிகள் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் தமது போராட்­டத்தை கைவி­டப்­போ­வ­தில்­லை­யெ­னவும் அறி­வித்­துள்­ளனர்.


நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்டு தமிழ் அர­சியல் கைதிகள் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி கடந்த மாதம் 17ஆம் திகதி இடை­நி­றுத்­தி­யி­ருந்த சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மீண்டும் ஆரம்­பித்­தி­ருந்­தனர்.
இந்­நி­லையில் நேற்றைய தினம் மூன்­றா­வது நாளா­கவும் தமது போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருந்த நிலை­யி­லேயே மேற்­கண்ட அறி­விப்பை தமது உற­வி­னர்கள் ஊடாக வெளியிட்டுள்ளனர்.
கைதிகள் அவர்­களின் உற­வி­னர்கள் ஊடாக மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,
நீண்­ட­கா­ல­மாக எமது உற­வுகள் சிறை­களில் வாடு­கின்­றனர். நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சியைப் பொறுப்­பெடுத்­த­பின்­னரும் கூட எமது உற­வு­களின் விடு­தலை தொடர்­பான கோரிக்­கை­களை நிரா­க­ரிக்கும் நிலை­மையே தொடர்ந்­த­வண்­ண­முள்­ளது. தற்­போது பல்­வேறு பட்ட தரப்­பி­னரும் பகு­தி­ப­கு­தி­யாக எமக்கு பிணை வழங்கி விடு­லை­ய­ளிக்­கப்­ப­ட­வி­ருப்­ப­தா­கவும் இதனால் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை கைவி­டு­மாறும் கோரு­கின்­றனர்.
உண்­மை­யி­லேயே தற்­போது விடு­த­லை­ய­ளிக்­கப்­ப­ட­வி­ருப்­ப­தாக கூறப்­படும் 62பேரும் கடந்த ஒன்­றரை வரு­டங்­க­ளுக்­குள்­ளாக கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளாவர். எனினும் ஐந்து வரு­டங்­க­ளுக்கு மேலாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள், தண்­டனை பெற்­ற­வர்கள், மேன்­மு­றை­யீடு செய்­த­வர்கள், வழக்கு தாக்கல் செய்­யப்­ப­டாது நீண்­ட­கா­மாக தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்கள் என்ற பிரி­வு­க­ளுக்குள் உள்­ள­டக்­கப்­பட்­ட­வர்­களின் விடு­தலை தொடர்­பாக எவ்­வி­த­மான உறு­தி­மொ­ழி­களும் வழங்­கப்­ப­ட­வில்லை.
இவ்­வா­றான நிலையில் அவ்­வா­றா­ன­வர்­களின் விடு­தலை தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­யான நிலைப்­பாட்டை பகி­ரங்­க­மாக அறி­விக்க வேண்டும். அதனை விடுத்து ஏனைய தரப்­புக்கள் வழங்கும் வாக்­கு­று­திகள் மீது நம்­பிக்கை கொண்டு ஏமா­று­வ­தற்கு நாம் தயா­ரில்லை.
அதே­நேரம் நாம் பகு­தி­ப­கு­தி­யாக பிணையில் விடு­தலை செய்­ய­ப­டுவோம் என்ற கூற்­றையோ அல்­லது செயற்­பாட்­டையோ ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. அர­சியல் நிலை­மைகள் மாற்­ற­ம­டை­யும்­போது மீண்டும் சிறைக்­கூ­டங்­க­ளுக்கு செல்­ல­வேண்­டிய சூழல் ஏற்­ப­டலாம். அதே­போன்று நாட்டின் பல்­வேறு நீதி­மன்­றங்­களில் வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளதால் அங்கு சென்று அவற்­றுக்கு முகங்­கொ­டுப்­ப­தற்­கான வச­தி­க­ளற்­ற­வர்­க­ளா­கவே உள்ளோம். இவ்­வா­றான நிலையில் பகு­தி­ப­கு­தி­யாக விடு­தலை என்­பதை எவ்­வாறு எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடியும்.
மேலும் எமக்கு பொது­மன்­னிப்­ப­ளிப்­பது தொடர்­பாக நடை­மு­றைச்­சிக்­கல்கள் காணப்­ப­டு­மாயின் எம் அனை­வ­ருக்கும் புனர்­வாழ்­வ­ளித்து விடு­தலை செய்­வ­தற்­கான மாற்­று­வ­ழி­யொன்றை மேற்­கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் போராட்­டத்­துடன் நேரடியாக தொடர்புபட்டிருந்த 12ஆயிரம் முன்னாள் போராளிகள் புணர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
ஆகவே எமக்கும் அவ்வாறான பொறிமுறையொன்றை ஏற்படுத்தவேண்டும். மேலும் எம் அனைவரையும் ஒட்டுமொத்தமாக எந்த அடிப்படையிலாவது விடுதலை செய்து எமது குடத்தவர்களுடன் இணைந்து வாழ்வதற்கான வழியை ஏற்படுத்துமாறே கோருகின்றோமென சிறைச்சாலையில் உள்ள தமது உறவுகள் வேண்டுவதாக தெரிவித்தனர்.