ஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் தொடர்பில் சபையில் அதிருப்தி 

Published By: R. Kalaichelvan

17 Sep, 2019 | 05:15 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

2013 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் ,அந்த விஜயங்களின் நோக்கங்கள் தொடர்பில் பதிலளிக்க அரசு ஒருவருட கால  அவகாசம்   கேட்டுள்ளமை தொடர்பில்  பாராளுமன்றத்தில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

பாராளுமன்றம்  இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. இதனையடுத்து சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கள் சமர்ப்பணத்தை தொடர்ந்து வாய்மூல விடைக்கான வினா நேரம் இடம்பெற்றது.

இதில் ஜே .வி.பி.எம்.பி.யான நளிந்த ஜெயதிஸ்ஸ 2013 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் ,அந்த விஜயங்களின் நோக்கங்கள்.அதில் பங்கேற்றவர்கள்  அதற்காக செலவிடப்பட்ட தொகை தொடர்பில் பிரதமரும் தேசிய கொள்கைகள்,பொருளாதார அலுவல்கள்,மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர்கள் அலுவல்கள் அமைச்சரான  ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினார்.

ஆனால் பிரதமர் சபையில் இருக்காததால் அரசதரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க .இக்கேள்விக்கு பதிலளிக்க பிரதமர் 6 மாத கால அவகாசம் கோருவதாகக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஜே .வி.பி.எம்.பி.யான நளிந்த ஜெயதிஸ்ஸ ,பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிக்க 3 தடவைகளுக்கு மேல் கால அவகாசம்  கேட்க முடியாது.  ஆனால் இக்கேள்விக்கு பதிலளிக்க முதல்தடவை 3 மாத கால அவகாசம் கேட்கப்பட்டது. பின்னர் இரண்டாவது தடவையும் 3 மாத கால அவகாசம் கேட்கப்பட்டது. இப்போது மூன்றாவது தடவை 6 மாத கால அவகாசம் கேட்கப்படுகின்றது.

ஒட்டு மொத்தத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் ,அந்த விஜயங்களின் நோக்கங்கள் தொடர்பில் பதிலளிக்க அரசு ஒருவருட கால அவகாசம் கேட்டுள்ளது.  

இது மிகவும் சாதாரண கேள்வி. இதற்கு பதிலளிக்க ஏன் இவ்வளவு கால அவகாசம் எனக்கேட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32