“சஜித்  65 இலட்சத்திற்கும் அதிக  வாக்குகளை பெற்று வெற்றி  பெறுவார்”    

Published By: R. Kalaichelvan

17 Sep, 2019 | 04:59 PM
image

(ஆர்.விதுஷா)

எதிர்வரும்  ஜனாதிபதித்தேர்தலில் சஜித் பிரேமதாச 65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று வெற்றி பெறுவார் என்று  தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமானச்சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின்  வேட்பாளர் குறித்து சர்ச்சை ஏற்படுமானால் செயற்குழுவில் வாக்கெடுப்பு மூலம் இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

விபத்துக்கள் அற்ற நாடு வேலைத்திட்டத்தின் அங்குராப்பண நிகழ்வு இன்று கொழும்பு கோட்டை - தனியார் பஸ் நிலையத்தில் இடம் பெற்றது. 

அதன் பின்னர்  ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து கூறியதாவது  , 

ஐக்கியதேசிய கட்சியின்  ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவே நியமிக்கப்படுவார்.  

ஏனெனில் அவரே  இது வரையில் ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிடப்போவதாக  கட்சித்தலைவரும் பிரதமருமான  ரணில் விக்கிரம சிங்கவிற்கு கடிதத்தின்  ஊடாக  தெரியப்படுத்தியுள்ளார். அதேவேளை,எமது கட்சியில்  இதுவரையில்  வேறு எவரும் ஜனாதிபதி  தேர்தலில்  போட்டியிடப்போவதாக  உத்தியோக  பூர்வமாக  அறிவிக்கவில்லை. அவ்வாறு  வேறு  எவராயினும்   போட்டியிட  முன்வருவார்களாயின்  எதிர்வரும்  வாரங்களுக்குள்  தெரியப்படுத்த  வேண்டும்.ஏனெனில் வேட்பனுக கோரல் இடம்பெறவுள்ளது.   

ஆகவே  எவராயினும் போட்டியிடவுள்ளார்கள் ஆயின் கட்சித்தலைவருக்கு தெரியப்படுத்துவர்.அவர்கள் வாக்கெடுப்பின் ஊடாக ஜனாதிபதி  வேட்பாளர் தெரிவு  செய்யப்படுவார். ஆயினும்  இது வரையில்  எவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடல்  தொடர்பில்   உத்தியோக  பூர்வமாக  அறிவிக்கவில்லை என்பதால் சஜித்  பிரேம  தாசவே  ஜனாதிபதி  வேட்பாளராக அறிவிக்கப்படுவார்  என  எதிர்பார்க்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27