போலியான கடவுச் சீட்டில் ஜப்பான் செல்ல முயன்ற இருவர் கைது

Published By: Daya

17 Sep, 2019 | 04:41 PM
image

ஈரானை சேர்ந்த தந்தையும் மகனும் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடியகல்வு பிரிவிடம் தங்களின் கடவுசீட்டை காண்பித்தபோது குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஈரானை சேர்ந்த 51 வயதான தந்தை ஒரு வியாபாரியாக செயற்பட்டு வருவதோடு ,15 வயதான அவரின் மகன் பாடசாலையில் கல்வி கற்றுவருகிறார்.  

குறித்த சந்தேக நபர்கள் கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் ஜப்பான்  செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் குடியகல்வு பகுதிக்கு சென்று தங்களின்  சீன கடவுச் சீட்டை காண்பித்தபோது இதில் பல வித்தியாசம் இருப்பதாக தெரிவித்து உடனடியாக குடிவரவு - குடியகல்வு பிரிடம் ஒப்படைத்துள்ளனர். 

குறித்த கடவு சீட்டை இயந்திரத்தில் பரிசோதித்த பார்த்தபோது ஜப்பான் கடவுச் சீட்டில் இருக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் இல்லாமை தெரியவந்துள்ள நிலையில் குறித்த கடவுச் சீட்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் குடிவரவு- குடியகல்வு அதிகாரிகள் குறித்த சந்தேகநபர்களின் பயணப் பொதியை மேலும் பரிசோதனை செய்தபோது தெளிவில்லாத இரு விமான டிக்கெட்டுக்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர்கள் ஜப்பானிலிருந்து தனது நண்பர் மூலம் அவுஸ்திரேலியா செல்வதற்காக இலங்கைக்கு வந்தாகவும் குறித்த விடயத்திற்காக ஈரான் பிரஜைக்கு 7 இலட்சம் ரூபா கொடுத்ததாகவும் குடிவரவு- குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை குடிவரவு- குடியகல்வு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27