தாமரை கோபுர  நிதி மோசடி விவகாரம் தொடர்பில்  இருவாரக்காலத்திற்குள் விசாரணைகளை ஆரம்பியுங்கள் : பந்துல

Published By: R. Kalaichelvan

17 Sep, 2019 | 03:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தாமரை கோபுர நிர்மாண பணிகளின் போது  2 பில்லயன் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பாரதூரமானாது.

இக்குற்றச்சாட்டு தொடர்பில சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு வார காலத்திற்குள் நீதியர்களை உள்ளடக்கிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும்என  பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கை - சீன  சிநேக பூர்வ அடையாளமாக நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் மிக உயரமாக கொழும்பு தாமரை கோபுரம் நேற்று  ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது. இக்கோபுரம்  இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கும், சுற்றுலாத்துறை விருத்திக்கும் பாரிய பங்களிப்பாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தாமரை கோபுர திறப்பு விழாவின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரையில் கடந்த அரசாங்கத்தின் மீதும், சீனாவின் எ.எல்.ஐ.டி நிறுவணத்தின் மீதும் புதிய ஒரு குற்றச்சாட்டை தொடுத்துள்ளார். இக்குற்றச்சாட்டு பாரதூரமானது. இரண்டு நாட்டின் உறவிற்கும் பாதிப்பினையும்  ஏற்படுத்தும். 

தாமரை கோபுர நிர்மாணிப்பிற்கான அமைச்ச்சரவை பத்திர அனுமதி  2012ம் ஆண்டு கிடைக்கப் பெற்றது. எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில்  இந்நிர்மாண பணிகளை முன்னெடுக்க மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டிய நிர்மாணத்துறை நிபுணர்களை உள்ளிடக்கிய விசேட குழுவும் நியமிக்கப்பட்டது.  நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில்  இருந்து நேற் று  கோபுர நிர்மாண பணிகள் நிறைவு பெறும் வரையில்  நிதிவொதுக்கீடு அனைத்தும் ஒரு கணக்கிணக்கத்தின் கீழே பறிமாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது.

தாமரை கோபுர நிர்மாணிப்பு திட்டத்தை ஆரம்பிப்பதற்காக இலங்கை அரசாங்கம் 2 பில்லியன் ரூபாவை முற்பணமாக சீன நிறுவனத்திடம் செலுத்தியிருந்த போது அவ்விடயம்தொடர்பில் எவ்வித உரிய ஆவணங்களும் கிடைக்கப் பெறவில்லை . என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை  கடந்த அரசாங்கத்தின் மீது நிதி மோசடி குற்றச்சாட்டை சுமத்துவதாகவே கருதப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44