அரசியலில் சில சலனங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படும் சமாளித்து மக்களின் விடுதலைக்காக தளராது செயற்படுவோம்  சி.வி.கே.சிவஞானம்

Published By: Digital Desk 4

17 Sep, 2019 | 02:45 PM
image

அரசியலில் சில சலனங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படுவது இயல்பு ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து துணிவுடன் மக்களுக்கான விடுதலைக்காக தொடர்ந்தும் தளராது செயற்படுவோம் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோப்பாய் கோமகன் கு.வன்னிய சிங்கத்தின் 60 ஆம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி தலைமையில் இன்று  நீர்வேலி வாழைக்குலைச் சங்கத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

தமிழ்த்தேசிய இனம் வாழவேண்டும் என்ற இலட்சியத்துடன் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு மகானின் நினைவு நாள் இலங்கை தமிழரசுக் கட்சி ஆரம்ப காலகர்த்தாக்களில் இவரும் ஒருவர் இவரின் தலைமைத்துவத்தில் கீழ் இன்றும் இக் கட்சி சென்றுகொண்டிருக்கின்றது அதே பாதை பின்பற்றுகின்றவர்களில் நானும் ஒருவன் தமிழ்த்தேசியத்தினுடைய விடுதலை என்பது அவருடைய துணிச்சலில் உள்ளது. பாராளுமன்றத்தில் அதன் துணிச்சலை வெளிப்படுத்தியவர் பாராளுமன்றத்தில் துணிந்து எதையும் சொல்லக்கூடிய ஓருவர் பல விடையங்களை செய்தும் உள்ளார்.

தந்தை செல்வநாயகம், வன்னியசிங்கம் ,நாகநாதன் ,இராசவிரோதயம் போன்றோர் விதைத்துவிட்ட அந்த விதை வளர்ந்து விரூட்சமாகிக் கொண்டுதான் இருக்கிறது. சில சலனங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படுவது இயல்பு ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து துணிவுடன் மக்களுக்கான விடுதலைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.

இலங்கை தமிழரசுக் கட்சி என்ற விரூட்சம் அழியாமல் இருப்பதற்கு வித்திட்டவர்களில் தந்தை செல்வாவிற்கும் அமரர் கோப்பாய் வன்னியசிங்கத்திற்கும் உண்டு. அமரர் வன்னியசிங்கம் தமிழ்த்தேசியத்தின் விடுதலைக்காக பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்காகவும் கையாண்டவர் இதில் ஒன்றுதான் இந்த வாழைக்குழைச் சங்கமும் அதுமட்டுமன்றி ஒவ்வொரு கிராமத்திலும் பொருளாதார ரீதியான முன்னேற்றம் அடைவதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டவர். 

இன்று இந்த நிகழ்வில் அமரர் வன்னியசிங்கத்தின் பிள்ளைகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டிருக்கின்றார்கள் அவர்களும் தந்தை வழியில் பல முயற்சிகளை தொடரவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08