வடக்கு–கிழக்கு இணைப்­புக்கு இந்­தியா கரி­சனை காட்ட வேண்டும்: சுரேஷ்

Published By: J.G.Stephan

17 Sep, 2019 | 02:20 PM
image

தமிழ் மக்­க­ளு­டை­ய­ தே­சிய இனப்­பி­ரச்­சி­னைக்கு சர்­வ­தேச சமூகம் தலை­யீடு செய்­து­காத்­தி­ர­மான தீர்வு வழங்­க­வேண்டும் எனத் தெரி­வித்த ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் சுரேஷ்­ பி­ரே­மச்­சந்­திரன், வடக்கு – கிழக்கு இணைப்­புக்கு இந்­திய அர­சாங்கம் கரி­சனை காட்­ட­வேண்டும் எனவும் வேண்­டுகோள் விடுத்தார்.

தமிழ் மக்கள் பேர­வையின் எழுக தமிழ் நிகழ்வு யாழ்.முற்­றவெளியில் நேற்று இடம் பெற்­ற­போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

இலங்கை அர­சாங்கம், சிங்­கள அர­சியல் வாதிகள், சர்­வ­தேச சமூகம் போன்­றவை தமிழ் மக்­க­ளு­டைய இன்­றைய நிலை­மை­களை அறிந்­து­கொள்­ள­வேண்டும். இந்த எழுச்சி மூலம் வைத்­துள்ள கோரிக்­கைகள் புதிய விடயங்கள் அல்ல. யுத்­தத்துக்கு பிற்­பாடு தமிழ் மக்கள் எவ்­வ­ளவு தூரம் துன்­பப்­பட்­டார்கள். அர­சியல் கைதிகள் விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும், சிங்கள் மக்கள் வாழாத இடங்­களில், பௌத்த மக்கள் வாழாத இடங்­களில், இரா­ணுத்­தி­னரால் பௌத்த விகாரைகள் கட்­டப்­ப­டு­வதும் அத­னோடு சிங்­களக் குடி­யேற்­றங்கள் இடம்­பெ­று­வதும் நிறுத்­தப்­பட வேண்டும்.

தமிழ் மக்­க­ளு­டைய புரா­தன இடங்­க­ளான கன்­னியா வெந்நீரூற்றும் முல்­லைத்­தீவில் நீரா­வி­ய­டிப்­பிள்­ளையார் கோவிலும் நெடுங்­கே­ணியில் வெடுக்­கு­நாறி மலை போன்ற தமிழ் மக்­களின் புரா­தன இடங்கள் எல்லாம் பௌத்த துற­வி­க­ளினால் பறி­முதல் செய்­யப்­பட்டு அங்கு புதிய புத்தர் சிலைகள், பௌத்த ஆல­யங்கள் அமைக்­கப்­ப­டு­வது மட்­டு­மன்றி சிங்­க­ளக்­கு­டி­யேற்­றங்கள் நிறு­வப்­பட்டு தமிழ் இனப்­ப­ரம்­பலை குலைக்­கின்ற நட­வ­டிக்­கைகள் மிகத் தீவி­ர­மாக இடம்­பெற்று வரு­கின்­றன.

இன்று நாங்கள் வைக்­கக்­கூ­டிய கோரிக்­கைகள் இனப்­பி­ரச்­சி­னைக்கு அப்பால் யுத்­தத்­துக்குப் பிற்­பாடு மிக­வே­க­மாக இலங்கை அர­சாங்கம் ஒரு நிகழ்ச்சி நிரலை முன்­வைத்து செயற்­பட்டு வரு­கின்­றது. வடக்கு மாகா­ணத்தில் ஆயிரம் பௌத்த விகாரைகளைக் கட்­டு­வது, சிங்­கள மக்­களை குடி­யேற்றம் செய்­வது, இவற்றைச் செய்து தமிழ் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழக்­கூ­டிய இடங்­களில் அவர்­களை சிறு­பான்­மை­யாக்கி அவர்­க­ளு­டைய அடை­யா­ளங்­களை அகற்­றி­ தமிழ் மக்கள் தேசிய இனம் என்­பதை மாற்றி அவர்­களை இல்­லா­தாக்­குகின்ற விட­யத்தை தொடர்ச்­சி­யாக மேற்­கொண்டு வரு­கின்­றார்கள்.

யுத்த காலத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் கொல்­லப்­பட்­டார்கள். ஒட்­டு­மொத்­த­மான யுத்­த­கா­லத்தில் மூன்று இலட்சம் மக்கள் கொல்­லப்­பட்­டார்கள். பல இலட்சம் சொத்­துக்கள் அழிக்­கப்­பட்­டன. புரா­தன சின்­னங்கள் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­று தொடர்ச்­சி­யாக தமி­ழி­னப்­ப­டு­கொலை இடம்­பெற்­று­வ­ரு­கின்­றது.

ஆகவே இந்தப் படு­கொ­லையில் இருந்து தமிழ் மக்கள் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். தமிழ் மண்ணை காப்­பாற்­ற­வேண்டும். தமிழ் மக்­களின் புரா­தன சின்­னங்கள் பாது­காக்­கப்­பட்டால் மாத்­தி­ரமே தமிழ் மக்கள் இந்த மண்ணில் தேசிய இன­மாக வாழ­மு­டியும். இந்த அடிப்­ப­டையில் தான் இக் கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. சிங்­கள அர­சியல் வாதி­களைப் பொறுத்­த­வ­ரையில் தற்­போது இந்த அர­சாங்கம் வந்து நான்கு வரு­டங்கள் முடிந்­துள்ள நிலையில் குறித்த கோரிக்­கைகள் ஜெனீ­வாவில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­வையே ஆகும்.

அர­சி­யல் ­கை­தி­களின் விடு­தலை, காணிகள் விடு­விப்பு, மக்கள் மீளக்­கு­டி­ய­மர்த்தல் என்­ப­வற்றை எல்லாம் செய்­வ­தாக இணங்­கி­னார்கள்.

 அவர்­களால் வாக்­கு­றுதி அளித்­தபடி  எந்த விட­யமும் நான்கு வருடம் முடிந்தும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. தொடர்ச்­சி­யாக

 நிலங்­களை கப­ளீ­கரம் செய்­தமை, ஆல­யங்­களை  அடித்து நொறுக்­கு­கின்ற செயற்­பா­டுகள் தொடர்­கின்­றன.

 இவர்­க­ளு­டைய செயற்­பா­டுகள் தமி­ழி­னத்­தையே அழிக்­கின்ற செயற்­பா­டா­கவே இடம்­பெ­று­கின்­றன.

பாரா­ளு­மன்றம் அர­சியல் அமைப்புச் சபை­யாக மாற்­றப்­பட்­டது. 83 தட­வைகள் கூடிக்­க­லைந்­தார்கள். ஆனால் பாரா­ளு­மன்­றத்தில் ஒரு இடைக்­கால அறிக்கை வந்­தது. ஆனால் அவை இன்று குப்­பைத்­தொட்­டிக்குள் போடப்­பட்­டுள்­ளன. இப்­போது ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணத்­துக்கு வேட்­பா­ளர்கள் வரு­கின்­றார்கள். சஜித் ­வ­ரு­கிறார். ரணில் விக்­கி­ர­ம­சிங்க வரு­கிறார். ஜே.வி.பி.வரு­கின்­றது.

பொது­ஜ­ன­ முன்­ன­ணியைச் சேர்ந்­த­வர்கள் வரு­கி­றார்கள். எல்­லோரும் தமிழ் மக்­க­ளுக்கு அபி­வி­ருத்தி செய்­கின்றோம் எனக் கூறு­கின்­றார்கள். ஏற்­க­னவே கம்­பரெ­லிய அபி­வி­ருத்தித் திட்டம் நடை­பெ­று­வ­தாக கூறு­கின்­றார்கள். புதிய புதிய அபி­வி­ருத்தி பற்றிக் கதைக்­கின்­றார்கள். யாழ்ப்­பாணம் வந்த சஜித் தான் ஜனா­தி­ப­தி­யாக வந்­ததும் ஆறு மாதத்­துக்குள் தமிழ் மக்­களின் பிரச்­சி­னையை தீர்த்து வைப்­ப­தாகக் கூறு­கின்றார். ஆனால் என்ன பிரச்­

சி­னையைத் தீர்த்து வைக்­கப்­போ­கிறார் என்று ஏதா­வது திட்­டங்கள் இருக்­கின்­றதா என்றால் எது­வுமே இல்லை.

ரணில் விக்­கி­ரமசிங்­க­வுக்கு இன்னும் மூன்று வருட காலம் தேவை எனக் கூறு­கின்றார். ஜே.வி.பி.யே தான் வடக்குக் கிழக்கை பிரித்­தது. நாங்கள் ஆளு­கைக்குள் வந்தால் இந்த மாகாண முறைமை வேண்டாம் உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்கு அதி­காரம் கொடுத்­தால்­போதும் என்­கி­றார்கள். இவ்­வா­றா­ன­வர்கள் தான் எம்மை நோக்கி வரு­கின்­றார்கள். ஆனால் நாங்கள் ஒன்றை மட்டும் புரிந்­து­கொள்­ள­வேண்டும். எமது மண்ணில் எமது பாது­காப்பு எமது இனத்தின் பாது­காப்பு, எமது இனத்தின் அடை­யாளம், எமது மொழி, எமது கலா­சாரம், பண்­பாடு பாது­காக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதை நான் உட்­பட அனைத்­து­தமிழ் அர­சியல் வாதி­களும் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

நாங்கள் யாரு­டனும் பேசலாம், யாரு­டனும் கருத்­துக்கள் பரி­மா­றலாம். ஆனால் எங்­க­ளு­டைய முக்­கி­ய­மான விடயம் என்­பது வட­–கி­ழக்கு இணைந்த தமி­ழர்­தா­ய­க­மாகும். ஏற்­க­னவே இது இருந்­தது. இனி மீள இணைக்­கப்­பட்டால்தான் தமிழ் மக்கள் இந்த மண்ணில் பாது­காக்­கப்­ப­டு­வார்கள்.

ஏற்­க­னவே கூறப்­பட்­டது போல் இது இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்­தின் ஒரு பகுதி. வட – கிழக்கு இணைத்தல் என்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. அந்த இணைப்பு தற்­போது ஒரு தலைப்­பட்­ச­மாக மறுக்­­கப்­பட்­டுள்­ளது. இந்த இணைப்பை மீண்டும் கொண்­டு­வ­ர­வேண்­டிய கடமை இந்­தி­யா­வுக்கு இருக்­கின்­றது. இந்­திய அர­சாங்கம் இது குறித்து சிந்­திக்­க­வேண்டும் என்று கேட்­டுக்­கொள்­கின்றேன். 

யுத்தம் நடந்­தது. யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச சக்­திகள் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு ஆத­ர­வாக இருந்­தன. எமது போராட்டம் பயங்­க­ர­வாத போராட்­ட­மாக இலங்கை அர­சாங்­கத்­தினால் சித்­த­ரிக்­கப்­பட்­டது. எமது போராட்டம் தமிழ் மக்­க­ளு­டைய பாது­காப்­புக்­கான போராட்டம். எமது போராட்டம் தமி­ழி­னத்தை அழி­வி­லி­ருந்து பாது­காக்­கின்ற போராட்டம்.

தமிழ் மக்­களின் தற்­பா­து­காப்­புக்­கான போராட்டம். ஆனால் இப் போராட்டம் கொச்­சைப்­ப­டுத்­தப்­பட்டு பயங்­க­ர­வாத போராட்­ட­மாக கொண்டு வரப்­பட்டு அது முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டது. ஆனால் இன்று ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களும் நிர்க்­க­தி­யான நிலைக்கு இலங்கை அர­சாங்­கத்­தினால் கொண்டு வரப்­பட்ட சூழலில் இருக்­கின்றோம்.

இந்த அழி­வி­லி­ருந்து தமிழ்­தே­சிய இனம் காப்­பாற்­றப்­ப­ட­வேண்டும். தமிழ் மக்கள் நிம்­ம­தியாக, சுதந்­தி­ர­மாக தமது மண்ணில் வாழ­வோண்டும். அவர்­க­ளுக்கு உரித்­தான சுதந்­திரம் கிடைத்­தா­க­வேண்டும். 

சர்­வ­தேச சமூ­கத்­துக்கு தெரியும் இலங்கை அர­சாங்கம் ஒரு இஞ்சி கூட நக­ர­மாட்­டாது என்பது. தமிழ்த்தேசிய இனத்துக்கு எதுவும் செய்யமாட்டாது.

ஆகவே சர்வதேச சமூகத்தின் உறுதியான பங்களிப்பு இந்தப் பிரச்சினைக்குத் தேவை. நிச்சயமாக கொழும்பை நம்பி நாங்கள் ஏமாந்தது மாத்திரமன்றி கொழும்பை நம்பிய பலபேர் தாங்களும் ஏமாந்துவிட்டோம் எனக்கூறுகின்றார்கள் அவ்வாறான சூழ்நிலையில் வடக்கு – கிழக்கில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியி ருக்கின்றோம். எமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தியிருக்கின்றோம். இதனை இலங்கை அரசாங்கம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஜனாதிபதி வேட்பாள ராக களம் இறங்குபவர்களுக்கு விளங்க 

வேண்டும். இந்தியாவுக்கு விளங்கவேண் டும். சர்வதேச சமூகத்துக்கு விளங்கவேண் டும் தமிழ் மக்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நிந்திக்கப்பட்டு ள்ளார்கள் என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42