ஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் : வெளியானது அதிர்ச்சி தகவல்

Published By: Digital Desk 3

17 Sep, 2019 | 01:20 PM
image

அமெரிக்காவில் ஆற்றில் நீச்சலடித்த போது நாக்லேரியா பொலேரி அமீபாவால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 10 வயது சிறுமி லில்லி மே அவண்ட்  தனது குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு பிராசோஸ் ஆற்றுப்படுகைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

லில்லி ஆற்றில் நீச்சலடித்து விளையாடிய போது நாக்லேரியா பொலேரி (Naegleria fowleri) எனும் அமீபாவால் தாக்கப்பட்டார். நல்ல நீரில் இருக்கும் இந்த வகை அமீபாக்கள் நேரடியாக மூளையை தாக்கக் கூடியவை.

இதையடுத்து அந்த சிறுமி போர்ட் வொர்த்தில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஒரு வாரமாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து லில்லி படித்து வந்த பாடசாலை, தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளது. லில்லிக்கு இரங்கல் தெரிவித்துள்ள அப்பாடசாலை நிர்வாகம், 'லில்லியின் இழப்பு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக’ தெரிவித்துள்ளது. லில்லி ஒரு புத்திசாலி மாணவி மட்டுமல்லாமல், அனைவரிடமும் நட்பாக பழகக் கூடியவர் என்றும் பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லில்லியின் மரணத்திற்கு காரணமான கொடிய வகை அமீபா, மூக்கின் வழியாக நமது உடலுக்குள் நுழையக்கூடியது. மூக்கு வழியாக உள்ளே நுழைந்து, ஒருவரின் மூளை திசுக்களை தாக்கி அழிக்கும்.

அமெரிக்காவில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும், 34 பேர் இந்த வகை அமீபா தாக்குதலால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாஜக கூட்டணியில் இணைந்தது பாமக…. தொகுதி...

2024-03-19 15:15:41
news-image

ஹமாஸின் 3 ஆவது உயர் தலைவர்...

2024-03-19 13:25:56
news-image

பங்களாதேஸ், பாக்கிஸ்தான், இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும்...

2024-03-19 14:52:25
news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47