இந்தோனேஷிய காட்டுத் தீ : 200 பேர் கைது !

Published By: Vishnu

17 Sep, 2019 | 01:56 PM
image

இந்தோனேஷியாவின் மழைக் காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயையடுத்து சுமார் 200 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இந்தக் காட்டுத் தீ விபத்து விவசாயத்திற்காக காடுகளை சட்டவிரோதமாக எரிப்பதனால் ஏற்படுகிறது. தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக இந்தோனேஷிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷியாவில் மழைக் காடுகள் அமைந்துள்ள சுமத்ரா மற்றும் போர்னியோ போன்ற பகுதிகளிலேயே கடந்த சில நாட்களாக இந்த கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது. 

இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான காற்று மாசு மற்றும் உடல்நலம் பாதிப்பு போன்றவை ஏற்படும் சூழல் உருவானது.

இதனைத் தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்க சுமார் 9,000 இராணுவ வீரர்களை இந்தோனேசிய அரசு அனுப்பியது. சுமார் 239 மில்லியன் தண்ணீர் இதுவரை காட்டுத் தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்டன. 5,062 தீ ஏற்படும் பகுதிகள் கண்டறிப்பட்டன என்றும் இந்தோனேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை காட்டுத் தீ தொடர்பாக மலேசியாவும், இந்தோனேசியாவும் மாறிமாறி ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10