இன்று கொழும்பு வரு­கிறார் சீனாவின் உயர்­மட்ட அதி­காரி

Published By: Vishnu

17 Sep, 2019 | 10:41 AM
image

சீன கம்­யூனிஸ்ட் கட்­சியின் உயர்­மட்ட அதி­கா­ரி­யான சென் மின்  இரண்டு நாட்கள் பய­ண­மாக இன்று கொழும்பு வர­வுள்ளார். இலங்­கைக்கு வரும் சீன  கம்­யூனிஸ்ட் கட்­சியின் உயர்­மட்ட அதி­கா­ரி­யான சென் மின்,இலங்கை அர­சாங்­கத்தின் மூத்த மற்றும் எதிர்க்­கட்சி தலை­வர்­க­ளையும் சந்­தித்துப் பேச்சு நடத்­த­வுள்ளார்.

சீன ஜனா­தி­பதி ஷி ஜின்­பிங்கின் நெருங்­கிய சகா­வான சென் மின், சீனாவில் வளர்ந்து வரும் ஒரு நட்­சத்­தி­ர­மாக பார்க்­கப்­ப­டு­கிறார்.

இவர் சீன கம்­யூனிஸ்ட் கட்­சியின் சோங்கிங் செய­ல­ராக 2017இல் நிய­மிக்­கப்­பட்டார். பின்னர் 19 ஆவது கட்சி மாநாட்டில், சீன கம்­யூனிஸ்ட் கட்­சியின் முடி­வு­களை எடுக்கும் உயர் சபை­யான, 25 பேர் கொண்ட  அர­சியல் உயர்­பீ­டத்தின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ராக தெரிவு செய்­யப்­பட்டார்.

இவர் சீன கம்­யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்