வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு, மலை­ய­க வீதிகள் மூழ்­கின 

Published By: Vishnu

17 Sep, 2019 | 10:28 AM
image

(எம்.மனோ­சித்ரா)

நாட்டில் கடந்த சில தினங்­க­ளாக நிலவும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நூற்­றுக்­க­ணக்­கானோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் தெரி­வித்­துள்­ளது.  

மேலும்  சில தினங்­க­ளா­கவே நாட்டின் பல பகு­தி­க­ளிலும்  தொடரும் கடும்  மழை கார­ண­மாக  பல பிர­தே­சங்களின்  இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது.  

இதே­வேளை தென் மேல் பருவ பெயர்ச்­சியின் கார­ண­மாக நாட்டில் நிலவும் சீரற்ற கால­நிலை எதிர்­வரும் சில தினங்­க­ளுக்கு தொடரும் என்றும் இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­க­ளத்தின் வானிலை அதி­காரி மொஹமட் சாலிஹின் தெரி­வித்தார். அத்­தோடு நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 192 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது.  

150 மில்லி மீற்­றரை விட அதிக மழை வீழ்ச்சி

நுவ­ரெ­லியா மாவட்­டத்தின் அல்டன் பிர­தே­சத்­தி­லேயே நேற்று திங்­கட்­கி­ழமை மதியம் வரை அதி கூடிய மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ள­தாக இலங்கை வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. இப்­பி­ர­தே­சத்தில் 192 மில்லி மீற்றர் மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது.      

மேலும் நாட்டின் மேல், சப்­ர­க­முவ, தென், மத்­திய , வடக்கு மற்றும் வடமேல் ஆகிய மாகா­ணங்­களில் 100 - 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதி­வாகக் கூடும். ஏனைய பிர­தே­சங்­களில் 75 மில்லி மீற்றர் மழை பதி­வாகும் அதே வேளை பிற்­பகல் 2 மணிக்கு பின்னர் இடி­யுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் குறிப்­பிட்­டுள்­ளது. 

காற்றின் வேகம்

நாட்டின் பெரும்­பா­லான பிர­தே­சங்­க­ளிலும், அம்­பாந்­தோட்­டை­யி­லி­ருந்து பொத்­துவில் மற்றும், புத்­த­ளத்­தி­லி­ருந்து காங்­கே­சன்­துறை வழி­யாக மன்னார்   ஊடான கடற்­பி­ர­தே­சங்­களில் காற்றின் வேக­மா­னது மணித்­தி­யா­லத்­திற்கு 70 - 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு பலத்த காற்று வீசும் சந்­தர்ப்­பங்­களில் கடல் சற்று கொந்­த­ழி­புடன் காணப்­படும் என்­பதால் மீன­வர்கள் மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்டும் என்றும் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது. 

ஆற்று நீர்­மட்டம்

களனி கங்கை, களு­கங்கை மற்றும் அத்­த­னு­கல ஆகி­ய­வற்றின் நீர் மட்டம் அதி­க­ரிக்கக் கூடும் என்று எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இவற்றில் நேற்று திங்­கட்­கி­ழமை மதியம் வரைவில் களு கங்­னையின் நீர் மட்டம் 5.88 மிற்­ற­ராகக் காணப்­பட்­டது. 

மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை

தொடர்ச்­சி­யாக மழை­யு­ட­னான கால­நிலை தொட­ரு­மானால் சில மாவட்­டங்­களில் மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை காணப்­ப­டு­வ­தாக தேசிய கட்­டட ஆராய்சி நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. அதற்­க­மைய இரத்­தி­ன­புரி, நுவ­ரெ­லியா, கேகாலை மற்றும் களுத்­துறை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கே இவ்­வாறு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

சிவப்பு எச்­ச­ரிக்கை

இவற்றில் களுத்­துறை மாவட்­டத்தின் புலத்­சிங்­கள பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பிர­தே­சத்­திற்கு மண்­ச­ரிவு தொடர்பில் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

இரத்­தி­ன­புரி

இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் கிரி­யெல்ல, கலா­வான மற்றும் இரத்­தி­ன­புரி ஆகிய பிர­தே­சங்­களில் மண்­ச­ரிவு தொடர்பில் அவ­தானம் செலுத்­து­மாறும், எஹெ­லிய கொட பிர­தே­சத்தில் கூடுதல் கவனம் செலுத்­து­மாறும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. 

நுவ­ரெ­லியா 

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் அம்­ப­க­முவ பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பிர­தேங்­களில் மண்­ச­ரிவு தொடர்பில் அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

கேகாலை 

கேகாலை மாவட்­டத்தில் வரா­கா­பொல மற்றும் தெஹி­யோ­விட்ட ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு மண்­ச­ரிவு அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

களுத்­துறை

களுத்­துறை மாவட்­டத்தில் வலல்­ல­விட்ட, தொடங்­கொட, இங்­கி­ரிய, மத்­து­கம ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு மண்­ச­ரிவு அறி­வு­றுத்­தலும், புலத்­சிங்­கள பிர­தே­சத்­திற்கு சிவப்பு எச்­ச­ரிக்­கையும் விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

பாதிப்­புக்கள்

கடும் மழை மற்றும் பலத்த காற்றின் கார­ண­மாக கண்டி, கேகாலை, அம்­பாந்­தோட்டை, காலி, மட்­டக்­க­ளப்பு மற்றும் அம்­பாறை ஆகிய மாவட்­டங்­க­ளி­லேயே அதி­க­ள­வான மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. 

கண்டி

கண்டி மாவட்­டத்தில் தும்­பன, உட­ப­லாத்த, உடு­நு­வர மற்றும் ஹரிஸ்­பத்­துவ ஆகிய பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பிர­தே­சங்­களில் பலத்த காற்­றினால் 8 குடும்­பங்­களைச் சேர்ந்த 24 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு, இங்கு 8 குடி­யி­ருப்­புக்கள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ளன. 

கேகாலை

கேகாலை மாவட்­டத்தில் தெஹி­யோ­விட்ட மற்றும் மாவ­னெல்ல ஆகிய பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட பிர­தே­சங்­களில் கன மழை மற்றும் மரம் முறிந்து வீழ்ந்­ததால் இரு குடும்­பங்­களைச் சேர்ந்த 6 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 

அம்­பாந்­தோட்டை

அம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் அம்­பாந்­தோட்டை, திஸ்­ஸ­ம­ஹா­ராம மற்றும் லுனு­கம்­வெ­ஹர ஆகிய பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு உட்­பட்ட பிர­தே­சங்­களில் திடீர் வெள்­ளத்­தினால் 69 குடும்­பங்­களைச் சேர்ந்த 288 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 

காலி

காலியில் நாகொட பிர­தேச செய­ல­கத்தில் மரம் முறிந்து வீழ்ந்­ததில் குடி­யி­ருப்­பொன்று சேத­மா­னதில் ஒரு குடும்­பத்தைச் சேர்ந்த மூவர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 

மட்­டக்­க­ளப்பு

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஏறா­வூர்­பற்று, மன்­முனை மேற்கு மற்றும் மன்­முனை தென்­மேற்கு ஆகிய பிர­தே­சங்­களில் பலத்த காற்றின் கார­ண­மாக 19 குடும்­பங்­களைச் சேர்ந்த 73 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தோடு, 19 வீடுகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ளன. 

அம்­பாறை

அம்­பாறை மாவட்­டத்தில் சம்­மாந்­துறை, அட்­டா­ளைச்­சேனை, சாய்ந்­த­ம­ருது, தமன மற்றும் கல்­முனை ஆகிய பிர­தே­சங்­களில் அதிக காற்­றினால் 25 குடும்­பங்­களைச் சேர்ந்த 183 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­தோடு சுமார் 25 குடி­யி­ருப்­புக்­களும் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­துள்­ளன. 

கொழும்பில் போக்­கு­வ­ரத்து பாதிப்பு

கொழும்பு - நவ­லோக்க சுற்றுவட்டத்திலிருந்து புறக்கோட்டை நோக்கி உள்ள பிரதான வீதியில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமர் வீதி மற்றும் பாபர் வீதி சந்தி முழுவதும் நேற்று திங்கட்கிழமை காலை நீரில் மூழ்கியமையால் குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது. 

இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்திருந்தனர். 

அதற்கமைய வத்தளை பகுதியிலிருந்து வரும் வாகனங்களை மட்டக்குளி மற்றும் மோதர பகுதியில் பிரவேசித்து கொழும்பு கோட்டையை சென்றடையுமாறும் , பேலியகொட பேஸ்லைன் வீதியை பயன்படுத்தி பொரள்ளை நோக்கி சென்று தொடர்ந்தும் செல்ல முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04