மர்மக்கும்பல் தாக்குதல் : ஐவர் படுகாயம், சொத்துக்களுக்கும் சேதம் 

Published By: Digital Desk 4

16 Sep, 2019 | 11:30 AM
image

யாழ்ப்பாணத்தில் இரு வேறு இடங்களில் மர்மக்குழுவின் தாக்குதல்களினால் ஐந்து பேர் படுகாயமடைந்ததுடன் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் முகங்களை மூடியவாறு சென்ற ஆறுபேர் கொண்ட கும்பல் வீட்டிலிருந்து பொருட்களை அடித்து நொருக்கியது. அத்துடன் வீட்டிலிருந்த வயோதிபத்தம்பதியினரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். 

இதனால் இருவரும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த ரவீந்திரன் வயது 70 செல்வராசாத்தி வயது 65 ஆகியோரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்வம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியிலும் மர்மக்குழு ஒன்று வீடொன்றினை அடித்து நொருக்கியதுடன் வீட்டியிலிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர். இந்தச் சம்வம் அரியாலை ஆனந்தம் வடலி வீதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 

இரு மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஆறுபேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. முகங்களை மூடியவாறு வந்த மர்மக்குழு வாள் மற்றும் இரும்புக் கம்பிகளால் வீட்டியிலிருந்தவர்களை தாக்கியுள்ளது. 

இதனால் வீட்டியிலிருந்த மூன்றுபேர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

இந்தச் சம்வம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50