"நிஜமென நினைத்து தூக்கத்தில் நான் அதை செய்துவிட்டேன்": எக்ஸ் ரே அறிக்கையால் அதிர்ந்துபோன இளம் யுவதி

Published By: J.G.Stephan

15 Sep, 2019 | 04:40 PM
image

அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர், ஆழ்ந்த தூக்கத்தின் கனவில்,  தனது நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கியதால், அவர் மிகுந்த வேதனையடைந்துள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், 29 வயதான ஜீனா என்பவர், இவருக்கு நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன்னர் நடந்தேறியுள்ளது.

இந்நிலையில் இவர் கடந்த செவ்வாய் கிழமை இரவு வீட்டில் வழக்கம் போல் தூங்கியுள்ளார். அப்போது இவர் சற்று மோசமாக கனவு கண்டதாகவும்(கெட்டவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு தன்னுடைய காதலன் மோதிரத்தை விழுங்கும் படி கூறியுள்ளார்), அப்போது நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கியது போன்றும் கனவு கண்டுள்ளார்.

ஆனால் மறுநாள் காலை எழுந்த போது, அவருடைய கையில் மோதிரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உண்மையிலே மோதிரத்தை விழுங்கிவிட்டோம் என்பதை உணர்ந்துள்ளார். அதன் பின் இது குறித்து வீட்டில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார்.

முதலில் இதைக் கேட்டு அவர்கள் சிரித்துள்ளனர். அதன் பின் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்றோம். மோதிரம் என் வயிற்றில் இருக்கிறது என்பது எனக்கு தெரியும்.

அப்போது வைத்தியர்கள் எக்ஸ் ரே எடுக்க வேண்டும் என்று கூறினர். அதன் பின் மோதிரம் குடலில் சிக்கியிருப்பதை கண்டவுடன், எண்டோஸ்கோப்பி மூலம் எடுத்துவிடலாம், எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்தனர்.

இருப்பினும் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், என்று கையெழுத்து வாங்கினர். அப்போது நான் அழுதுவிட்டேன். இதையடுத்து நல்ல முறையில் மோதிரம் வெளியில் எடுக்கப்பட்டது.

மோதிரத்தை நான் முதலில் என்னுடைய காதலன் மற்றும் வருங்கால கணவர் பாபியிடம் கேட்டேன், முதலில் இல்லை என்றார், அதன் பின் அவர் கொடுத்தார். இதை நான் மீண்டும் விழுங்கமாட்டேன் என்று தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் உருக்கமுடன் பதிவேற்றம் செய்துள்ளார்.

அவர் விழுங்கிய மோதிரம், வைர மோதிரம் என்று அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24
news-image

திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை: தூத்துக்குடியில்...

2024-03-16 12:37:34