சஜித்தை ஆதரிப்பதாக மைத்திரி கூறவேயில்லை: வீர­கு­மார திஸா­நா­யக்க செவ்வி

Published By: J.G.Stephan

15 Sep, 2019 | 12:22 PM
image

ஸ்ரீலங்கா சுதந்­தி­ர­கட்சி சஜித் அணி­யுடன் இணை­வது பற்­றியோ பொது­வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­ஸவை கள­மி­றக்­கு­வது பற்­றியோ எந்­த­வொரு சந்­தர்ப்­ப­திலும் சஜித் பிரே­ம­தா­ஸ­வு­டனோ அல்­லது அவர் தரப்­பி­ன­ரு­டனோ எந்­த­வி­த­மான கலந்­து­ரை­யா­டல்­களும் நடை­பெ­றவே இல்லை.

அதே­நேரம், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­லவும் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சஜித்தை ஆத­ரிப்­ப­தா­கவும் கூறவே இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சியின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வீர­கு­மார திஸா­நா­யக்க வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் இவ்­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­ வ­டிவம் வரு­மாறு, 

கேள்வி:- பொது­ஜன பெர­மு­ன­வு­ட­னான பேச்­சு­வார்த்தை எந்­தக்­கட்­டத்­தினை அடைந்­துள்­ளது?

பதில்:- பொது­ஜன பெர­மு­ன­வு­ட­னான பேச்­சு­வார்த்தை முன்­னேற்­ற­க­ர­மா­ன­தா­கவே நடை­பெற்று வரு­கின்­றது. எமக்கு இடையில் கொள்கை ரீதி­யான பிரச்­சி­னைகள் இல்லை.  ஆகையால் நாம் பரந்துபட்ட கூட்­ட­ணியில் இணை­வ­தற்கு அது­வொரு தடை­யாக இல்லை. கூட்­டணி செயற்­றிட்­டங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்று தற்­போது சின்னம் சம்­பந்­த­மான பேச்­சுக்­களை ஆரம்­பித்­துள்ளோம். இரண்டு கட்­சி­க­ளுக்கும் பொது­வா­ன­தொரு சின்­னத்­தினை தெரிவு செய்­வது தொடர்­பாக ஆராய்ந்து வரு­கின்றோம்.

கேள்வி:- பொது­ஜன பெர­மு­ன­வா­னது தாம­ரை­மொட்டு சின்­னத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றத் ­தேர்­தலில் கள­மி­றங்கி வெற்­றி­யையும் கண்­டுள்ள நிலையில் அச்­சின்­னத்­தினை கைவி­டு­வ­தற்கு முன்­வ­ரு­வார்­களா? 

பதில்:- கூட்­ட­ணி­யொன்று பரந்து பட்­ட­ளவில் ஏற்­ப­டுத்­து­கின்­ற­போது பொதுச்­சின்னம் அவ­சி­ய­மா­கின்­றது. இது புதிய விட­ய­மல்ல. கடந்­த­ கா­லத்தில் இவ்­வா­றான இணக்­கப்­பா­டுகள் ஏற்­பட்ட அனு­பவங்கள் இரு­ த­ரப்­பி­ன­ருக்­குமே இருக்­கின்­றன. 

கேள்வி:- பொது­ஜ­ன ­பெ­ர­மு­னவின் முக்­கி­யஸ்­தர்கள் தாம­ரை­மொட்­டு சின்­னத்­தி­லேயே அடுத்­து­வரும் தேர்­தல்­க­ளுக்கு முகங்­கொ­டுக்­க­வுள்­ள­தாக உறு­தி­யாக கூறி­யுள்­ளார்­களே?

பதில்:- தற்­போது பேச்­சு­வார்த்தை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அது நிறை­வ­டை­வ­தற்கு முன்­ன­தாக எமது நிலைப்­பாட்­டினை கூற­மு­டி­யா­தல்­லவா? 

கேள்வி:- வேட்­பாளர் தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­ற­னவா?

பதில்:- வேட்­பாளர் விடயம் சம்­பந்­த­மாக நாம் எந்­த­வொரு கருத்­துப் ­ப­ரி­மாற்­றத்­தி­னையும் மேற்­கொண்­டி­ருக்­க­வில்லை.

கேள்வி:- பொது­ஜ­ன­ பெ­ர­முன ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவை அறி­வித்து விட்ட நிலையில் நீங்கள் கூட்­ட­ணியில் இணை­கின்­ற­போது அவ­ரையே வேட்­பா­ள­ராக ஏற்­றுக்­கொள்­வீர்­களா? 

பதில்:- பொது­ஜ­ன ­பெ­ர­முன தனது தரப்பு வேட்­பா­ளரை அறி­வித்­துள்­ளது. நாம் பரந்­து­பட்ட கூட்­ட­ணிக்­கான அடிப்­படை விட­யங்­களை தற்­போது பேசிக்­கொண்­டி­ருக்­கின்றோம். அவை நிறை­வ­டை­கின்­ற­போது இத்­த­கைய பிர­தான விட­யங்கள் பற்றி கவனம் செலுத்­துவோம். 

கேள்வி:- ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையே ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக மீண்டும் கள­மி­றக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருக்­கின்ற நிலையில் பொது­ஜ­ன­ பெ­ர­மு­ன­வு­ட­னான பேச்­சு­வார்த்தை வெற்­றி­ய­ளிக்கும் என்று எவ்­வாறு கருத முடியும்? 

பதில்:- சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­தி­ய­க் குழு ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கள­மி­றங்க வேண்டும் என்று தீர்­மானம் எடுத்­துள்­ளது. அதே­போன்று சுதந்­தி­ரக்­கட்­சியின் பாரா­ளு­மன்­றக்­ கு­ழுவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­லவே மீண்டும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்க வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளது. பொது­ஜ­ன ­பெ­ர­மு­ன­வு­ட­னான பேச்­சு­வார்த்­தை­களின் அடிப்­ப­டையில் இந்த முடி­வுகள் தொடர்­பாக மீண்டும் மறு­ப­ரி­சீ­ல­னைகள் இடம்­பெ­று­வ­தற்கு வாய்ப்­புக்கள் உள்­ளன.

கேள்வி:- பொது­ஜ­ன­ பெ­ர­மு­ன­வுடன் பேச்­சுக்­களை நடத்­து­கின்ற ஏக காலத்தில் சுதந்­தி­ரக்­கட்சி ஜனா­தி­பதி வேட்­ப­ாளரை நிறுத்தும் என்று தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தவி­சா­ள­ருக்கும் அறி­வித்­தி­ருக்­கின்­றீர்­களே?

பதில்:- ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பா­ளர்­களை நிறுத்தும் கட்­சிகள் தமது அறி­விப்­புக்­களை செய்­யு­மாறு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தவி­சாளர் அறி­வித்­தி­ருந்தார். அதற்­க­மை­வா­கவே நாம் அறி­விப்­பினை செய்­துள்ளோம். பொது­ஜ­ன ­பெ­ர­மு­ன­வுடன் முன்­னெ­டுக்­கப்­படும் பேச்­சுக்கள் தோல்­வி­ய­டைந்தால் சுதந்­தி­ரக்­கட்சி தனது வேட்­பா­ளரை கள­மி­றக்கும். சுதந்­தி­ரக்­கட்சி தனித்து போட்­டி­யி­டவும் தயா­ரா­கவே உள்­ளது. சுதந்­தி­ரக்­கட்சி ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் என்ற அறி­விப்பால் பேச்­சு­வார்த்­தைகள் பாதிக்­கப்­ப­டாது.  

கேள்வி:- ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டத்தில் மீண்டும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக  கள­மி­றங்­கு­மாறு கோரிக்கை விடுத்­த­போது அவ­ரு­டைய பிர­தி­ப­லிப்பு எவ்­வாறு இருந்­தது? 

பதில்:- அவர் அதனை நிரா­க­ரிக்­க ­வில்லை. எனினும், ஜனா­தி­பதி பத­வி­யை­வி­டவும் சுதந்­திரக் கட்சி தலை­மையில் சிறந்­த­தொரு அர­சாங்­கத்­தினை அமைக்­க­வேண்டும் என்­ப­தி­லேயே உறு­தி­யாக இருக்க வேண்­டு­மென அவர் கரு­து­கின்றார். 

கேள்வி:- தேசிய பட்­டியல் மூலம் நிய­மிக்­கப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக மட்டும் ஒழுக்­காற்று நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க தீர்­மா­னித்­துள்­ள­மைக்­கான காரணம் என்ன? 

பதில்:- தேசிய பட்­டியல் உறுப்­பு­ரி­மை­யா­னது கட்­சிக்­கு­ரி­ய­தொன்­றாகும். அதன் ஊடாக நிய­மிக்­கப்­பட்ட எஸ்.பி.திஸா­நா­யக்க, பௌசி, டிலான் பெரேரா, லக் ஷ்மன் யாப்பா, விஜித் விஜி­த­முனி ஆகியோர் வேறு கட்­சி­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வதால் முதற்­கட்­ட­மாக அவர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு நாம் தீர்­மா­னித்து அதற்­கான எழுத்­து­மூல ஆவ­ணத்­தி­னையும் அவர்­க­ளுக்கு அனுப்­பி­யுள்ளோம். அவர்­களின் பதிலை அடுத்து, அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்போம். 

கேள்வி:- மேற்­படி உறுப்­பி­னர்­க­ளுக்கு முன்­ன­தா­கவே எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ உள்­ளிட்­ட­வர்கள் பொது­ஜ­ன­ பெ­ர­மு­னவின் உறுப்­பு­ரி­மையை பெற்­றுள்ள நிலையில் அவர்­க­ளுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­பது பற்றி தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை?

பதில்:- இது நியா­ய­மா­ன­வொரு கேள்­வி­யா­கத்தான் இருக்­கின்­றது. அடுத்து தேர்­தல்கள் இடம்­பெ­ற­வுள்­ளன. அத் ­த­ரப்­பி­ன­ருடன் கூட்­டணி தொடர்­பிலும் பேச்­சுக்­களை ஆரம்­பித்­துள்ளோம். ஆகவே இப்­பி­ரச்­சி­னையை பூத­ாக­ர­மாக்கி நீதி­மன்­றத்­திற்கு செல்­வதை விடவும் இரு­த­ரப்பு இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் செயற்­ப­டு­வ­தென தீர்­மா­னித்தோம். எனினும் தேசிய பட்­டியல் உறுப்­பு­ரிமை தொடர்பில் அவ்­வாறு செயற்­பட முடி­யாது என்றும் தீர்­மா­னித்­தி­ருந்தோம். மேலும் எமது கட்­சி­யி­லி­ருந்து வேறு கட்­சி­களில் இணைந்த அனை­வ­ரி­னதும் உறுப்­பு­ரி­மைகள் நீக்­கப்­பட்­டுள்­ளன. 

கேள்வி:- 19ஆவது திருத்­தச்­சட்டம் சம்­பந்­த­மாக மீண்டும் உயர்­நீ­தி­மன்­றத்தில் வியாக்­கி­யானம் கோரு­வ­தற்கு ஜனா­தி­பதி தயா­ரா­கி­வ­ரு­வ­தாக கூறப்­ப­டு­கின்­றதே? 

பதில்:- அவ்­வி­டயம் சம்­பந்­த­மாக மத்­தி­ய­கு­ழுவில் எவ்­வி­த­மான பேச்­சுக்­களும் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை. ஏற்­க­னவே ஜனா­தி­பதி தனது பத­விக்­காலம் தொடர்பில் உயர்­நீ­தி­மன்­றத்­தினை நாடி­யி­ருந்தார். ஆகவே மீண்டும் அதே விட­யத்­திற்­காக செல்­வாரா என்று நான் கரு­த­வில்லை. இது எனது தனிப்­பட்ட கருத்­தாகும்.

கேள்வி:- அர­சி­ய­ல­மைப்பில் 19ஆவது திருத்­தச்­சட்டம் உள்­வாங்­கப்­பட்­ட­மையால் மூன்று அதி­கா­ர­மை­யங்கள் தோற்­று­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக ஜனா­தி­பதி பகி­ரங்­க­மா­கவே கூறி­யுள்ளார். இந்­நி­லையில் அடுத்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்­ன­தாக அதில் மாற்­றங்­களை செய்­வ­தற்கு பிர­தமர், எதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆகி­யோ­ருடன் கலந்­து­ரை­யா­டல்­களை ஆரம்­பித்­துள்­ளாரா? 

பதில்:- அவ்­வா­றான கலந்­து­ரை­யா­டல்கள் எவையும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் நாம் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை மற்றும் 19ஆவது திருத்­தச்­சட்டம் சம்­பந்­த­மாக மத்­திய குழுவில் தீர்­மா­னங்­களை எடுத்­துள்ளோம். குறிப்­பாக நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­பட வேண்டும். அத்­துடன் மூன்று அதி­கார மையங்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­மையால் செயற்­பாட்டு ரீதி­யான சவால்கள் ஏற்­பட்­டுள்­ளன. மோதல் நிலை­மை­களும் ஏற்­ப­டு­கின்­றன. குறிப்­பாக சபா­நா­ய­க­ருக்கு ஆணைக்­கு­ழுக்கள் தொடர்­பான அதி­காரம், பிர­த­ம­ருக்­கான அதி­கா­ரங்கள் சம்­பந்­த­மாக கவனம் செலுத்­தி­யுள்ளோம். எதிர்­கா­லத்தில் இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் வகை­யிலும் நாட்­டினை பிள­வ­டையச் செய்­யாத நடை­மு­றைச்­சாத்­தி­ய­மான அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும். அவ்­வாறு உரு­வாக்­கப்­ப­டு­கின்­ற­போது அதற்கு நாம் ஆத­ர­வ­ளிப்போம் என்ற நிலைப்­பாட்டில் உள்ளோம். மேலும் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்கள் மூலம் இப்­பி­ரச்­சி­னைக்கு முற்­றுப்­புள்ளி வைக்க முடி­யாது என்­ப­திலும் உறு­தி­யாக இருக்­கின்றோம். 

கேள்வி:- அடுத்த ஆட்­சியில் பிர­த­மரே அதி­காரம் மிக்­க­வ­ராக இருப்பார் என்­பதால் சரி­யான பிர­த­மரை மக்கள் தெரிவு செய்­ய­வேண்டும் என்று ஜனா­தி­பதி மைத்­திரி பகி­ரங்­க­மாக கூறி­யுள்ள நிலையில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக நீக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளனவா? 

பதில்:- நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­திக்­கான அதி­கா­ரங்­களில் 19ஆவது திருத்­தச்­சட்­டத்தின் ஊடாக அதி­க­பட்­ச­மான அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன. 19ஆவது திருத்­தச்­சட்­ட­மூலம் சம்­பந்­த­மாக உயர்­நீ­தி­மன்றம் வழங்­கிய தீர்ப்பில் ஜனா­தி­ப­திக்­கான சில  நிறை­வேற்று அதி­கா­ரங்­களை நீக்­கு­வ­தற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சி­ய­மெனக் குறிப்­பிட்­டி­ருந்­தது. அந்த விட­யங்கள் நீக்­கப்­பட்ட பின்­னரே 19ஆவது திருத்­தச்­சட்ட மூலம் நிறை­வேற்­றப்­பட்­டது. அத­ன­டிப்­ப­டையில் நிறை­வேற்று அதி­கா­ரங்­களை முழு­மை­யாக நீக்­கு­வ­தாயின் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்று நடத்­தப்­பட வேண்டும். தற்­போ­தைய அர­சியல் சூழலில் அது சாத்­தி­ய­மில்லை என்றே கரு­து­கின்றேன். 

கேள்வி:- 19ஆவது திருத்­தச்­சட்டம் நிறை­வேற்­றப்­பட்­ட­போது உங்­க­ளு­டைய கட்­சி­யி­னரும் ஆத­ர­வாக செயற்­பட்­டி­ருந்­தீர்கள். மத்­தி­ய­குழு, பார­ாளு­மன்றக் குழுவில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­திற்கு அமை­வா­கவே அவ்­வாறு செயற்­பட்­டி­ருந்­த­தா­கவும் கூறு­கின்­றீர்கள். அவ்­வாறு கட்­சி­யினுள் கலந்­து­ரை­யா­டப்­பட்ட சந்­தர்ப்­பங்­களில் ஜனா­தி­ப­தியோ அல்­லது உங்­க­ளது கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களோ 19ஆவது திருத்­தச்­சட்­டத்தில் தற்­போது நீங்கள் கூறும் குறை­பா­டு­களை கண்­ட­றிந்­தி­ருக்­க­வில்­லையா?

பதில்:- ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்­ட­போது நிறை­வேற்று அதி­கா­ரங்­களை குறைப்­பதாக கூறி­யி­ருந்தார். அத்­துடன் சுயா­தீன கட்­ட­மைப்­புக்­க­ளையும் உரு­வாக்க வேண்­டி­யி­ருந்­தது. ஜன­நா­யக ஆட்­சி­மு­றை­மையை ஏற்­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­தது. 19ஆவது திருத்­தச்­சட்­டத்தில் இந்த விட­யங்கள் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தன. 

ஆனால், அர­சி­ய­லுக்காக ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் இலக்கு வைக்­கப்­பட்டு பிர­த­ம­ருக்கு அதி­கா­ரங்கள் வலுப்­ப­டுத்­தப்­பட்­டன என்­ப­தையும் நாம் கூறி­யி­ருந்தோம். எனினும் அச்­சட்டம் நடை­மு­றை­ரீ­தி­யாக வரு­கின்­ற­போது மூன்று அதி­கார மையங்­களை உரு­வாக்­கி­ய­தோடு மோதல் நிலை­மை­க­ளையும் தோற்­று­வித்­துள்­ள­மையை அனு­ப­வ­ரீ­தி­யாக தற்­போதே உணர்­கின்றோம். ஆகவே அர­சி­யலை விடுத்து நாட்­டுக்காக இந்த சட்­டத்­தினை நீக்க வேண்டும் என்­ப­தையே நாம் குறிப்­பிட்டு வரு­கின்றோம். இந்த நிலை­மைகள் நீடித்தால் வினைத்­தி­ற­னான அர­சாங்­கத்­தினை முன்­னெ­டுக்க முடி­யாத நிலை­மையே தொடரும். ஆகவே அவ்­வா­றா­ன 

­தொரு நிலைமை தொடர்ந்து நீடித்தால் அது நாட்­டினை பின்­னோக்­கியே நகர்த்திச் செல்லும். 

கேள்வி:- இடை­வெ­ளிக்கு பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர ­நா­யக்க மீண்டும் கட்­சியின் செயற்­பா­டு­களில் பங்­கெ­டுத்­துள்ள நிலையில் அடுத்­து­வரும் காலத்தில் அவ­ரு­டைய வகி­பாகம் என்­ன­வாக இருக்­கப்­போ­கின்­றது? 

பதில்:- அவர் கட்­சியின் போச­க­ரா­கவே உள்ளார். அண்­மையில் எமது தலை­மை­ய­கத்­திற்கு வருகை தந்­தி­ருந்­த­தோடு 68ஆவது தேசிய மாநாட்­டிலும் பங்­கெ­டுத்­தி­ருந்தார். அத­னைத்­தொ­டர்ந்து மத்­தி­ய­குழுக் கூட்­டத்­திலும், இறு­தி­யாக நடை­பெற்ற நிறை­வேற்று சபைக் குழுக் கூட்­டத்­திலும் பங்­கெ­டுத்­தி­ருந்தார். அவர் மீண்டும் கட்­சியின் செயற்­பா­டு­களில் பங்­கெ­டுத்­துள்ள நிலையில் தொடர்ந்தும் கட்­சியை முன்­னோக்கி கொண்டு செல்­வதில் அனை­வ­ரு­டனும் இணைந்து பணி­யாற்­றுவார் என்றே கரு­து­கின்றேன். 

கேள்வி:- அவ­ருக்கும் (சந்­தி­ரிகா)கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இடை­யி­லான உற­வு­நி­லை­மைகள் எவ்­வா­றி­ருக்­கின்­றன?

பதில்:- இரு­வ­ருக்கும் இடையில் எவ்­வி­த­மான பிரச்­சி­னை­களும் இல்லை. இரு­வரும் சுமு­க­மான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு வரு­கின்­றார்கள். இரு­வரும் இணைந்து கட்­சியை வலு­வாக்கும் செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்­ற­போது அது மிகப்­பெரும் நன்­மை­யான விளை­வு­க­ளையே ஏற்­ப­டுத்தும். 

கேள்வி:- இலங்கை மத்­திய வங்கி ஊழல் மோச­டிகள் மற்றும் மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் நடை­பெற்ற சட்­ட­வி­ரோத விட­யங்கள் சம்­பந்­த­மான விசா­ர­ணைகள், ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கை­களின் பிர­காரம் குறிப்­பிட்ட காலத்­திற்கு பின்னர் ஜனா­தி­பதி முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களின் பின்­ன­ணியில் அர­சியல் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­படும் விமர்­ச­னத்­தினை எவ்­வாறு பார்­க்கின்­றீர்கள்?

பதில்:- 2015இல் புதிய அர­சாங்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­போது இந்த பிரச்­சினை கோப் குழுவின் முன்­னி­லையில் வந்­தது. அச்­ச­ம­யத்தில் நானும் குழுவின் அங்­கத்­த­வ­ராக இருந்தேன். அந்த விசா­ர­ணைகள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்த சம­யத்தில் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவை அமைத்தார். ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணை­களின் பிர­காரம் நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு ஒரு தரப்­பினர் தண்­டிக்­கப்­பட்­டனர். பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக இருக்கும் அர்ஜுன் மகேந்­தி­ரனை நாட்­டுக்கு கொண்­டு­வ­ரு­வதற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அது­போன்­றுதான் ஏனைய வழக்கு விசா­ர­ணை­களும் இடம்பெற்று வருகின்றன. ஆகவே தொடர்ச்சியாக நடைபெற்று வரும் விடயமொன்றாகவே இருக்கின்றதே தவிர, தேர்தலுக்காக முன்னெடுக்கும் விடயமொன்றாக கூறமுடியாது. 

கேள்வி:- அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது சாத்தியமா? 

பதில்:- அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜையாவார். சிங்கப்பூருடன் எமக்கு உடன்படிக்கைகள் காணப்படாமையால் அவரை அழைத்துவருவதில் சட்டரீதியான சவால்கள் காணப்படுகின்றன. ஜனாதிபதி எழுத்து மூலமான ஆவணங்களை அந்தநாட்டுக்கு அனுப்பியுள்ளார். ஆகவே விரைவில் அதற்கான பதில்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 

கேள்வி:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்திற்குள் அர்ஜுன் மகேந்திரன் அழைத்துவரப்படுவதற்கு சாத்தியமுண்டா? 

பதில்:- ஜனாதிபதியின் காலத்திற்குள் கொண்டுவரமுடியாது விட்டால் அடுத்துவருகின்ற ஜனாதிபதி அர்ஜுன் மகேந்திரனை அழைத்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும். ஜனாதிபதி மைத்திரிபாலவை சார்ந்தவொரு விடயமாககொள்ளாது நாட்டின் எதிர்காலத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுக்க வேண்டும். 

கேள்வி:- ஐக்கிய தேசியக் கட்சியினுள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முரண்பாடுகள் வலுத்துள்ள நிலையில் சஜித் பிரேமதாஸவுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு அவர் கட்சியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான சுதந்திரக்கட்சி அவரை பொதுவேட்பாளராக களமிறக்குவதற்கு முயற்சிக்குமா? 

பதில்:- நடைமுறை ரீதியாக இவ்வாறு நிகழ முடியும் என்று கருதப்படுகின்றது. பொதுமக்கள் மத்தியிலும் அவ்வாறானதொரு எண்ணப்பாடு தோற்றம்பெற்றுள்ளது. இவ்வாறான விடயங்களை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஜனநாயக நாட்டில் இவ்வாறான சிந்தனைகள் பொதுமக்களால் வெளிப்படுத்தப்படுவதற்கு அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது. 

ஆனால், தற்போது வரையில் சஜித் பிரேமதாஸவுடன் அவ்வாறான எந்தவிதமான கலந்துரையாடல்களும் நடைபெறவே இல்லை. அதேநேரம், ஜனாதிபதி மைத்திரிபாலவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சஜித்தை ஆதரிப்பதாகவும் கூறவே இல்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்