ஒரு கோப்பை கோப்பியால் தரை­யி­றக்­கப்­பட்ட விமானம்....!

Published By: J.G.Stephan

15 Sep, 2019 | 10:20 AM
image

பய­ணிகள் விமானம் ஒன்றில் விமா­னத்தை இயக்கும் பகு­தியில் 'கோப்பி' சிந்­தி­யதால், 337 பேருடன் பய­ணித்த விமானம் பாதியில் தரை­யி­றக்­கப்­பட்டதாக பிரிட்டன் விசா­ரணை அதிகாரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

கடந்த பெப்­ர­வரி மாதம் 6ஆம் திகதி ஜெர்­ம­னியின் பிராங்பர்ட் நக­ரி­லி­ருந்து மெக்­ஸி­கோவின் கான்குன் நக­ருக்கு சென்று கொண்­டி­ருந்­த­போதே இந்த சம்பவம் நிகழ்ந்­துள்­ளது.

குறித்த விமா­ன­மா­னது அத்­தி­லாந்திக் பெருங்­க­ட­லுக்கு மேலே பறந்து கொண்­டி­ருந்­த­போது மேல் மூடி இல்லாத குவளை ஒன்றில் தலைமை விமானிக்கு கோப்பி பரி­மா­றப்­பட்­டுள்­ளது. பின்னர் அது அவ­ருக்கு தெரி­யாமல் தட்­டுப்­பட்­ட­தனால் குவ­ளையில் இருந்த கோப்பி விமா­னியின் மடியில் சிந்­தி­ய­துடன் சிறி­த­ளவு கோப்பி விமானத்தின் கட்டுப்பாட்டு பகு­தி­யிலும் சிந்தியுள்ளது.

கோப்­பியின் சூட்டால் விமா­னியின் ஒலி கட்­டுப்­பாட்டுப் பகுதி உருகத் தொடங்­கி­யதால்  அப் பகு­தியில் புகை உண்­டா­கி­யுள்­ளது. இதனால் தரைக்­கட்­டுப்­பாட்டு அறை­க­ளுடன் தொடர்பு கொள்­வதில் விமா­னிக்கு சிக்கல் எழுந்துள்­ளது. இதன் கார­ண­மாக அந்த விமானம் அயர்­லாந்தில் உள்ள ஷெனான் விமான நிலை­யத்தில் தரை­யி­றக்­கப்­பட்டதாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எந்த விமான நிறு­வ­னத்­துக்கு சொந்­த­மான விமா­னத்தில் இந்த விபத்து நடந்­தது என்­பது தொடர்பில் பிரிட்டன் விசா­ரணை அதி­கா­ரிகள் தெரி­விக்­க­வில்லை என்­றாலும் அது கான்டோர் ஏர்லைன்ஸ் நிறு­வ­னத்­துக்கு சொந்­த­மான விமானம் என்று 'விமான பாது­காப்பு மன்றம்' எனும் அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right