மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – ரொத்தஸ் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஒன்றில் நேற்று மாலை 6 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்ததில் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு எந்தவிதமான உயிராபத்துகளும் ஏற்படவில்லை.

எனினும், பெறுமதிமிக்க பொருட்கள் சேதமாகியுள்ளதாகவும், இதில் பாதிக்கப்பட்ட ஐந்து பேரை தற்காலிகமாக அயலவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் 5 மாத குழந்தை ஒன்றும் அடங்குகின்றமையும் குறிப்பிடதக்கது.

(க.கிஷாந்தன்)