இந்தியாவில் பதாகை சரிந்து வீழ்ந்து யுவதி பலி

Published By: Digital Desk 3

14 Sep, 2019 | 04:02 PM
image

இந்தியாவில் சென்னையில் பதாதை வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் 23 வயது இளம்பெண் உயிரிழந்துள்ளார்.

பதாகை வைப்பதற்கு சென்னை மாநகராட்சி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சென்னை குரோம்பேட்டை – பவானி நகர் பகுதியைச் சேர்ந்த பெற்றோருக்கு ஒரே மகளான சுபஸ்ரீ என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை வீதியில் தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார்.

பள்ளிக்கரணையின் முன்னாள் நகர மன்ற உறுப்பினரான ஜெயகோபால் என்பவரின் மகனின் திருமண வரவேற்பு நிகழ்விற்காக வீதியெங்கும் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் ஒன்று சுபஸ்ரீ மீது சரிந்து வீழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.

பதாகை வீழ்ந்ததில் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த சுபஸ்ரீயின் வாகனத்தின் மீது தண்ணீர் ஏற்றிச்சென்ற லொறி மோதியுள்ளது.

சுபஸ்ரீ லொறியின் சக்கரத்திற்குள் சிக்கி படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடா செல்வதற்காக விண்ணப்பித்திருந்த சுபஸ்ரீ, அதற்கான நேர்காணலை முடித்துவிட்டு வரும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பதாகை அடித்த அச்சகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பதாகை வைத்த முன்னாள் நகர மன்ற உறுப்பினரான ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்துள்ளதோடு அனுமதியின்றி பதாகை  வைத்ததாக ஒரே நாளில் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47