அதிகாரப் போட்டியின் விளைவு..!

Published By: J.G.Stephan

14 Sep, 2019 | 02:32 PM
image

அரச தொலைக்காட்சி ரூப­வா­ஹி­னியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  அதி­ர­டி­யாகப் பாது­காப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்­துள்ளார். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட அவ­ரு­டைய இந்தத் திடீர் நட­வ­டிக்கை ஊடக சுதந்­தி­ரத்தை அச்­சு­றுத்­த­லுக்குள்ளாக்­கி­யுள்­ளது. இதனால் பல­த­ரப்பிலிருந்து கவ­லையும் கண்­ட­னமும் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது.

அர­சாங்­கத்­தினால் நடத்­தப்­ப­டு­கின்ற அல்­லது அதன் பொறுப்பிலுள்ள ஒரு நிறு­வனம் அரச சார்­பு­டை­ய­தா­கவே இருக்கும். அரச சார்­பு­டை­ய­தா­கவே செயற்­படும் என்ற பொது­வான கருத்­தியல்  நாட்டில் நீண்ட கால­மா­கவே நில­வு­கின்­றது. அரச சார்­பு­டை­ய­தாகக் கரு­தப்­ப­டு­கின்ற அல்­லது அர­சுக்கு ஆத­ர­வாகச் செயற்­ப­டு­கின்ற ஒரு நிறு­வனம் பாது­காப்பு அமைச்சின் கீழ் இருந்தால் என்ன அல்­லது ஓர் அமைச்சின் கீழ் இருந்தால் என்ன, எல்லாம் ஒன்­று­தானே என்ற கேள்வி எழலாம்.

அரச நிறு­வனம் ஒன்றின் ஊடாக அர­சாங்கம் தனது நிலைப்­பாடு மற்றும் அதன் கொள்கை நிலை செயற்­பா­டு­களை வெளிப்­ப­டுத்­து­வதில் தவ­றேதும் இருக்க முடி­யாது.

அர­சாங்­கத்தின் வெளிப்­படைத் தன்­மைக்கு அது அவ­சியம். ஆனால், அர­சாங்கம் என்ன செய்­கின்­றது, எவ்­வாறு செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது என்­பதை நாட்டு மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக ரூபா­வா­ஹினி கடந்த காலங்­களில் எவ்­வாறு மிகத் தீவி­ர­மாகச் செயற்­பட்­டி­ருந்­தது என்­பதை நாட்டு மக்கள் மறந்­து­விட முடி­யாது. அது அர­சாங்­கத்தின் அனைத்து நட­வ­டிக்­கை­களும் சரி­யா­னவை, நியா­ய­மா­னவை என்ற அர­சியல் பிர­சாரம் சார்ந்து இருந்­தன. அதனால், அதன் நம்­பிக்கைத் தன்மை மக்கள் மத்­தியில் கேள்­விக்­கு­றிக்கு ஆளாகி இருந்­தது.

அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களே சரி­யா­னவை என நியா­யப்­ப­டுத்­து­வ­தற்­கான பிர­சார ஊட­க­மாக அரச நிறு­வனம் ஒன்றைப் பயன்­ப­டுத்­து­வதை முறை­யா­ன­தொரு செயற்­பா­டாகக் கருத முடி­யாது. அது ஆட்சி அதி­கா­ரத்திலுள்ள கட்­சி­யி­னதும், ஆட்­சி­யா­ளர்­க­ளி­னதும் சுய அர­சியல் இலா­பங்­களைப் பூர்த்தி செய்­வ­தற்­கான ஒரு வழி­முறைச் செயற்­பா­டா­கவே இருக்க முடியும். அந்த வகை­யி­லேயே ரூப­வா­ஹினி கடந்த காலங்­களில் ஆட்­சி­யா­ளர்­க­ளினால் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இதுவே இந்த நாட்டின் கடந்த கால அனு­பவம்.

இந்த அனு­ப­வத்தின் பின்­பு­லத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ரூபா­வா­ஹி­னியை தொலைக்­காட்சி நிறு­வ­னத்தைப் பாது­காப்பு அமைச்சின் நேரடிப் பொறுப்பில் திடீ­ரென கொண்டு வந்­துள்­ளதை ஒரு சாதா­ரண நட­வ­டிக்­கை­யாகக் கருத முடி­யா­துள்­ளது. அதற்குத் தகுந்த கார­ணங்கள் வெளி­யி­டப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை. அதே­வேளை, தவிர்க்க முடி­யாத தேவை­யொன்றின் அடிப்­ப­டையில் அந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­ய­வில்லை.

இதனால், ஏற்­க­னவே அர­சாங்க பொறுப்பின் கீழ் செயற்­பட்டு வரு­கின்ற ஒரு நிறு­வ­னத்தை அதுவும் ஓர் ஊடக நிறு­வ­னத்தை விசே­ட­மாக பாது­காப்பு அமைச்சின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும், என்ன நடந்­தது, என்ன நடக்­கப்­போ­கின்­றது என்ற ஐயப்­பாடு மிகுந்த கேள்­விகள் எச்­ச­ரிக்கை மிகுந்த அச்ச உணர்­வுடன் எழுந்­தி­ருப்­பதைக் காண முடி­கின்­றது.

அர­சியல் மயப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது

யுத்த மோதல்கள் இடம்­பெற்ற காலங்­களில் ரூப­வா­ஹினி தொலைக்­காட்சி அர­சாங்­கத்தின் முழு­மை­யான ஊது­கு­ழ­லாக, அதன் பிர­சார பீரங்­கி­யா­கவே செயற்­பட்டு வந்­தது. விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தில் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரா­கவே அரச படைகள் யுத்­தத்தில் ஈடு­பட்­டி­ருந்­தன. படை­யினர் பயங்­க­ர­வா­தத்தை இல்­லாமல் செய்­வ­தற்­காக பயங்­க­ர­வா­தி­களை ஒழித்துக் கட்­டி­னார்கள் என்ற தோற்­றப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­காக இந்த தொலைக்­காட்சி சேவை பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

ரூப­வா­ஹி­னியை ஓர் ஊடக நிறு­வ­ன­மாக, யுத்­த­க­ளத்தின் உண்­மை­யான நிலை­மை­களை மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­து­கின்ற ஓர் ஊட­க­மாக அப்­போது அரசு பயன்­ப­டுத்­த­வில்லை. அதனைப் பொது நிலை – நடு­நி­லையிலிருந்து செயற்­ப­டு­வ­தற்கு அனு­ம­திக்­க­வில்லை. விடு­த­லைப்­பு­லி­களை வெறு­மனே பயங்­க­ர­வா­தி­க­ளாகச் சித்­த­ரித்து, அர­சாங்­கத்தின் எதி­ரி­க­ளாக மட்­டு­மல்­லாமல், நாட்டு மக்­களின் எதி­ரி­க­ளாக உரு­வ­கித்துக் காட்­டு­வ­தற்­காக அந்தத் தொலைக்­காட்சிச் சேவை முழு அளவில் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

யுத்த மோதல்­க­ளின்­போது நாட்டில் இரண்டு பிரி­வினர் மாத்­தி­ரமே இருக்­கின்­றார்கள். அதா­வது பயங்­க­ர­வா­திகள் என்றும், பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரா­ன­வர்கள் என்றும் இரண்டு பிரி­வினர் மாத்­தி­ரமே இருக்க முடியும். இருக்க வேண்டும் என்று அன்­றைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவும், அவ­ரு­டைய சகோ­த­ர­ரா­கிய பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷவும் சூளு­ரைத்துச் செயற்­பட்­டி­ருந்­தார்கள்.

இதனால் இரா­ணுவ நட­வ­டிக்­கை­களில் ஏற்­பட்ட உயி­ரி­ழப்­புக்கள் பற்றி குறிப்­பி­டு­கையில், ரூப­வா­ஹி­னியின் செய்­தி­யா­ளர்கள் எத்­தனை பயங்­க­ர­வா­திகள் கொல்­லப்­பட்­டார்கள் என்­பதைக் கூறி­விட்டு, இரா­ணுவத் தரப்பில் ஏற்­பட்ட உயி­ரி­ழப்­புக்­களை 'எங்­களில் ........ இரா­ணுவ வீரர்­களை பயங்­க­ர­வா­திகள் மிலேச்­சத்­த­ன­மாகக் கொன்­றார்கள்' என்ற சொற்­ப­தங்­களைப் பிர­யோ­கித்து செய்தி வெளி­யி­டு­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்­தனர். அந்தள­வுக்கு ரூபவா­ஹினி என்ற தொலைக்­காட்சி ஊடகம் ஊட­கத்­திற்­கு­ரிய நடு­நிலை தவறி, ஆட்­சி­யா­ளர்­க­ளினால் சுய­லாப அர­சி­யலில் தன்­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.  

இதனால் அர­சாங்­கத்தின் முழு­மை­யா­னதோர் அதீத பிர­சார ஊது­கு­ழ­லாகக் கரு­தப்­பட்ட ரூப­வா­ஹி­னியின் செய்­தி­களில் நடு­நிலை ஊட­கங்­களும், ஊட­க­வி­ய­லா­ளர்­களும் நம்­பிக்கை இழந்­தி­ருந்­தனர். யுத்த மோதல்­களில் அர­சாங்கத் தரப்பின் நிலைப்­பாடு என்ன என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான ஆதா­ர­மா­கவே ரூப­வா­ஹி­னியை அவர்கள் மேற்கோள் காட்­டினர்.

யுத்த காலத்தில் மட்­டு­மல்ல யுத்­தத்தின் பின்­னரும் ஆட்­சியில் நீடித்­தி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான 6 வருட ஆட்சிக் காலத்­தி­லும்­கூட இத்­த­கைய நிலை­மையே நீடித்­தி­ருந்­தது. ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திய 2015 ஆம் ஆண்டின் பின்னர் இந்த நிலை­மையில் மாற்றம் ஏற்­பட்­டி­ருந்­தது. எனினும் ஜனா­தி­ப­தியின் திடீர் நட­வ­டிக்கை கார­ண­மாக ரூபவா­ஹினி மீண்டும் தனது பழைய நிலைக்குத் திரும்­பு­வ­தற்­கான வழி திறந்­து­வி­டப்­பட்­டுள்­ளது என்றே கருத வேண்­டி­யுள்­ளது.

அதி­காரப் போட்டி

ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து உரு­வாக்­கிய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ஆரம்­ப­காலச் செயற்­பா­டுகள் நியா­யப்­பா­டான ஒரு போக்­கி­லேயே தென்­பட்­டன. ஆனால், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் இடையில் ஏற்­பட்ட அதி­காரப் போட்டி ரூப­வா­ஹி­னியின் போக்­கிலும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி விட்­டது என்றே கூற வேண்டும்.

ஏனெனில் இரு­கட்சி அர­சாங்­கத்தின் உயர் தலை­வ­ரா­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் சில நட­வ­டிக்­கை­களை எதிர்க்­கட்­சியைச் சேர்ந்த ஒரு­வரைப் போன்ற அணு­மு­றை­யுடன் ரூபவா­ஹினி அர­சியல் ரீதி­யாக விமர்­சனம் செய்­தி­ருந்­தது. தனக்கு எதி­ரான முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ரூப­வா­ஹி­னியின் இந்த விமர்­சனப் போக்கு குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளிப்­ப­டை­யா­கவே தனது அதி­ருப்­தி­யையும் மனக்­கி­லே­சத்­தையும் வெளி­யிட்­டி­ருந்தார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வியிலிருந்து நீக்கி, ஒரு காலத்தில் தங்கள் இரு­வ­ரது அர­சியல் எதி­ரி­யாகக் கரு­தப்­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவை அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணான வகையில் பிர­த­ம­ராக நிய­மிக்கும் அள­வுக்கு அதி­காரப் போட்டி தீவிரம் பெற்­றி­ருந்­தது.

அதி­காரப் போட்டி என்று வரும்­போது, ஜன­நா­ய­கத்தின் மீதான பற்று மக்கள் நலன்கள் மீதான கரி­சனை போன்­ற­வை­யெல்லாம் துச்­ச­மாக மதிக்­கப்­ப­டு­கின்­றன. இந்த வகை­யில்தான் 2018 ஒக்­டோபர் மாதம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சியல் புரட்­சி­யொன்றை ஏற்­ப­டுத்தி நாட்­டையே நெருக்­கடி நிலைக்குள் தள்­ளி­யி­ருந்தார்.

நல்­லாட்­சி­ அ­ர­சாங்­கத்தை இணைந்து உரு­வாக்­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் இடை­யி­லான அர­சியல் அதி­காரப் போட்டி தீவி­ர­ம­டைந்­துள்ள ஒரு பின்­ன­ணியில் தனது நிறை­வேற்று அதி­கார சக்­தியைப் பயன்­ப­டுத்தி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல்­வேறு நட­வ­டிக்­கை­களைத் துணி­வுடன் மேற்­கொண்டு வரு­கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து தேசிய பாது­காப்­புக்கு ஏற்­பட்ட அச்­சு­றுத்தல் நிலை­மை­களைத் தொடர்ந்து, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் கலந்­தா­லோ­சிக்­கா­ம­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சவேந்­திர சில்­வா­வுக்குப் பதவி உயர்வு வழங்கி நாட்டின் இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மித்தார்.

இறு­திக்­கட்ட யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் தொடர்பில் போர்க்­குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்ள சவேந்­திர சில்­வாவை உள்ளூர் மற்றும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களின் எதிர்ப்­பு­க்க­ளுக்கு மத்­தியில் இரா­ணுவத் தள­ப­தி­யாக்­கி­யதன் மூலம் அவர் கடும் கண்­ட­னங்­க­ளுக்கு முகம் கொடுக்க  நேரிட்­டது.

கண்­ட­னமும் மறுப்பும்
மனித உரிமை அமைப்­புக்­களைப் போலவே ஜன­நா­யக சக்­திகள், ஜன­நா­யகச் செயற்­பாட்­டா­ளர்கள் மட்­டு­மல்­லாமல் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட அர­சியல் கட்­சி­களும் ஜனா­தி­ப­தியின் இந்த நட­வ­டிக்­கையைக் கண்­டித்து, அந்த நிய­ம­னத்தை மீளப்பெற வேண்டும் என கோரி­யி­ருந்­தன.  கண்­ட­னங்கள், அழுத்­தங்கள், வேண்­டு­கோள்கள் அனைத்­தையும் புறந்­தள்­ளிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, தேசிய பாது­காப்பை முதன்­மைப்­ப­டுத்தி சமா­தானம், ஐக்­கியம், நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான நிகழ்ச்­சி­களை வெளி­யி­டு­வ­தற்­காக  ரூபவா­ஹி­னியை பாது­காப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்­துள்ளார் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வருட இறு­தியில் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்­த­லை­யொட்டி அர­சியல் களம் சுறு­சு­றுப்­ப­டைந்­துள்­ளது. வேட்­பா­ளர்­களைத் தெரிவு செய்­வதில் கட்­சிகள் முனைந்­துள்ள நிலை­மையும், தெரிவு செய்­யப்­பட்­டுள்ள வேட்­பா­ளர்கள் தமது கொள்கைப் பிர­க­டன பிர­சா­ரத்தில் ஈடு­பட்­டுள்ள நிலை­மையும் அந்த களத்தைப் பர­ப­ரப்­பான ஒரு சூழ­லுக்குள் இழுத்துச் சென்­றுள்­ளது.

இத்­த­கைய தேர்தல் கால சூழ­மை­வி­லேயே ரூப­வா­ஹி­னியை ஜனா­தி­பதி பாது­காப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்­துள்ளார். ஜனா­தி­ப­திக்கும், பிர­த­ம­ருக்கும் இடை­யி­லான அர­சியல் அதி­காரப் போட்டி தீவி­ர­ம­டைந்­துள்ள ஒரு நிலை­யி­லேயே இரா­ணுவத் தள­ப­தி­யாக சவேந்­திர சில்­வாவை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தன்­னிச்­சை­யாக நிய­மித்­துள்ளார். ஜனா­தி­பதி தேர்தல் களத்தைக் கருத்திற்கொண்டு அர­சியல் உள்­நோக்­கத்­துடன், சட்­ட­வி­ரோ­த­மாக ரூப­வா­ஹி­னியைத் தனது கட்­டுப்­பாட்டில் உள்ள அமைச்சின் கீழ் அவர் கொண்டு வந்­துள்ளார் என்ற குற்­றச்­சாட்டும் முன் வைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆயினும் அந்தக் குற்­றச்­சாட்டை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பேச்­சா­ளரும் பாராளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய வீர­கு­மார திசா­நா­யக்க மறுத்­து­ரைத்­துள்ளார். ஜனா­தி­பதி தனது அதி­கார வரம்­புக்கு உட்­பட்ட நிலை­யி­லேயே ரூப­வா­ஹி­னியைத் தனது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­துள்ளார். அவர் தனது அதி­கார வரம்­புக்கு உட்­பட்ட வகை­யி­லேயே செயற்­பட்­டுள்ளார். ஆனாலும் சிலர் ஜனா­தி­பதி சட்டவிரோ­த­மாக தன்­னிச்­சை­யாகச் செயற்­பட்­டுள்ளார் என தவ­றாகக் கற்­பிதம் செய்து அவர் மீது குற்றம் சுமத்­தி­யுள்­ளார்கள். ஆனால் ஜனா­தி­பதி தனக்­குள்ள அதி­கார வரம்­புக்கு உட்­பட்ட வகை­யி­லேயே செயற்­பட்­டுள்ளார் என வீர­கு­மார திசா­நா­யக்க கூறி­யுள்ளார்.

ரூப­வா­ஹி­னியின் செயற்­பா­டு­களை மேம்­ப­டுத்தி அதன் நிகழ்ச்­சி­களை சீர் செய்­கின்ற நட­வ­டிக்­கைகள் தாம­தப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. அதனால் அந்த நிறு­வ­னத்தின் நன்­மைக்­கா­கவே ஜனா­தி­பதி பாது­காப்பு அமைச்சின் கீழ் அதனைக்கொண்டு வந்­துள்ளார் என்று அவர் விளக்­க­ம­ளித்­துள்ளார்.

ஆனால் அமைச்­ச­ரவை அந்­தஸ்து இல்­லாத ஊட­கத்­துறை அமைச்சின் கீழி­ருந்த ரூப­வா­ஹினி நிறு­வ­னத்தின் காணொளி காணொலி நிகழ்ச்­சி­களில் தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தி சமா­தானம், ஐக்­கியம், நல்­லி­ணக்கம் என்­பன­வற்றை உரு­வாக்கும் வகை­யி­லேயே அந்த நிறு­வனம் பாது­காப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்­ப­டு­வ­தாக அரச வர்த்­த­மா­னியில் வெளி ­யி­டப்­பட்ட அறி­வித்­தலில் தெரி­விக்­கப்­பட் ­டுள்­ளது.

குழப்­ப­க­ர­மான நட­வ­டிக்கை

அரச ஊடக நிறு­வ­னத்தின் மூலம் தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் உண்­மையில் எழுந்­துள்­ளதா என்­பது பற்­றிய விப­ரங்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வதைப் பின்­ன­ணி­யாகக் கொண்­டுதான் நாட்டில் சமா­தானம், ஐக்­கியம் நல்­லி­ணக்கம் என்­பன­வற்றை உரு­வாக்க வேண்டி இருக்­கின்­றதா என்­ப­தற்­கான விளக்­கங்­களும் ஜனா­தி­பதி தரப்பிலிருந்து வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

ஆனால் ரூப­வா­ஹினி நிறு­வ­னத்தின் நிர்­வாகச் செயற்­பா­டு­க­ளிலும், அந்த நிர்­வா­கத்­திற்­கான ஆளணி நிய­ம­னத்­திலும் சீர்­கே­டுகள் இடம்­பெற்­றி­ருந்­தன, குழப்­பங்­களும் நேர்ந்­தி­ருந்­தன என்ற கார­ணத்தைக் காட்டி இந்த அமைச்சு மாற்றம் இடம்­பெற்­றுள்­ளது என்ற விளக்­கமும் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் அமைச்­ச­ரவை அந்­தஸ்து பெறாத அமைச்­ச­ரா­கிய ருவான் விஜே­வர்­த­னவின் கீழ் செயற்­பட்டு வந்த ரூப­வா­ஹி­னியின் நிர்­வாகச் செயற்­பா­டுகள் திருப்­தி­க­ர­மாக அமைந்­தி­ருக்­க­வில்லை என்ற கார­ணமும் கூறப்­பட்­டுள்­ளது.

ஆனால் தனது பொறுப்பின் கீழ் இருந்த ரூப­வா­ஹினி நிறு­வ­னத்தைப் பாது­காப்பு அமைச்சின் கீழ் மாற்­றி­ய­போது, அது­கு­றித்து தனக்கு அறி­விக்­கப்­ப­ட­வில்லை. அது­பற்­றிய தக­வல்கள் தனக்குத் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை என்று அமைச்சர் ருவான் விஜே­வர்­தன செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் கூறி­யுள்ளார். இந்த நட­வ­டிக்கை நிய­மங்­க­ளுக்கு முர­ணா­னது என கார­மான வார்த்தைப் பிர­யோகம் கொண்ட ஒரு கடி­தத்தை அவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்பி வைத்­துள்ளார்.

ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­ப­னத்தின் நிர்­வாகக் கட்­ட­மைப்­புக்கு உரிய ஆளணி நிய­மிக்­கப்­பட வேண்டும் என்­பதை, தான் தொடர்ந்து வலி­யு­றுத்தி வந்­த­போ­திலும் தன்னால் பரிந்­து­ரைக்­கப்­பட்­ட­வர்கள் அந்த கூட்­டுத்­தா­ப­னத்தின் உயர் பத­வி­க­ளுக்கு நிய­மிக்­கப்­ப­டு­வதை ஜனா­தி­ப­தியே தடுத்­தி­ருந்தார் என்றும் பாது­காப்பு அமைச்சின் கீழ் அந்த நிறு­வ­னத்தைக் கொண்­டு­வந்து அறி­வித்­துள்­ளமை குழப்­ப­க­ர­மான நட­வ­டிக்கை என்றும் ருவான் விஜே­வர்­தன குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

யுத்த காலத்­தில்­கூட ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­பனம் பாது­காப்பு அமைச்சின் கொண்டு வரப்­ப­ட­வில்லை என்­பதைக் கவ­லை­யுடன் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யுள்­ளது என்றும், ஜனா­தி­ப­தியின் இந்த நட­வ­டிக்­கை­யா­னது, நாட்டின் ஊட­கத்­து­றைக்கு விடுக்­கப்­பட்­டுள்ள அச்­சு­றுத்தல் என்ற வெளிப்­ப­டுத்­தலைத் தடுக்க முடி­யாது என்றும் ருவான் விஜே­வர்­தன குறிப்­பிட்­டுள்ளார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் முக்­கியஸ்தரா­கிய அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் பொறுப்பில் ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­பனம் இருந்தபோதே அர­சியல் ரீதியான அரசல் புரசல் உருவாகியிருந்தது. பின்னர், அது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த, ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவராகிய ருவான் விஜேவர்தனவின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த நிறுவனம் தொடர்பில் கட்சி ரீதியாக ஜனாதிபதியுடன் ஏற்பட்டிருந்த இழுபறி நிலைமை முடிவுக்கு வரவில்லை.

அத்தகைய ஒரு நிலையிலேயே ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தேசிய பாதுகாப்பை உள்ளடக்கி, சமாதானம், ஐக்கியம், நல்லிணக்கம் என்ற அம்சங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளின் ஊடாக நாட்டு மக்களின் பொழுதுபோக்கு அம்சம் சீர்செய்யப்பட வேண்டும் என்பதை நிலைநிறுத்துவதாகக் கூறி ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைப் பாதுகாப்பு அமைச் சின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டு வந்துள்ளார்.

இந்த நடவடிக்கை ஊடக சுதந்திரத்துக்கு விரோதமானது என்றும் தேர்தல் காலச் சூழலில் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய கருத்துச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலானது என்றும் ஊடக சுதந்திர ஊடக இயக்கம் உழைக்கும் ஊடகவியலாளர்கள் அமைப்பு போன்ற அமைப்புக்கள் கண்டனம் வெளி யிட்டுள்ளன. ஜனாதிபதி தனது தீர்மானத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புக்கள் கோரியிருக்கின்றன.

உண்மையில் ஜனாதிபதிக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கட்சி ரீதியாக எழுந்துள்ள அரசியல் அதிகாரப் போட்டியின் விளைவாகவே ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஊடக நிறுவனங்கள் சுதந் திரமாகக் கட்டுப்பாடுகளின்றி செயற்பட வேண்டிய ஒரு காலச்சூழலில் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முதற்படியாகவே ரூபவாஹினி விவகாரம் கையில் எடுக்கப் பட்டிருப்பதாகத் தெரிகின்றது.

அரச நிறுவனமாகிய ரூபவாஹினிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்ந்து ஏனைய அரச சார்பற்ற ஊடக நிறுவனங்களுக்கும் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகளுக்கான சமிக்ஞைகளே ஜனாதிபதி தேர்தலையொட் டிய அரசியல் சூழலில் காணப்படுகின்றது. இது கவலைக்குரியது. ஆபத்தானது.

பி.மாணிக்­க­வா­சகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய மாகாணத்தின் முதலாவது சப்ததள 108...

2024-03-19 10:37:23
news-image

மலையக கட்சிகள் யாருக்கு, எதற்கு ஆதரவளிக்க...

2024-03-19 10:34:04
news-image

சுவீடனின் நேட்டோ உறுப்புரிமை: இந்தோ -...

2024-03-19 09:09:10
news-image

கனடாவிலும் இலங்கையிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய 6...

2024-03-18 14:07:20
news-image

வலுவடையும் இலங்கையின் ரூபாய் : பொதுமக்கள்,...

2024-03-18 13:49:53
news-image

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதியாக பிரபோவோ  

2024-03-18 13:37:22
news-image

மாகாண சபை முறைமை சுயாட்சிக்கான படிக்கல்

2024-03-18 13:31:57
news-image

அமெரிக்க தேர்தல் களம் : ட்ரெம்புக்கு...

2024-03-18 13:23:47
news-image

தேர்தல்கள் மட்டுமே தீர்வுகளை கொண்டுவருமா?

2024-03-18 13:08:50
news-image

வளமான வாழ்வுத் தேடலில் உயிரை இழக்கும்...

2024-03-18 13:05:14
news-image

சர்வதேச சவால்கள் ‘ஏழு’

2024-03-18 12:53:09
news-image

கோட்டா தனக்குத் தானே வெட்டிய குழி

2024-03-18 12:41:45