இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக தன்­னாட்­சியை பெற்றுக் கொள்­வ­தற்­கான நாடகம் மோடி, மைத்­திரி, சம்­பந்தன் ஆகிய மூம்­மூர்த்­திகள் மூலம் இந்­தி­யாவில் அரங்­கேற்­றப்­பட்­டு­வ­ரு­கின்றது. இந் நிலையில் அந்த நாடகம் , இன்று இலங்­கையில் சம்­பந்­த­னூ­டாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும், எம்.பி.யுமான விமல் வீர­வன்ச தெரி­வித்தார்.

27000 பாடை­யினர் உயிர்­களை அர்ப்­ப­ணிப்பு செய்து மீட்ட நாட்டை காட்டிக் கொடுக்க அரசு முயற்­சிக்­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பிட்­ட­கோட்­டே­யி­லுள்ள தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் அலு­வ­ல­கத்­தில நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­று­கை­யி­லேயே விமல் வீர­வன்ச எம்.பி. இதனை குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

அண்­மையில் பிரிட்­ட­னுக்கு விஜயம் மேற்­கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சிங்­கள மக்­களின் ஆத­ரவை பெற்றுக் கொண்டு தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்­கப்­படும் என நியூயோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கைக்கு பேட்­டி­ய­ளித்­துள்ளார். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் புதிய அர­சி­ய­ல­மைப்பு என்ற நாட­கத்தை அரங்­கேற்றி வரு­கின்­றது.

இதற்­கி­டையே இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி ஜனா­தி­ப­திக்கும், சம்­பந்­த­னுக்கும் ஒரே நேரத்தில் இந்­தி­யா­வுக்கு அழைப்பு விடுத்தார். அத்­தோடு பேச்­சு­வார்த்­தை­களும் நடத்­தப்­பட்­டுள்­ளன. இவ் அனைத்து நிகழ்ச்சி நிரல்­க­ளிலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் முயற்­சிக்கும் வட­கி­ழக்கு ஒற்­றை­யாட்­சியை பெற்றுக் கொள்ளும் விட­யமே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.

இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தன்­னாட்­சியை வழங்க இணங்­கி­யுள்­ளனர். இது சம்­பந்­த­னுக்கு கிடைத்த வெற்­றி­யாகும். புதிய அர­சி­ய­ல­மைப்பில் தன்­னாட்சி உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளது.

தன்­னாட்­சியை இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக பெற்றுக் கொள்ளும் சம்­பந்தன் அதன் பின்னர் ஐ.நா.வின் ஆத­ர­வுடன் தனித் தமி­ழீ­ழத்­திற்­கான தனது நிகழ்­வு­களை முன்­னெ­டுப்பார். அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக தன்­னாட்சி வழங்­கப்­ப­டும்­போது ஐ. நா. அதனை பயன்­ப­டுத்தி தமி­ழீ­ழத்­துக்­கான அங்­கீ­கா­ரத்தை வழங்கும் . அதில் எந்­த­வொரு சிக்­கலும் இருக்­காது.

27000 படை­யினர் தங்­க­ளது உயிர்­களை அர்ப்­ப­ணித்து பயங்­க­ர­வா­தத்­தி­லி­ருந்து நாட்டை மீட்­டெ­டுத்து பிரி­வி­னையை தடுத்­தனர். ஆனால் இன்று மைத்­திரி, ரணில் அர­சாங்கம் படை­யி­னரை காட்டிக் கொடுத்து புலிப் பயங்­க­ர­வா­தி­களின் தேவை­களை நிறை­வேற்­று­கின்­றது.

ஆயு­தங்­க­ளுடன் தனித் தமி­ழீ­ழத்தை பெற்றுக் கொடுக்கும் முயற்சி தோல்­வி­ய­டைந்த நிலையில் இன்று அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக ஐ.நா.வின் உத­வி­யுடன் அதனை நிறை­வேற்றிக் கொள்ளும் முயற்சி சம்­பந்­த­னி­னால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. இலங்­கையில் விக்­கி­னேஸ்­வரன் அதற்­காக அடிப்­படை நட­வ­டிக்­கை­க­ளையும் படிப்படியாக முன்னெடுக்கின்றார். மோடி மறுபுறம் தனது நாடகத்தை அரங்கேற்றுகிறார்.

இவ்வாறு நாட்டை காட்டிக் கொடுக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றன.. இதனை நாம் ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்பதாக சொன்னோம். ஆனால் யாரும்

கேட்கவில்லை. இன்று நாம் சொன்னது

அனைத்தும் உண்மையாகிக் கொண்டிருக் கின்றன என்றார்.