வெற்றியை சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகளே தீர்மானிக்கும் ; சமூகவியலாளரின் ஆய்வு 

Published By: R. Kalaichelvan

14 Sep, 2019 | 12:09 PM
image

ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் வேட்பாளராக ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.)யின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க களமிறங்குவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் பாதிப்பாக அமையக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்று நாடளாவிய அபிப்பிராய ஆய்வொன்றை மேற்கொண்ட பேராதனை பல்கலைக்கழக சமூகவியல் திணைக்களத்தின் முன்னாள் உறுப்பினரான கலாநிதி சிசிர பின்னவல தெரிவித்திருக்கிறார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் வெற்றியாளரை சிறுபான்மையினத்தவர்களின் வாக்குகளே தீர்மானிக்கும் ; மற்றைய முக்கிய வாக்குத்தொகுதியாக சிங்கள பௌத்தர்கள் இருப்பார்கள் ; வெற்றியில் நம்பிக்கை கொண்டிருக்கக்கூடிய எந்த வேட்பாளரும் சிங்கள பௌத்த வாக்ககளில் குறைந்தது 50 சதவீதத்தை பெறக்கூடியவராக இருக்கவேண்டும் என்றும் முன்னாள் புல்பிரைட் ஆய்வு மாணவரான பின்னவல கூறியிருக்கிறார்.

 நாடுபூராவும் இருந்து  1675 வாக்காளர்களை வகைமாதிரியாக பயன்படுத்தி அவர்களை  பத்து உப நிலப்பகுதிகளின் அடிப்படையில் பிரித்தே அவர் இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தார். சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் கிறிஸ்தவ பெரும்பான்மை பகுதிகளாக இந்த வாக்காளர்கள் நேரடி சந்திப்புகளின் மூலமாகவும் தொலைபேசி மூலமான நேர்காணல்கள் மூலமாகவும் தொடர்புகொள்ளப்பட்டார்கள்.

 கலாநிதி பின்னவல தனது ஆய்வு குறித்து செவ்வாயன்று இராஜகிரியவில் நீதியான சமுதாயம் ஒன்றுக்கான தேசிய இயக்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற  செய்தியாளர் மகாநாட்டில் தெரிவித்தமை குறிப்பிபடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24