ஐ.தே.க. பிளவுபடும் சாத்தியமில்லை ; இரு பிரிவினரும் இணக்கம் காண்பதில் அக்கறை 

Published By: Digital Desk 4

13 Sep, 2019 | 02:59 PM
image

பி.கே.பாலச்சந்திரன் 

 கொழும்பு, ( நியூஸ் இன் ஏசியா ) ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் இரு பிரிவினரும் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் தொடர்பில் கடுமையான போக்கை கடைப்பிடித்து வந்தபோதிலும், விட்டுக்கொடுப்பைச் செய்து இணக்கப்பாடொன்றுக்கு  காண்பதில் இப்போது அக்கறை காட்டுகிறார்கள் என்றும் கட்சி பிளவடையாது என்றும் இரு பிரிவினருக்கும் நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு  அலரிமாளிகையில் ஐ.தே.க.வின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான  சந்திப்பு சுமுகமான முறையில் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சந்திப்புக்கு பிறகு செயதியாளர்களுடன் பேசிய பிரேமதாச கட்சியின் தலைவருடனான பேச்சுக்கள் அனுகூலமான சூழ்நிலையில் முடிவடைந்ததாகவும் ஒரு சில தினங்களில் அதன் விளைவுகள் தெரியவரும் என்றும் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

கட்சி இரண்டாகப் பிளவுபட்டால் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியே கிட்டும் என்பதை இரு பிரிவினரும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். வெளியில் இருந்து வருகின்ற சவால் இரு பிரிவினருக்குமே கடுமையானது என்று அந்த வட்டாரங்கள் கூறின.

இரு தலைவர்களிலும் ஒருவர் ஜனாதிபதியாகவும் மற்றவர் பிரதமராகவும் வரலாம்.ஆனால், யார் எந்தப் பதவிக்கு வருவது என்பதை மேற்கொண்டு பேச்சுவாரத்தைகளை நடத்தியே முடிவு செய்யவேண்டியிருக்கிறது.

சவால்கள் 

 ஐ.தே.க.வின் இரு பிரிவினரும் தேர்தலுக்கு முன்னதாக கடினமான சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும். கட்சி ஐக்கியப்பட்டு நிற்குமா இல்லையா என்பதிலேயே தேர்தல் வெற்றி வாய்ப்புகள் பெரிதும் தங்கியிருக்கின்றன.

 தற்போதைய நிலையில், சிங்கள பௌத்த தேசியவாத வாக்கு வங்கியும் கத்தோலிக்க வாக்குவங்கியும் பெருமளவுக்கு  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக இருப்பதாகவே தோன்றுகிறது. அவர் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக உறுதியளித்திருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொாதுஜன பெரமுனவும் ஐ.தே.க.வும் தீவிரவாத பௌத்த சிங்கள சக்திகளின் தாக்குதல்களில் இருந்தும் பாரபட்சமாக நடந்துகொள்ளும் சட்டம், ஒழுங்கு இயந்திரத்திடமிருந்தும் முஸ்லிம்களைப் பாதுகாக்க இயலாமல் இருப்பதால், அவர்கள் இப்போது எந்தப் பக்கத்துக்கு ஆதரவை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள்.

தமிழர்களைப் பொறுத்தவரை, சகல பிரதான கட்சிகளையும் மிகவும் கடுமையாக வெறுக்கிறார்கள்.அவர்களின் முக்கிய  கோரிக்கைகளில் -- புதிய அரசியலமைப்பின் வடிவில் அதிகாரப்பரவலாக்கல், காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் உட்பட போர்க்குற்றங்கள் என்று கூறப்படுகின்றவை தொடர்பிலான பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை -- எந்தவொன்றையுமே பிரதான கட்சிகள் நிறைவேற்றிக்கொடுக்கவில்லை.

தனது தந்தையாரைப்  சிங்கள பௌத்த கிராமப்புற மக்களினதும் நகர்ப்புற சாதாரண மக்களினதும் ஆதரவு தனக்கு இருக்கிறது என்று சஜித் பிரேமதாச கூறுகிறார். ஐ.தே.க.வின் உறுப்பினர்களிலும்  ஆதரவாளர்களிலும் பெரும்பகுதியினரும் அவ்வாறே நம்புகிறார்கள் போலத் தெரிகிறது. ஆனால், இதற்கு மாறாக பிரதமர் விக்கிரமசிங்க பெருமளவுக்கு செல்வாக்கில்லாதவராகப் போய்விட்டதாக அவருக்கு நெருக்கமானவர்களான அமைச்சர்கள் மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம போன்றோர் கூட கூறுகிறார்கள்.ஆனால், விக்கிரமசிங்க இதை மறுதலிக்கிறார். ஜனநாயகத்தை மீட்டெடுத்து பொருளாதார திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்த காரணத்தால் தனது தலைமைத்துவத்தின் மூலம கிராமமப்புற  மக்கள் பெரிதும் பயனடைந்திருக்கிறார்கள் என்று அவர் கூறுகிறார்.

எதிர்க்கட்சி தலைவரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச சஜித்தைப் பற்றி மங்கலான ஒரு அபிப்பிராயத்தையே கொண்டிருக்கிறார். கடந்த உள்ளூராட்சி தேர்தல்களின்போது சஜித்தினால் அவரது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் கூட வெற்றிபெற முடியவில்லை.அது கிராமப்புற மற்றும் நகர்ப்புற அடிமட்ட மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கக்கூடிய பலவீனமான ஆதரவையே வெளிக்காட்டுகிறது என்று ராஜபக்ச சுட்டிக்காட்டுகிறார்.உள்ளூராட்சி தேர்தல்களில் ஐ.தே.க. பின்தங்கிய ஒரு இரண்டாம் இடத்துக்கே வந்த அதேவேளை, அதன் அரசாங்க பங்காளியாக அப்போது இருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொலைதூர மூன்றாம் இடத்துக்கே வரக்கூடியதாக இருந்தது.

சஜித் பிரேமதாச கட்சியின் உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் இரண்டாம், மூன்றாம் நிலைத் தலைவர்களையும் தன்பக்கம் வைத்திருக்கின்ற அதேவளை, ஐ.தே.க.வின் தீவிர ஆதரவாளர்களும் கிராமங்களில் உள்ள கருத்துருவாக்கிகளான தலைவர்களும் இன்னமும் விக்கிரமசிங்கவுடனேயே நிற்கிறார்கள்.அதற்கு ஒரே காரணம்   அவர் பழைய அதிகார வர்க்க ஒழுங்குமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதேயாகும் என்று அனுபவம்வாய்ந்த ஐ.தே.க. முக்கியஸ்தர்கள் கூறுகிறார்கள்.

" ஐ.தே.க.ஒரு பழமைவாதக் கட்சியாகும்.அதன் தீவிர ஆதரவாளர்கள் வாக்காளர்களின் தெரிவை தீர்மானிப்பதில் முக்கியமான பங்கை வகிக்கிறார்கள் " என்று ஜனாதிபதி  பிரேமதாச அரசாங்கத்தில் ஒரு இராஜாங்க அமைச்சராக இருந்த பி.பி.தேவராஜ் கூறினார்.

தமிழர்களுக்கான அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதில் ஏனைய பிரதான சிங்களத் தலைவர்களை விடவும் கூடுதல் அக்கறை காட்டியவர் என்ற காரணத்துக்காக சஜித் பிரேமதாசவை விட வி்கிரமசிங்கவை தமிழர்கள் விரும்புகிறார்கள் எ்்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.தமிழர்  பிரச்சினையை  உண்மையாக விளங்கிக்கொண்ட ஒரு மனிதர் விக்கிரமசிங்க என்று கூட்டமைப்பு நம்புகிறது. மறுபுறத்தில், சஜித் தமிழர் பிரச்சினையில் அக்கறை காட்டவில்லை, அந்த பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஒருபோதும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதுமில்லை. அவர் முழுநிறைவான எடுத்துக்காட்டான ஒரு சிங்களத்தலைவர்.

முஸ்லிம்களும் கூட சஜித்தை விடவும் விக்கிரமசிங்க பக்கமே கூடுதலாக சாய்ந்து நிற்கிறார்கள்.  அனுபவமற்ற இளம் அரசியல்வாதி என்ற வகையில் சஜித் தனது அரசியலுக்கு பாதுகாப்பான பக்கம் என்ற நம்பிக்கையில் சிங்கள பௌத்த பெரும்பான்மைவாத கொள்கை வழியில் செல்வார் என்று எதிர்பார்க்கலாம். சஜித்தை விடவும் விக்கிரமசிங்கவுடன் நிற்பதில் முஸ்லிம்கள் தலைவர்கள் சௌகரியத்தை உணருகிறார்கள்.சஜித்தின் ஊடாட்டம் எல்லாம் பெரும்பாலும் கீழ்மட்ட ஒழுங்கில் உள்ள சிங்கள அரசியல்வாதிகளுடனேயே இருக்கிறது. தந்தையார் ரணசிங்க பிரேமதாசவைப் போன்று சஜித் முஸ்லிம்களுடனும் தமிழர்களுடனும் நெருக்கத்தை வளர்த்துக்கொள்ளவில்லை.

சேறுபூசுதல் 

அதேவேளை, ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு  எதிரான வழக்குகளுக்கு புத்துயிரளிப்பதன் மூலமாக ஐ.தேக.வினர் ( கூட்டாக ) கோதாபய மீது பழிதூற்றுவதற்கு முயற்சிகளை முன்னெடுக்கிறார்கள்.

 மறுபுறத்தில், மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தின் பிரதான சந்தேகநபரான முன்னாள் ஆளுநர் அர்ஜுனா மகேந்திரனை நாடுகடத்துமாறு சிங்கப்பூர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கும் கடிதமொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டிருக்கிறார். மகேந்திரனை பாதுகாப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்ற பிரதமர் விக்கிரமசிங்கவை மடக்குவதற்காகவே இதை ஜனாதிபதி செயதிருக்கிறார்.

விக்கிரமசிங்கவை கடுமையாக தாக்குகின்ற அதேவேளை, ஜனாதிபதி சிறிசேன சஜித் பிரேமதாச தொடர்பில் ஒரு மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறார் போலத்தெரிகிறது. விக்கிரசிங்கவிடமிருந்து பிரிந்து சஜித் தனியாக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினால் அவருடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்தி அவரை ஜனாதிபதியாகக் கொண்ட ஒரு  அரசாங்கத்தில் தனக்கு பிரதமர் பதவியை கேட்கலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே சிறிசேன இல்வாறு நடந்துகொள்கிறார்.

அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தின் பிரகாரம் பலம்பொருந்திய ஒரு பிரதமராக வருவதற்குசிறிசேன விரும்புகிறார்.அதன் காரணத்தினால்தான் அவர் சுதந்திர கட்சியின் மகாநாட்டில் உரையாற்றியபோது அடுத்த ஜனாதிபதி அதிகாரமற்றவராகவே இருப்பார் என்றும் பிரதமரின் கைகளிலேயே முழு அதிகாரங்களும் இருக்கும் என்றும் கூறினார்.2020 தெரிவுசெய்யப்படும் பாராளுமன்றத்தில் அந்த நிலைமையே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன என்று  பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துவிட்ட பின்னரும் கூட தேர்தல் கூட்டணியொன்றை அமைப்பது குறித்து  பொதுஜன பெரமுனவுடன் அக்கட்சி பேச்சுவார்த்தைகளை  தொடர்ந்து நடத்திக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

" ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்பதால் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒன்றுக்கு ஒன்று தேவைப்படுகின்றன. கூட்டணி அமைக்கும் விடயத்தில் நியாயபூர்வமான கோரிக்கைகளுக்கு விட்டுக்கொடுக்க பொதுஜன பெரமுன தயாராயிருக்கிறது.ஆனால், எமது அடிப்படை நலன்களுக்கு பாதிப்பில்லாமல் எந்தளவுக்கு விட்டுக்கொடுப்பது என்பதே கேள்வியாகும் " என்று பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

ஜனாதிபதி சிறிசேனவைப் பொறுத்தவரை, அவர் பிரதமராக வர விரும்புகிறார்.அல்லது குறைந்தது பாராளுமன்றத்தில் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தையும்  மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சர் பதவியையும் அவர் கோருகிறார் என்று நம்பப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரம்புக்வெல, " சிறிசேனவின் அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், பொதுஜன பெரமுன அவருக்கு ஒரு நியாயமான இடத்தைக் கொடுக்கவேண்டியிருக்கும் " என்று கூறினார்.

தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு வெற்றி வாய்ப்புகள் பிகாரமானவையாக இருப்பதை அடிப்படையாகக்கொண்டு பார்க்கும்போது நேரத்துக்கு நேரம் ஆக்ரோஷமான அறிக்கைகளை வெளியிடுவதை விடுத்து பொதுஜன பெரமுனவுடன் சுதந்திரகட்சியினர்  கூட்டணியொன்றை அமைப்பதற்கு போகவேண்டியிருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54