போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளில் இருக்கின்றனர் - மாவை 

Published By: Digital Desk 4

13 Sep, 2019 | 02:36 PM
image

இலங்கையில் போர்குற்றங்களை இழைத்தவர்கள் இன்று உயர் பதவிகளிலும் இருக்கின்றார்கள் ஆனால் தமிழர்களுக்கான விடுதலை இதுவரை கிடைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் 

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலகத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் 

தமிழ் மக்கள் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக தங்களது  உரிமைக்களுக்காக போராடி வருகின்றார்கள்  அந்த கொள்கையின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவை வழங்கி வருகின்றனர்

 அதாவது மக்களுடைய சுயநிர்ணய உரிமை அவர்களுடைய விடுதலை என்பவற்றை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து  குரல் கொடுத்து வருகின்றோம்  அந்த வகையில் மக்கள் தங்களுக்கான ஆதரவை வழங்கி வருகின்றார்கள் நாங்களும் எங்களுடைய கொள்கைக்காக குரல் கொடுத்து வருகிறோம் 

எமது மக்களைக் கொன்று குவித்து பெரும் மனிதப் படுகொலைகளை செய்தவர்கள் இன்று உயர் பதவிகளில் உயர் பதவிகளை வகிக்கின்றார்கள் ஜனாதிபதியாக வருவதற்கு போட்டியிடுகின்றார்கள் ஆனால் நமது மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட இதுவரை வழங்கப்படவில்லை அதற்காக நாங்கள் குரல் கொடுத்து வருகின்றோம் 

கடந்த காலங்களில் தேர்தலின் போதும் நாங்கள் இந்த மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம் அதேநேரம் இந்த எமது உரிமை உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் ஒரு தன்னாட்சியுடன் வாழக்கூடிய ஒரு அதிகாரத்திற்காகவும் நாங்கள் போராடி வருகின்றோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு - புறக்கோட்டையில் அனுமதியற்ற கடைகளை...

2024-04-20 11:30:37
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09