ஐ.தே.க.வின் வேட்­பாளர் யாராக இருந்­தாலும் சவால் ­இல்லை

Published By: R. Kalaichelvan

13 Sep, 2019 | 11:00 AM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

சுதந்­திரக் கட்­சியின் தற்­போ­தைய செயற்­பா­டுகள் சந்­தே­கத்­திற்­கி­ட­மாக உள்­ளன. ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்றோம் என்று பெய­ர­ளவில் மாத்­திரம் குறிப்­பிட்டால் போதாது.

செய­ல­ள­விலும் செயற்­ப­டுத்த  வேண்டும். சுதந்­திர கட்­சி­யினர்  நாட்டு மக்­களின் எதிர்­பார்ப்பை நிறை­வேற்ற முயற்­சிப்­பது கட்­சியை  பாது­காக்கும் என எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செஹான் சேமசிங்க தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

ஐக்­கிய தேசிய கட்சி மீண்டும் ஆட்­சிக்கு வராமல் இருக்க வேண்­டு­மாயின் சுதந்­திர கட்சி  பொது­ஜன  பெர­மு­ன­விற்கு ஆத­ரவு வழங்க வேண்டும்.  வீண் முரண்­பா­டு­களை தோற்­று­விப்­பதை சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்கள் தவிர்த்துக் கொள்­வது அவ­சி­ய­மாகும்.

அதேபோல் தங்கள் சொந்த வேலைக்­காக மக்­களின் நிதியை பயன்­ப­டுத்­தி­யது மற்றும் கொள்­ளை­ய­டித்­தது போன்ற செயற்­பா­டு­களே கடந்த நான்கு வரு­டங்­களில் அர­சாங்­கத்தால் மேற்­கொள்­ளப்­பட்­டன.

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் எவ­ராக இருந்­தாலும் பொது­ஜன பெர­மு­னவின் வெற்­றிக்கு தடை­யல்ல, கடந்த நான்கு வருட கால­மாக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் பிர­தான இலக்­காக காணப்­பட்­டது. கட்­சியை பலப்­ப­டுத்திக் கொள்­வதே தவிர நாட்டு மக்கள் தொடர்பில் எவ்­வித அக்­க­றையும் கொள்­ள­வில்லை.

பரந்­து­பட்ட கூட்­டணி வெற்றிப் பெற வேண்டும் என்ற நிலையில் இருந்து ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டு­கின்றோம். ஆனால் ஒவ்­வொரு முறையும் சுதந்­திர கட்­சி­யினர்  பொறுப்­பற்ற வித­மா­கவும், ஐக்­கிய தேசிய கட்­சிக்கு ஆத­ர­வா­கவும் செயற்­பட முற்­ப­டு­கின்­றார்கள். கடந்த நான்கு வருட காலமாக ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாகத்தில ; இடம் பெற்ற முறைக்கேடுகளுக்கு  சுதந்திர  கட்சியும் பொறுப்பு கூற வேண்டும்  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26