ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அரச இலக்கிய விருது விழா 2019 

Published By: Digital Desk 4

12 Sep, 2019 | 09:37 PM
image

நாட்டின் இலக்கிய துறையை போஷிப்பதற்காக அரும் பங்காற்றும் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் அரச இலக்கிய விருது விழா 2019 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (12) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

2018ஆம் ஆண்டில் தமது உன்னத படைப்புகளினால் இலங்கை இலக்கிய துறைக்கு பங்களிப்பு வழங்கிய எழுத்தாளர்களின் சேவைகளை பாராட்டி இதன்போது அரச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இலங்கை இலக்கிய துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல இலக்கிய படைப்பாளர்கள் மூவருக்கு வாழ்க்கையில் ஒரேயொரு தடவை மாத்திரம் வழங்கப்படும் சாகித்ய ரத்ன கௌரவ விருது ஜனாதிபதியால் வழங்கப்பட்டதுடன், சிங்கள மொழிக்காக பேராசிரியர் வோல்டர் மாரசிங்க, தமிழ்மொழிக்காக ஐயாதுரை சாந்தன் மற்றும் ஆங்கில மொழிக்காக கமலா விஜயரத்ன ஆகியோருக்கு இன்று விருது வழங்கப்பட்டது.

சிங்கள மொழி மூலமான சிறந்த சுய நாவல் இலக்கியத்திற்கான விருது “மகராநந்தய” நாவலுக்காக விராஜினி தென்னகோனுக்கு வழங்கப்பட்டது. ஆங்கில மொழி மூலமான சிறந்த சுய நாவல் இலக்கியத்திற்கான விருது “Kakiyan” நாவலுக்காக எல்மோ ஜயவர்தனவிற்கும் தமிழ்மொழி மூலமான சிறந்த சுய நாவல் இலக்கியத்திற்கான விருது “அலுவாக்கரை” நாவலுக்காக எஸ்.ஏ.உதயனுக்கும் வழங்கப்பட்டது.

இதனிடையே ஆண்டின் சிறந்த இலக்கிய படைப்பிற்காக வழங்கப்படும் அரச இலக்கிய விருது நந்தன வீரசிங்க எழுதிய “ஷன நியாம” எனும் இலக்கிய நூலுக்காக வழங்கப்பட்டது.

அரச இலக்கிய ஆலோசனை சபை, இலங்கை கலா மன்றம், கலாசார அலுவல்கள் திணைக்களம், உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் வருடாந்தம் இவ்விழா ஒழுங்கு செய்யப்படுகிறது.

அமைச்சர் சஜித் பிரேமதாச, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பெர்னாட் வசந்த, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்ணான்டோ, இலங்கை கலா மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ஆரியரத்ன கலுஆரச்சி, அரச இலக்கிய ஆலோசனை சபையின் தலைவர் பேராசிரியர் சமந்த ஹேரத் மற்றும் புத்திஜீவிகள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இவ்விருது விழாவில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31