அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்தல் தொடர் பில் குடி­ய­ரசுக் கட்­சியின் உத்­தேச வேட்­பா­ள­ரா­க­வுள்ள டொனால்ட் டிரம்ப், தான் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­னவர் அல்லர் எனவும் தீவி­ர­வா­தத்­துக்கே எதி­ரா­னவர் எனவும் தெரி­வித்­துள்ளார்.

ஐ.ரி.வி. ஊட­கத்­துக்கு அளித்த பேட்­டி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

முஸ்­லிம்கள் உள் முக­மாகத் திரும்பி பொலி­ஸா­ருடன் இணைந்து பணி­யாற்ற வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

அமெ­ரிக்­கா­வுக்குள் முஸ்­லிம்கள் பிர­வே­சிக்கத் தடை விதிக்க அழைப்பு விடுத்­த­மைக்­காக தன்னைப் பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமெரோன் முட்டாள் எனவும் தவ­றா­னவர் எனவும் அழைத்­துள்­ளமை தொடர்­பான குறிப்பை வாசித்த பின்­னரே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

கடந்த வருடம் டொனால்ட் டிரம்ப் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் கட்­சியின் முன்­னணி வேட்­பா­ள­ராக இல்­லாத நிலையில் டேவிட் கமெரோன் அந்த விமர்­ச­னத்தை தெரி­வித்­தி­ருந்தார்.

இது தொடர்பில் டொனால்ட் டிரம்ப் மேலும் தெரி­விக்­கையில், அமெ­ரிக்­கா­வுக்குள் முஸ்­லிம்கள் பிர­வே­சிப்­ப­தற்கு உட­னடி தற்­கா­லிகத் தடையை விதிக்கக் கோரி தான் அழைப்பு விடுத்­த­மைக்கு அர­சி­யல்­வா­திகள் மட்­டுமே கண்­டனம் தெரி­வித்­துள்­ள­தாக கூறினார்.

"ஆனால் உல­கி­லுள்ள மில்­லி­யன்­க­ணக்­கான மக்கள் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பு சரி எனத் தெரி­வித்­துள்­ளனர்" என அவர் வலி­யு­றுத்­தினார்.

உலகின் மாபெரும் பிரச்­சி­னை­யாக அடிப்­ப­டை­வாத மதத் தீவி­ர­வாதம் உள்­ள­தாக குறிப்­பிட்ட அவர், “நீங்கள் உல­க­மெங்­கிலும் நோக்­கினால் எங்கும் குண்டு வெடிப்­புகள் இடம்­பெ­று­கின்­றன. அந்த சேதங்கள் சுவீ­ட­னி­லி­ருந்து வந்­த­வர்­களால் ஏற்­ப­ட­வில்லை. நான் கூறு­வது சரி­தானே?” என அவர் வின­வினார்.

"அதனால் முஸ்­லிம்கள் பொலி­ஸா­ருடன் இணைந்து பணி­யாற்ற வேண்டும். மாறாக அவர்கள் பொலி­ஸாரை தம்மை நோக்கித் திரும்ப வைக்கக் கூடாது. அவர்கள் பந்தை விளை­யா­டா­விட்டால் அது நகரப் போவ­தில்லை" என டொனால்ட் டிரம்ப் மேலும் தெரி­வித்தார்.

டேவிட் கமெ­ரோனின் விமர்­சனம் குறித்து அவர் தெரிவிக்கையில், தான் பிரித்­தா­னியப் பிர­த­ம­ருடன் நல­்லு­றவை நாடப்­போ­வ­தில்லை என்று கூறினார்.

அதே­ச­மயம் தன்னை அலட்­சியப் போக்­கு­டை­யவர் எனக்­ ­கு­றிப்­பிட்ட லண்டன் மேயர் சாதிக் கானையும் அவர் குற்­றஞ்­சாட்­டினார்.

அமெ­ரிக்க வர­லாற்­றி­லேயே ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் வேட்­பா­ள­ராக நிய­மனம் பெற்ற அர­சியல் அனு­பவம் குறைந்த ஒரு­வ­ராக டொனால்ட் டிரம்ப் விளங்­கு­கிறார். அவர் ஒரு­போதும் தேர்தல் மூலம் தெரி­வு­செய்­யப்­பட்ட பத­வியை வகித்­த­தில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அவ­ரது சொந்தக் கட்­சியைச் சேர்ந்த பலர் அவருக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட் டியிடும் வேட்பாளரைத் தெரிவு செய்வ தற்கான உட்கட்சி வாக்கெடுப்புகள் இன்று செவ்வாய்க்கிழமை ஒரேகன் பிராந்தியத் தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.