தொடரை சமப்படுத்துமா இங்கிலாந்து?

Published By: Vishnu

12 Sep, 2019 | 10:56 AM
image

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் 5 ஆவது ஆட்டம் இன்று லண்டனில் தொடங்கவுள்ளது. 

அதன்படி இப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடை பெற்று வருகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந் துள்ளன. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன் ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

இதனால் இந்த டெஸ்டில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்யும் நோக்கில் இங்கிலாந்தும் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் அவுஸ்திரேலியாவும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன. 

இத் தொடரில் அவுஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் 5 இன்னிங்ஸ் களில் 671 ரன்கள் குவித்து எதிரணியை மிரட்டி வருகிறார். அவரை சமாளிப்பது இங்கிலாந்து அணிக்கு பெரும் சவாலாக உள்ளது. 

மேலும் அவுஸ்திரேலிய அணிக்கு கவாஜா, வோர்னர், ஹெட், டிம் பெய்ன் ஆகியோர் துடுப்பாட்டத்திலும், பேட் கம்மின்ஸ், லியன், ஹேசல்வுட், சிடில் ஆகியோர் பந்து வீச்சிலும் அசத்தி வருகின்றனர்.

இங்கிலாந்து அணியில் ரோரி பேர்ன்ஸ், ரோய், ரூட், பெயர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இந்த டெஸ்டில் சிறப்பாக விளையாடக் கூடும். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஸ்டூவர்ட் புரோட் ஆகியோரும் தங்களது பங்களிப்பினை ஆற்றி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35