சர்க்கரை நோயை விரட்டியடிக்கும் இரண்டாவது இதயம்

Published By: Digital Desk 4

11 Sep, 2019 | 06:46 PM
image

சர்க்கரை நோயை வரும்முன் தடுப்பதே சிறந்தது. வந்தபின் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு இரண்டாவது இதயத்தை நாம் தொடர்ந்து இயங்க செய்ய வேண்டும்.

இரண்டாவது இதயமா? என ஆச்சரியமாக இருக்கிறதா...! ஆம். வைத்தியர்களிடம் நீங்கள் எப்போதும் சென்றாலும் அவர் முன்வைக்கும் பரிந்துரை, நாளாந்தம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள் என்பது தான். நாம் அதை கவனமாக தவிர்த்துவிடுவோம். 

உங்களை புதிதாக சந்திப்பவர்கள், உங்களிடம் நீங்கள் கடைசியாக தொடர்ந்து இரண்டு கிலோமீற்றர் தூரம் எப்போது நடந்து சென்றீர்கள்? என்று கேட்டால்... நீங்கள் உங்களின் பதிலை செல்வதற்கு குறைந்தது பத்து நிமிடமாவது எடுத்துக் கொள்வீர்கள். ஏனெனில் தற்போது மாறிவிட்ட வாழ்க்கை நடைமுறையால் அனைவரும் ஒரு கிலோ மீற்றருக்கும் குறைவாக உள்ள தூரத்தை கூட நடந்துசென்று திரும்பாமல்,  துவிச் சக்கர வாகனத்தைப் பயன்படுத்துகிறோம். 

இதன் பின் விளைவு என்னவெனில் எம்முடைய இரண்டாவது இதயத்தை நாம் தொடர்ந்து இயங்கவும்,  இயக்கவும் மறுத்து விடுகிறோம். இதன்காரணமாக தொற்றா நோய்கள் எனப்படும் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய பாதிப்பு, உடற்பருமன் போன்ற பாதிப்புகளை உருவாக்கிக் கொள்கிறோம்.

எம்முடைய கால்களின் பின் பகுதியில் அதாவது கெண்டைக்கால் பகுதியில் தான் இரண்டாவது இதயம் அமைந்திருக்கிறது. இந்த இதயம் இயங்க வேண்டும் என்றால், நீங்கள் அதற்கு நாளாந்தம் வேகமாக நடைப்பயிற்சி செய்தல் வேண்டும். வேகமாக நடைப்பயிற்சி செய்தால் மட்டுமே, அங்கிருக்கும் இதயம் இயங்கி அங்குள்ள இரத்தத்தை இதயத்தை நோக்கி திருப்பியனுப்பும். அதாவது, இதயத்திலிருந்து பம்ப் செய்யப்பட்டு உடலெங்கும் பரவும் இரத்தம், அதன் பிறகு உடலில் உள்ள அசுத்தங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு கால் பகுதியில் தான் தேக்கம் அடைகிறது. 

கால் பகுதியில் தேங்கியிருக்கும் அசுத்தங்களை அங்கிருந்து இதயம் நோக்கி செலுத்தப்பட வேண்டும் என்றால், இரண்டாவது இதயம் எனக் கருதப்படும் கால்பகுதி விரைவாகவும், ஆரோக்கியமாகவும் இயக்கம் பெறவேண்டும். அப்படி ஆரோக்கியமாக இயங்கினால்தான் அசுத்த இரத்தம் அங்கிருந்து இதயத்திற்கு செல்லும்.

அதிலும் காலை வேளைகளில் கால்களுக்கு வேகமாக நடைபயிற்சி அல்லது மெல்லோட்டம் செய்வதால் கெண்டைக்கால் பகுதியில் உள்ள இரண்டாவது இதயம் சீராக இயங்குகிறது. இவை சீராக இயக்கம் பெற்றால் உடற்பருமன், நீரிழிவு ,இரத்த அழுத்தம், இதய பாதிப்பு போன்றவை ஏற்படாது. நீங்கள் இந்த நடைபயிற்சியினையோ அல்லது மெல்லோட்டத்தையோ மேற்கொள்ளவில்லை எனில், நீரழிவு நோய், இஜரத்த அழுத்தம், இதய பாதிப்பு, உடல் பருமன், வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க இயலாது. எனவே உங்களது இரண்டாவது இதயத்தை தொடர்ந்து பயிற்சிகளின் மூலம் இயக்குங்கள். நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்.

டொக்டர் ஸ்ரீதேவி.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29