அப்பிளின் அதிரடி அறிமுகம் ! - காணொளி இணைப்பு

Published By: Priyatharshan

11 Sep, 2019 | 04:07 PM
image

அப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் -11 ஸ்மார்ட்போனுடன், ஐபோன் - 11 ப்ரோ மற்றும் ஐபோன் - 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. 

இரு ஸ்மார்ட்போன்களிலும் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 

இந்த டிஸ்ப்ளே இதுவரை வெளியாகி இருக்கும் ஐபோன்களை விட அதிகம் பிரகாசமானதாகும்.

இரு ஸ்மார்ட்போன்களிலும் ஏ 13 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இவற்றில் அல்ட்ரா வைட், வைட் மற்றும் டெலிபோட்டோ கேமராக்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் தெளிவான புகைப்படங்களை எடுக்க வழி செய்யும். 

ஐபோன் 11 ப்ரோ ஸ்மார்ட்போன் ஐபோன் XS மொடலை விட நான்கு மணி நேரம் கூடுதல் பட்டரி பேக்கப் வழங்குகிறது.

ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஐபோன் XS மேக்ஸ் மொடலை விட ஐந்து மணி நேரம் கூடுதல் பேக்கப் வழங்குகிறது. இத்துடன் இரு மொடல்களிலும் 18 வாட் யு.எஸ்.பி. டைப்-சி பவர் அடாப்டர் வழங்கப்படுகின்றன.

அப்பிள் ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:

- 5.8 இன்ச் 2436 x 1125 பிக்சல் / 6.5 இன்ச் 2688 x 1242 பிக்சல் OLED 458 ppi சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே

- A13 பயோனிக் 64-பிட் புராசஸர், 8-கோர் நியூரல் என்ஜின்

- 64 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மெமரி

- ஐ.ஒ.எஸ். 13

- வோட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)

- டூயல் சிம் ஸ்லாட்

- 12 எம்.பி. வைட் ஆங்கிள், f/1.8, OIS, ட்ரூ டோன் ஃபிளாஷ், 4K வீடியோ வசதி

- 12 எம்.பி. 120°  அல்ட்ரா வைட் கேமரா, f/2.4

- 12 எம்.பி. டெலிபோட்டோ, f/2.0

- 12 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2

- ட்ரூ டெப்த் கேமரா

- 4ஜி வோல்ட், வைபை, ப்ளூடூத்

- லித்தியம் அயன் பேட்டரி

- Qi வயர்லெஸ் சார்ஜிங்

- ஃபாஸ்ட் சார்ஜிங்

ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மிட்நைட் கிரீன், ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்ட் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விற்பனை செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26