கல்முனை போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை; பல சாரதிகள் மீது வழக்குத் தாக்கல்

Published By: Daya

10 Sep, 2019 | 02:20 PM
image

அம்பாறை பிராந்திய போக்குவரத்து பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 35க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காலை முதல் மாலை வரை  இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது   சம்மாந்துறை காரைதீவு கல்முனை   நற்பிட்டிமுனை  நிந்தவூர் சாய்ந்தமருது போன்ற இடங்களில்  மேற்கொள்ளப்பட்டது.

குறித்த திடீர் சோதனை நடவடிக்கையில்  போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளுக்கு விழிப்பூட்டல் செயற்பாடுகள்  பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது  தலைக்கவசம் அணிவதில்லை  ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது  அதிவேகமாக செல்வது தொடர்பாக வாகன உரிமையாளர்களுக்கு   தெளிவு படுத்தப்பட்டது.

இச்சோதனை நடவடிக்கையானது  அம்பாரை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.மாரப்பன வழிகாட்டலில் இடம்பெற்றதுடன்  அம்பாறை  கல்முனை உள்ளிட்ட பொலிஸ் நிலைய  போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகளின்  தலைமையில் முக்கிய சந்திகள்  பிரதான வீதிகளில்  திடீர் சோதனை நடவடிக்கை  மேற்கொள்ளப் பட்டது.

இதன் போது  சுமார் இரு மணிநேரத்தில் மாத்திரம் 35க்கும்  அதிகமான சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதுடன் 70க்கும்  மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை  சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை  அதிக சத்தம் எழுப்பும் கோன் போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05