ரூட்டுக்கு பதிலடி கொடுத்த அவுஸ்திரேலிய ஊடகம்

Published By: Vishnu

10 Sep, 2019 | 12:09 PM
image

நான்காவது ஆஷஸ் போட்டியின் தோல்வியைத் தொடர்ந்து இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் தெரிவித்த கருத்துக்கு அவுஸ்திரேலிய ஊடகம் பதிலடி கொடுத்துள்ளது. 

நேற்றுமுன்தினம் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 185 ஓட்டத்தினால் வெற்றிபெற்று, தொடரில் 2:1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த ஆஷஸ் தொடரைப் பொறுத்தவரையில் அவுஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் சேவையை பொறுத்தரையில் அளப்பறியதொன்றாகவே காணப்படுகிறது.

காரணம் இரு சதங்கள், இரு அரைசதங்கள் மற்றும் ஒரு இரட்டைச் சதம் உள்ளடங்களாக மொத்தமாக 671 ஓட்டங்களை குவித்து, 134.20 என்ற சராசரியை பதிவுசெய்துள்ளார்.

அவரை வீழ்த்த இங்கிலாந்துக்கு தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும், இந்த ஆஷஸ் மட்டுமா, இதற்கு முந்தைய ஆஷஸ் தொடர்களிலும் இங்கிலாந்தின் வேதனையை அதிகரிக்கும் வீரராக இருந்துள்ளார்.

இந் நிலையில் இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட், 

இந்தத் தொடரில் பந்துவீச்சே பெரும்பங்கு ஆதிக்கம் செலுத்தியது, துடுப்பாட்டத்தில் ஸ்மித்தை எடுத்து விட்டால் இரு அணிகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான். 

ஸ்டீவ் ஸ்மித் இத்தகைய நிலையில் இருக்கும் போது அவருக்கு பந்து வீசுவது கடினமே. அவர் அளிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும், ஆனால் நாங்கள் இதுவரை அதைச் செய்யவில்லை, இதற்கான விலையைக் கொடுத்து விட்டோம் என்றார்.

ஜோ ரூட் விளக்கத்தில் திருப்தியடையாத அவுஸ்திரேலிய ஊடகம், அவருக்கு பதிலளிக்கும் வகையில் ஸ்மித் மட்டுமே வித்தியாசம் எனில் ஹேசில்வுட், பேட் கமின்ஸ், லபுஷேன் ஆடவில்லையா? என்ற ரீதியில் கேள்வி எழுப்பி ரூட்டுக்குப் பதிலடி கொடுத்துள்ளது.

ஸ்மித் மட்டுமே வித்தியாசம் என்று கூறுவதன் மூலம் கமின்ஸ், ஹேசில்வுட், அபார பந்து வீச்சும் 58 ஓட்டங்கள் சராசரி வைத்துள்ள லபுஷேன் துடுப்பாட்டமும் என்ன மாதிரியான பங்களிப்பு செய்துள்ளன, இவற்றையெல்லாம் ஜோ ரூட் குறைத்து மதிப்பிடலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35