ஹொங்கொங்கை காப்பாற்றுங்கள் - ட்ரம்பிடம் வலியுறுத்திய போராட்டக்காரர்கள்

Published By: Vishnu

09 Sep, 2019 | 07:30 PM
image

குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டமூலத்தை ஹொங்கொங் அதிபர் திரும்பப் பெற்றபோதிலும் பிற நிபந்தனைகளை நிறைவேற்றக் கோரி போராட்டக்காரர்கள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹொங்கொங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997 ஆம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது ஹொங்கொங்.சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹொங்கொங் நாட்டுக்கென தனி சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

இந்நிலையில், ஹொங்கொங்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டமூலத்தை கடந்த ஜூன் மாதம் ஹொங்கொங் கொண்டு வந்தது. 

இந்த சட்டமூலத்துக்கு எதிராக ஹொங்கொங்கில் தீவிரப் போராட்டங்கள் நடந்தன. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு புதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். கைதும் செய்யப்பட்டனர்.

இந்தப் போராட்டங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர். தொடர் போராட்டம் காரணமாக ஹொங்கொங்கின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. ஹொங்கொங் தலைமைச் செயல் அதிகாரி கேரி லேம் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு அடிபணிந்து சீனாவுக்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்று விசாரிக்கும் புதிய சட்ட திருத்த சட்டமூலத்தை திரும்பப் பெறப்படும் என்று கேரி லேம் கடந்த வாரம் அறிவித்தார். 

எனினும் போராட்டக்காரர்கள் வைத்த பிற நிபந்தனைகளையும் நிறைவேற்றுமாறு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஹொங்கொங்கை காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு கையில் அமெரிக்கக் கொடியுடன் பேரணி சென்றனர். மேலும், சீனாவிடமிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டக்காரர்கள் ட்ரம்ப்பின் முன் வைத்தனர்.

அத்துடன் இன்று பாடசாலை மாணவர்கள் பலரும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து சாலையில் மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் ஹொங்கொங் விவகாரத்தில் வெளிநாட்டினர் யாரும் தலையிட வேண்டாம் என்று சீனா கூறியுள்ளது. ஹொங்கொங்கின் முடிவுகளுக்கு மதிப்பும், ஆதரவும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52