நாட்டின் சீரற்ற காலநிலையினால் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை பகுதியில் வீடு ஒன்றின் மீது இன்று காலை மூங்கில் தோப்பு சரிந்து விழுந்ததில் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

குறித்த வீட்டிலிருந்த குடியிருப்பாளர்களுக்கு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும் வீட்டில் பொருட்களுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

இதேவேளை, காலநிலை சீர்கேட்டினால் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஸ்டிரதன் பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் வீதி போக்குவரத்தில் சிறு தடைகள் ஏற்பட்டிருந்தாலும் மண்மேடை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

(க.கிஷாந்தன்)