நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வென்னப்புவ ரயில் பாதையின் - சிறிகம்பல பகுதியில் மரமொன்று முறிந்து காரணமாக, புத்தளம் - கொழும்பு ரயில் சேவைகள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளதாக ரயில்வே திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

இதன்­படி கொழும்பு - புத்தளத்துக்கு இடையிலான ரயில் லுணுவில ரயில் நிலையம் வரையிலும் புத்தளத்தில் இருந்து கொழும்புக்கு வரும் ரயில் நாத்தண்டிய ரயில் நிலையம் வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், நிலைமையை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.