சஜித்தையே மக்கள் விரும்புகின்றனர் என்கிறார் எரான் விக்ரமரத்ன

Published By: R. Kalaichelvan

09 Sep, 2019 | 11:17 AM
image

இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்கள் வெறு­மனே நப­ரொ­ரு­வரை மாத்­திரம் தெரி­வு­செய்யப் போவ­தில்லை. மாறாக தேர்­தலில் கள­மி­றங்கும் வேட்­பா­ளர்­களில் மனித உரி­மைகள் மற்றும் மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் வலு­வா­னதும், வர­வேற்­கத்­தக்­க­து­மான பின்­ன­ணி­யொன்று எந்த வேட்­பா­ள­ருக்கு உள்­ளது என்­பது குறித்து மிகுந்த அவ­தானம் செலுத்த வேண்டும் என்று வீர­கே­சரி  வார வெளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியின் போது நிதி இரா­ஜாங்க அமைச்சர் எரான் விக்­ர­ம­ரத்ன தெரி­வித்தார்.

 அந்த செவ்­வியின்  முழு­வி­பரம் வரு­மாறு:

கேள்வி : அர­சாங்­கத்­தினால் கடந்த நான்கு வரு­ட­கா­லத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் நீங்கள் திருப்­தி­ய­டை­கின்­றீர்­களா?

பதில் : ஆம், கடந்த நான்­கு­வ­ருட காலத்தில் பல்­வேறு விட­யங்­களில் வெகு­வாக முன்­னேற்றம் கண்­டி­ருக்­கின்றோம். மிக முக்­கி­ய­மாக ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறோம். தகவல் அறியும் உரி­மையை உறுதி செய்­தி­ருக்­கின்றோம். அதே­போன்று நீதித்­து­றையின் சுயா­தீ­னத்­துக்கு  முக்­கி­யத்­து­வ­ம­ளித்து அதனை உறுதி செய்தோம். அது உண்­மையில் வர­வேற்­கப்­பட வேண்­டி­ய­தொரு விட­ய­மாகும். ஆனால், எதேச்­ச­தி­கார ஆட்­சி­யொன்று வரும்­போது தான் எம்மால் மேற்­கொள்­ளப்­பட்ட இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் விளங்­கிக்­கொள்ள முடியும்.

இந்த நான்­கு­வ­ருட காலத்தில்

ஒவ்­வொரு தனி­ந­ப­ரி­னதும் உரி­மை­களும், பாது­காப்பும் மேம்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. எவரும் காணாமல் போக­வில்லை. அர­சாங்­கத்­தினால் கொல்­லப்­ப­ட­வில்லை. எனவே அத்­த­கை­ய­தொரு சிறப்­பான பதி­வு­களைக் கொண்ட அர­சாங்கம் என்று எமது நல்­லாட்சி அரசைக் குறிப்­பிட முடியும்.

பொரு­ளா­தார ரீதி­யாக நோக்­கு­மி­டத்து, நாங்கள் அர­சாங்­கத்தைப் பொறுப்­பேற்றுக் கொண்­ட­போது பொரு­ளா­தாரம் மிகவும் மோச­மா­ன­தொரு நிலை­யி­லேயே காணப்­பட்­டது. சிலர் கடன்­தொகை கூடி­யி­ருப்­ப­தாகக் கூறு­கின்­றார்கள். கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலத்தில் பெற்ற கடன்­களை எடுத்­துக்­கொண்டால், அவை ஏற்­க­னவே பெற்ற கடனை மீளச்­செ­லுத்­து­வ­தற்­கா­கவே முழு­வதும் உப­யோ­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

அதே­போன்று கடந்த அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை எமது அர­சாங்­கத்தின் ஊடாக மீளப் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. இவ்­வ­ரிச்­ச­லு­கையின் மூலம் 300 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாகக் காணப்­பட்ட ஏற்­று­மதி 1300 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாக உயர்ந்­தது. கடந்த ஆட்­சியில் பல்­வேறு கார­ணங்­க­ளினால் இடை

­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த இவ்­வ­ரிச்­ச­லு­கையை ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி மீண்டும் பெற்­றுக்­கொள்­வ­தற்கு எம்மால் முடி­யு­மாக இருந்­தது.

கேள்வி : ஐக்­கிய தேசியக் கட்­சியின் கூட்­டணி அமைக்கும் முன்­னெ­டுப்­புக்கள் பற்றிக் கூற­மு­டி­யுமா?

பதில் : நாங்கள் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யுள்ள நிலையில், அது தொடர்பில் பல்­வேறு கட்­சி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. எமது கட்­சியைப் பொறுத்­த­வரை முதலில் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி சார்பில் கள­மி­றங்கும் வேட்­பா­ளரை தெரிவு செய்ய வேண்டும். அதன் பின்­னரே கூட்­டணி அமைக்க முடியும். ஏனெனில் கூட்­ட­ணியில் அங்கம் வகிப்போர் வேட்­பா­ள­ருடன் ஒரு இணக்­கப்­பாட்­டிற்கு வர­வேண்­டிய தேவை­யி­ருப்­பதால் அதுவே பொருத்­த­மாக இருக்கும்.

இந்­நி­லையில் எம்­முடன் கூட்­டணி அமைக்­க­வி­ருக்கும் கட்­சி­யொன்று

'ஐக்­கிய தேசியக் கட்சி விரை­வாக வேட்­பா­ள ரைத் தெரி­வு­செய்ய வேண்டும்" என்று கூறி­யி­ருக்­கி­றது. சில­வே­ளை­களில் நாம் யாரை வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்க வேண்­டு­மென்றும் அவர்கள் கூறலாம். எனவே அதற்கு முன்னர் நாம் எமது கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரைத் தெரி­வு­செய்ய வேண்டும்.

கேள்வி : அவ்­வா­றெனின் தற்­போது வேட்­பாளர் தேர்வு நிறை­விற்கு வந்­தி­ருக்­கின்­றதா?

பதில் : இல்லை, இவ்­வி­டயம் குறித்த உத்­தி­யோ­க­பூர்வ தீர்­மா­னங்கள் எவையும் இன்­னமும் இல்­லாத போதிலும் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற ரீதி­யாக நாட­ளா­விய ரீதியில் எமது கட்­சியின் பிரதித் தலை­வரை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அறி­விக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்­கி­றது.

கேள்வி : பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கோத்­தா­பய ராஜபக் ஷ நிறுத்­தப்­பட்­டுள்­ளமை குறித்து உங்­க­ளு­டைய அபிப்­பி­ராயம்?

பதில் : இலங்கை ஒரு ஜன­நா­யக நாடாகும். சர்­வ­தே­சத்தின் மத்­தியில் இலங்­கைக்­கென ஒரு அங்­கீ­காரம் உள்­ளது. எமது நாட்டின் சுயா­தீ­னத்­து­வத்தைப் பாது­காத்துக் கொள்ளும் அதே­வேளை, நாம் உலக நாடு­களில் ஒரு அங்­க­மா­கவே இருக்­கின்றோம். ஐக்­கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடென்ற ரீதியில் சர்­வ­தேச சட்­டத்

­திட்­டங்­க­ளுக்கும், மனித உரி­மை­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்க வேண்­டிய கடப்­பாடு எமக்கு இருக்­கி­றது.

அதே­போன்று எமது நாட்டைச் சேர்ந்த பலர் பிற­நா­டு­களில் வசிக்­கின்­றார்கள், தொழில் புரி­கின்­றார்கள். அவர்கள் நம் நாட்டில் வசிக்­க­வில்லை என்­றா­லும்­கூட எமது பிர­ஜைகள் என்ற அடிப்­ப­டையில் அவர்­க­ளையும் நாம் பாது­காக்க வேண்டும். அதற்கு சர்­வ­தே­சத்­துடன் சுமு­க­மான உற­வு­களைப் பேணு­வது அவ­சி­ய­மாகும். மேலும் நாம் மனித உரி­மை­களைப் பாது­காக்க வேண்­டும் என ஏனையோர் கூறு­கின்­றார்கள் என்­ப­தற்­காக இருக்­கக்­கூ­டாது. மாறாக அது பாது­காக்­கப்­பட வேண்டும் என்று நாமா­கவே உணர்ந்து அதனை செய்ய வேண்டும்.

எனவே இம்­முறை மக்கள் தெரிவு செய்ய இருப்­பது நப­ரொ­ரு­வரை மாத்­தி­ர­மல்ல என்­பதை புரிந்­து­கொள்ள வேண்டும். யாருக்கு மனித உரி­மைகள் மற்றும் மனி­தா­பி­மானம் தொடர்பில் வலு­வான பின்­னணி இருக்­கி­றது என்­பதை கவ­னத்­திற்­கொள்ள வேண்டும். அத்­தோடு இது இரு நபர்­க­ளுக்கு இடை­யி­லான தெரிவு மாத்­தி­ர­மல்ல, இரு செயன்­மு­றை­க­ளுக்கு இடை­யி­லான தெரி­வு­மாகும். ஜன­நா­யகம் மற்றும் அபி­வி­ருத்தி போன்ற விட­யங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட வேண்டும்.

கேள்வி : கடந்த காலங்­களில் உங்­க­ளுடன் சில விட­யங்­களில் ஒன்­றி­ணைந்து செயற்­பட்ட மக்கள் விடு­தலை முன்­னணி சார்பில் இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கென வேட்­பா­ள­ரொ­ருவர் கள­மி­றக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இது­கு­றித்து என்ன நினைக்­கி­றீர்கள்?

பதில் : அவர்கள் தனி­யொரு கட்சி என்ற அடிப்­ப­டையில் ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பா­ள­ரொ­ரு­வரை கள­மி­றக்­கலாம். எனினும் தேர்­தல்கள் ஆணை­யா­ளரால் வேட்­பு­ம­னுக்கள் கோரப்­பட்டு, அவை தாக்கல் செய்­யப்­பட்ட பின்­னரே யார் போட்­டி­யி­டு­கின்­றார்கள், யார் போட்­டி­யி­ட­வில்லை என்ற இறுதி நிலை­வ­ரத்தை அறிந்­து­கொள்ள முடியும்.

கேள்வி : நாட்டின் ஜன­நா­யகம் ஒரு­பு­ற­மி­ருக்க ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் நிலவும் ஜன­நா­யகம் பற்றிக் கூற­மு­டி­யுமா?

பதில் : எமது கட்­சிக்­கெனப் பிரத்­தி­யே­க­மான யாப்பு ஒன்று உண்டு. எமது நாட்டில் சில கட்­சி­க­ளுக்கு யாப்பு என்­ப­தே­யில்லை. ஐக்­கிய தேசியக் கட்சி அவ்­வா­றா­னது அல்ல. எமக்­கென யாப்­பொன்றைக் கொண்­டி­ருப்­ப­துடன், ஜன­நா­யக அடிப்­ப­டை­யி­லேயே செயற்­ப­டு­கின்றோம்.

தற்­போது நாம் வர­லாற்றின் முக்­கி­ய­மா­ன ­தொரு திருப்­பத்தில் இருக்­கின்றோம். எமது கட்­சியில் அந்த வாய்ப்பை புதி­ய­ வ­ரொ­ரு­வ­ருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்­தி­ருக்­கி­றது.

எனினும் இவ்­வி­ட­யத்தில் நபரை மாத்­திரம் கருத்­திற்­கொள்ள முடி­யாது. மாறாக அவ்­வேட்­பாளர் மற்றும் கட்சி கொண்­டி­ருக்­கக்­கூ­டிய வியூ­கத்­தையும் நாட்­டிற்­கான எதிர்­கால செயற்­திட்­டத்­தையும் கவ­னத்­திற்­கொள்ள வேண்டும். எமது கட்­சியின் யாப்பை மேலும் ஜன­நா­யக மயப்­ப­டுத்த வேண்டும்.

கேள்வி : உங்­க­ளது நிலைப்­பாட்டின் அடிப்­ப­டையில் நோக்­கு­கையில் மக்கள் நப­ருக்­கா­கவா அல்­லது கொள்­கைக்­கா­கவா வாக்­க­ளிக்­கின்­றார்கள்?

பதில் : இரு வகை­யான மக்­களும் இருக்­கவே செய்­கி­றார்கள். சிலர் ஒரு கட்­சியின் வேட்­பா­ளரை விடவும் அக்கட்சியின் கொள்கை மற்றும் நாட்டில் முன்னெடுக்கவிருக்கும் செயற்திட்டங்கள் என்பவற்றுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றார்கள். மேலும் சிலர் வேட்பாளர் யார் என்பதை கருத்திற்கொள்கிறார்கள். எனினும் இவ்விரு தரப்புமே கொள்கைக்கு சற்று அதிக முக்கியத்துவம் அளிக்கும் நிலையொன்று தோன்றியிருக்கிறது.

கேள்வி : எதிர்காலத்தில் நாட்டில் ஏற்பட வேண்டிய மாற்றம் எத்தகையதாக இருக்க வேண்டும்?

பதில் : பொருளாதார ரீதியில் எமது நாடு மாற்றமடைய வேண்டும். நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற நிலையிலிருந்து நடுத்தர உயர்ந்த வருமானம் பெறும் நாடு என்ற நிலைக்கு நகரும் போது சர்வதேச நாடுகளாலும், அமைப்புக்களாலும் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் மற்றும் உதவிகள் என்பன இல்லாதுபோகும். எனவே போட்டித்தன்மை வாய்ந்ததொரு பொருளாதாரக் கட்டமைப்பிற்கு ஏற்புடைய வகையில் நாம் எமது கொள்கைகளையும், திட்டங்களையும் வகுத்துக்கொள்ள வேண்டும்.

( நேர்காணல் - நா. தனுஜா )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48