Cavalry Supercross 2016 பந்தயம் ஜுனில் ஆரம்பமாகவுள்ளது

Published By: Priyatharshan

16 May, 2016 | 12:06 PM
image

இலங்கையின் மோட்டார் பந்தய நாட்காட்டியில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற நிகழ்வுகளுள் ஒன்றான Cavalry Supercross பந்தயம் எதிர்வரும் ஜுன் மாதம் 12 ஆம் திகதி குருணாகல், பன்கொல்லயிலுள்ள Cavalry Supercross பந்தயத் திடலில் ஆரம்பமாகவுள்ளது. 

இலங்கை பந்தய மோட்டார் வாகன ஓட்டுனர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் சங்கத்துடன் இணைந்து இப்பந்தையம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை இராணுவத்தின் கவசப் படைப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு, “CEAT Sri Lanka Super Series 2016” பந்தயத் தொடரின் நான்கு பந்தயங்களுள் முதலாவது பந்தய நிகழ்வாக அமைந்துள்ளதுடன், நாட்டிலுள்ள மிகவும் திறமையான பந்தய மோட்டார் வாகன ஓட்டுனர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

2010 ஆம் ஆண்டில் பிரிகேடியர் இந்துனில் ரணசிங்கவின் எண்ணக்கருவில் அறிமுகமாக்கப்பட்ட Cavalry Supercross பந்தயமானது பிரதானமாக, யுத்தத்தில் உயிர்நீத்த அல்லது ஊனமுற்ற படை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு அவர்களின் நலன்புரி வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதியை திரட்டுவதற்கு உதவி வருகின்றது. 

மேலும் படை அதிகாரிகள் மற்றும் வீரர்களின் தங்குமிட வசதி, பணியாற்றும் சூழல், பொழுதுபோக்கு வசதிகள்ரூபவ் மருத்துவ வசதி, விடுதி மற்றும் உணவுக்கூட வசதிகள் போன்ற முகாம்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த படையணிக்கு இவ்வாறான நலன்புரிச் செயற்திட்டங்களுக்குத் தேவையான அளவில் கணிசமான வருமானத்தை ஈட்டித்தருகின்ற நிகழ்வாக Cavalry Supercross அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை இராணுவ பிரதம அதிகாரியும், கவசப் படைப் பிரிவின் கட்டளையிடும் அதிகாரியுமான மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸின் தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் ஏற்பாட்டுக் குழுவின் தலைமை அதிகாரியான பிரிகேடியர் இந்துனில் ரணசிங்க குறிப்பிடுகையில்,

“மீண்டும் Cavalry Supercross பந்தயத்தை ஏற்பாடு செய்வதையிட்டு நாம் மிகவும் பூரிப்படைந்துள்ளோம்.

சூழவுள்ள பகுதியை கருத்திந் கொண்டு விசேடமாக வடிவமைக்கப்பட்ட பந்தயத் திடலில் இது இடம்பெறவுள்ளதால், மோட்டார் வாகன ஓட்டுனர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு பாரிய சவாலாக அமையவுள்ளதுடன், இப்பந்தயங்களை நேரில் கண்டுகளிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்ற பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்களுக்கு மயிர்கூச்சொறியும் அனுபவத்தையும் வழங்கவுள்ளது. 

மேலும் எமது ஓட்டுனர்கள் மற்றும் ஓட்டிகளின் திறமைகளைக் காண்பிப்பதற்கான ஒரு களமாக அமைவதுடன் எதிர்கால உள்நாட்டு மற்றும் சர்வதேச பந்தயங்களில் கலந்துகொள்வதற்கு அவர்கள் தம்மை தயார்செய்து கொள்ளவும் உதவும்” என தெரிவித்தார்.

Cavalry Supercross பந்தயம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலாக அது இலங்கையிலுள்ள மிகவும் திறமையான மோட்டார் வாகன ஓட்டுனர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளை தன்பால் ஈர்த்துள்ளது. 

2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற அங்குரார்ப்பண பந்தயத்தில் பசிந்து பீரிஸ் மற்றும் கயான் சந்தருவான் ஆகியோர் முறையே “மிகச் சிறந்த ஓட்டுனர்” மற்றும் “மிகச் சிறந்த ஓட்டி” ஆக வெற்றி பெற்றனர். 

அதன் பின்னர் கயான் சந்தருவான் இரு முறை (2012 மற்றும் 2013) “மிகச் சிறந்த ஓட்டி” ஆக வெற்றி பெற்றதுடன் 2011 ஆம் ஆண்டில் ஜப்பானிய ஓட்டியான டொமோயா சுசுகி மிகச் சிறந்த ஓட்டியாக வெற்றி பெற்றிருந்தார். “மிகச் சிறந்த ஓட்டுனர்” பிரிவில் அஷன் சில்வா இரு தடவைகளும் (2012 மற்றும் 2013)ரூபவ் தினேஷ் தெஹெரகொட  2011 ஆம் ஆண்டிலும் வெற்றி பெற்றிருந்தனர். 

கடைசியாக 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற Cavalry Supercross பந்தயத்தில் ஷெஹான் சீ அதிகாரி “மிகச் சிறந்த ஓட்டி” ஆகவும் அஷான் சில்வா “மிகச் சிறந்த ஓட்டுனர்” ஆகவும் தெரிவு செய்யப்பட்டனர். 

இந்த ஆண்டும் மிகச் சிறந்த ஓட்டுனர் மற்றும் மிகச் சிறந்த ஓட்டிக்கு “இலங்கை கவசப் படையணி தலைமை அதிகாரியின் சவால் கிண்ணம்” மற்றும் “Sonna Vander Hoeven ஞாபகார்த்த சவால் கிண்ணம்” ஆகியன முறையே வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வின் கடந்த கால வரலாற்றை நினைவுபடுத்திய பிரிகேடியர் ரணசிங்க தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

“2010 ஆம் ஆண்டு, இலங்கை கவசப் படையணியின் 5 ஆவது வேவு ரெஜிமென்ட் அணியின் தாயகமான “Ironside முகாம்” அமைந்துள்ள பன்கொல்லவில் Cavalry Supercross பந்தயத்தை ஏற்பாடு செய்யும் திட்டத்தை நாம் முன்வைத்திருந்தோம். 

உள்நாட்டிலுள்ள ஓட்டுனர்கள் மற்றும் ஓட்டிகளுக்கு இப்பந்தயத் திடல் மிகவும் சவால்மிக்க ஒன்றாக அமையும் என நாம் எண்ணினோம். இப்பந்தயத்திடல் குருணாகலில் மலைநாட்டு தரை வடிவமைப்பைக் கொண்டுள்ள “ரிதியகல்ல” மற்றும் “ரம்படகல” ஆகியவற்றை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. 

அப்போது இராணுவத் தளபதியாக கடமையாற்றிய லெப்ரினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய மற்றும் இலங்கை இராணுவ கவசப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் நிரஞ்சன் ரணசிங்க ஆகியோர் இதற்குத் தேவையான வழிகாட்டல், ஊக்கம் மற்றும் பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்ததை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகின்றேன். 

மோட்டார் பந்தயத் துறையில் அனுபவம்மிக்க இருவரான ஹான்ஸ் ரல்ஃப் கார்பின்ஸ்கி மற்றும் திரு. நிஷான் வாசலதந்திரி ஆகியோர் பந்தயத் திடலை திட்டமிட்டு, வடிவமைக்கும் சவால்மிக்க பணியை செவ்வனே நிறைவேற்றியிருந்தனர். மேலும் அப்போது இலங்கை பந்தய மோட்டார் வாகன ஓட்டுனர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் சங்கத்தின் தலைவராகச் செயற்பட்ட  ரொட்னி மேசன், மேஜர் (ஓய்வு நிலை) டில்ஹான் ஜெயவர்த்தன, புபுது விக்கிரம, பாலித ரட்ணாயக்க மற்றும் பல வெற்றிகளைக் குவித்த ஓட்டியான கயான் சந்தருவான் ஆகியோரும் இச்செயற்திட்டத்திற்கு தங்களது நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கிருந்ததுடன் இத்தகைய பின்னணியில் Cavalry பந்தயத் திடல் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இச்செயற்திட்டத்தின் நோக்கங்களுக்கு அமைவாக, இலங்கை இராணுவ கவசப் படைப் பிரிவு இது வரை உயிர்நீத்த, ஊனமுற்ற மற்றும் சேவையிலுள்ள உறுப்பினர்களுக்கு 18 வீடுகளை நிர்மாணித்துள்ளது. மூன்று விடுமுறை பங்களாக்கள் நிர்மாணிக்கப்பட்டமை, பயிற்சி நிலையம் மற்றும் படை வீரர்கள் நன்மைக்காக அனைத்து ரெஜிமென்ட் பிரிவுகளுக்கும் நலன்புரி செயற்திட்டங்களுக்கு நிதியுதவி அளித்தமை, உதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த உறுப்பினர்களுக்காக மருத்துவ மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்தமை, இராணுவத்தின் தீரச் செயல் (Brave Heart)மற்றும் “Viru Daru” செயற்திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்கியமை மற்றும் படைப்பிரிவினுள் உட்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்கியமை போன்ற செயற்பாடுகளை கடந்த ஐந்து ஆண்டுகளில் Cavalry Supercross மூலமாக பயனடைந்த அல்லது நன்கொடையளிக்கப்பட்ட செயற்திட்டங்களாக குறிப்பிட்டுக் கூற முடியும்.

“CEAT Sri Lanka Super Series 2016” பந்தயத் தொடரில் Cavalry Supercross பந்தயத்தைத் தொடர்ந்து, பண்ணல சுற்றுப் போட்டி (ஜுலை 31), கொமாண்டோ சவால் பந்தயம் (ஒக்டோபர் 9) மற்றும் பண்ணல சுற்றுப் போட்டி 2 ஆம் கட்டம் (நவம்பர் 13) ஆகியனவும் இடம்பெறவுள்ளதுடன், இதன் பின்னர் ஒட்டுமொத்த பிரிவுகளின் வெற்றியாளர்களின் விபரங்கள் வெளியிடப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35