தலிபான் தலைவர்களை அமெரிக்காவில் இரகசியமாக சந்திக்கவிருந்தார் டிரம்ப்- பின்னர் நடந்தது என்ன?

Published By: Rajeeban

08 Sep, 2019 | 09:02 AM
image

தலிபான் தலைவர்களுடனான இரகசிய பேச்சுவார்த்தையை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலிபானுடனான சமாதான முயற்சிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தலிபானின் முக்கிய தலைவர்களும் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியும் காம்டேவிட்டில் என்னை இரகசியமாக சந்திக்கவிருந்தனர் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்காவிற்கு புறப்படுவதற்கு முன்னர் தலிபான் தலைவர்கள் காபுலில் அமெரிக்க படைவீரர் ஒருவர் உட்பட 11 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ளனர் என டிரம்ப் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நான் உடனடியாக சந்திப்பை இரத்துசெய்துவிட்டு சமாதான முயற்சிகளை இடைநிறுத்தியுள்ளேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தலிபான் தலைவர்களை அமெரிக்காவிற்கு பேச்சுவார்த்தைகளிற்கு அழைப்பது முன்னொருபோதும் இடம்பெறாத விடயம என்பதாலும் ஆப்கானில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள தலிபானிற்கு எதிரான போரில் முக்கிய திருப்புமுனை என்பதாலும் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவல் அதிர்ச்சியளிக்கின்றது என முன்னாள் இராஜங்க திணைக்கள பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.

இது தலிபானிற்கு அரசியல் ரீதியில் மிகுந்த முக்கியத்துவத்தையும் பிரச்சாரத்தையும் வழங்கிவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52