உலகின் மிகப்பெரிய உணவகம் சிக்காகோவில் திறப்பு

Published By: Daya

07 Sep, 2019 | 05:19 PM
image

உலகின் மிகப்பெரிய ஸ்டார்பக்ஸ் உணவகம் சிக்காகோவில் திறக்கப்படவுள்ளது.

உலகில் அதிக துரித உணவகங்கள் வைத்துள்ள ஒரு நிறுவனமாக ஸ்டார்பக்ஸ் உணவகம் திகழ்வதுடன் இந்நிறுவனம் உலகளவில் 30,000 இடங்களுக்கு மேல் இயங்கி வருகின்றது.

உலகளவில் டோக்யோவில்தான் மிகப்பெரிய ஸ்டார்பக்ஸ் உணவு விடுதி செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நவம்பர் 15ஆம் திகதி சிக்காகோவில் 43 ஆயிரம் சதுர அடியில் 4 தளங்கள் கொண்ட ஸ்டார்பக்ஸ் உணவகத்தை திறக்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புதிய தளமாக இது இருக்குமென நம்பிக்கை தெரிவித்துள்ள ஸ்டார்பக்ஸ், இங்கு சிறப்பான கோப்பி தேனீர்களை, வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் அதன் வளாகத்திலேயே கோப்பி விதைகளை வறுக்கும் ரோஸ்டரிகளும், அதன் சேமிப்பகங்களும் இருக்கும் என்றும், பார், கிரேப்ட் காக்டெயிலுடன் வழக்கத்தை விட வித்தியாசமாக பல ஆடம்பர உணவுப் பண்டங்கள் இங்கு கிடைக்குமென குறிப்பிட்டுள்ளது.

சிக்காகோவில் கோப்பிக்கான மிக உணர்வுப் பூர்மான சூழலை உருவாக்கித் தருவதாக 2017 இல் ஏற்கெனவே அறிவித்த நிலையில், கலைநயம்மிக்க கட்டட வடிவமைப்பு மூலம் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் மத்தியில் மகிழ்ச்சியோடு செல்வதற்கு உகந்த 3ஆவது இடமாக இது இருக்குமென ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33