இலங்கை கிரிக்கெட் அணியுடன் நடைப்பெறவுள்ள டெஸ்ட் போட்டிக்காக நியூசிலாந்து அணியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

பிரண்டன் மெக்கலம் தலைமையிலான 12 பேர் கொண்ட நியூசிலாந்து அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கடந்த போட்டிகளில் திறமையை வெளிக்காட்டாத அனுபவம் வாய்ந்த வீரர்களான மார்டின் கப்டில் மற்றும் மார்க் க்ரேக் ஆகியோர் தொடர்ந்தும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி இம் மாதம் 10 ஆம் திகதி டனீடனில்  ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.