காலை இழந்த மாணவன்; மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை

Published By: Daya

07 Sep, 2019 | 11:46 AM
image

தனக்கு  கால் இல்லாத போதும் விளையாட்டுக்கு ஊனம் தடை கிடையாது என்பதை நிரூபித்து தேசிய போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை மாணவன் ஒருவன் வெற்றுள்ளார். காத்தான் குடியைச் சேர்ந்த 17வயதான அஹமட் அனீக் என்ற மாணவரே இவ்வாறு பதக்கங்களை பெற்றுள்ளார். 
தனக்கு ஒரு கால் இல்லாத போதும்  விளையாட்டுக்கு ஊனம் எவ்விதத்திலும் தடை கிடையாது என்பதை நிரூபித்து (NPAC -National Para Athletics Championships-2019)    தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் எம்.எம்.அஹமட்  அனீக் என்ற மாணவன் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.




கடந்த 5,6 ஆம் திகதிகளில் ( நேற்று முன்தினமும்,நேற்றும்) கொழும்பு சுகததாச சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற NPAC -National Para Athletics Championships-2019 தேசிய  பரா மெய்வல்லுனர் போட்டியில் 100 மீற்றர் ஓட்டம்,200 மீற்றர் ஓட்டம்,நீளம் பாய்தல் போன்ற மூன்று போட்டிகளில் முதலிடம் பெற்று மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.


காலம் சென்ற (மர்ஹூம்களான) முஹம்மட் மஸ்ஹூர் -சித்தி பாத்திமா தாதி உத்தியோகஸ்தர் (NURSE)  தம்பதிகளின் புதல்வாரன இவர் கடந்த காலங்களில்  உதைப் பந்து விளையாடும் போது ஏற்பட்ட உபாதை காரணமாக 2017ஆம் ஆண்டு ஒரு காலில் புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 2018ஆம்  ஆண்டு கால் ஒன்றை இழந்தார். இந்நிலையில் செயற்கை கால் ஒன்றின் உதவியுடன் தற்போது இயங்கி வருகின்றார்.




அத்தோடு தேசிய,சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு பிலேட் புட்- (BLADE FOOT) செயற்கை கால் இல்லாவிட்டால் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதோடு குறித்த செயற்கை கால் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு 13 இலட்சம் தொடக்கம் 15 இலட்சம் ரூபா செலவாகும் எனவும் அதற்கு தனக்கு வசதி கிடையாது எனவும் குறித்த செயற்கை கால் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு வசதி படைத்தவர்கள்,அரசியல்வாதிகள் ஆகியோர் உதவி செய்யுமாறு இம்மாணவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




வரகா பொல தாருல் ஹஸனாத் அகடமியில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்று வரும் இவர் அதே அகடமியில் (AAT) ஏ.ஏ.ரீ. கற்கை நெறியையும் தொடர்ந்து வருவதோடு (ROW BOAT) ரோபோட் இராணுவத்தின் விசேட பயிற்சிப் பிரிவில் பயிற்சி பெற்று வருவதோடு ஊனமுற்றோருக் கான (REHAB LANKA  SPORTS CLUB) றிஹப் லங்கா விளையாட்டுக் கழகத்திலும் அங்கத்தவராகச் செயற்பட்டு கல்வித் துறையிலும்,விளையாட்டுத் துறையிலும் தனது சாதனைகளை நிலை நிறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35