சந்திரயான் -2 ன் தொடர்பு துண்டிப்பு : மோடியை கட்டித்தழுவி அழுத இஸ்ரோ தலைவர் சிவன்..! : காணொளி இணைப்பு

Published By: R. Kalaichelvan

07 Sep, 2019 | 10:01 AM
image

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஒரு கலமான விக்ரம், நிலவில் தரையிறங்க 2 கிலோ மீற்றர், தூரம் இருந்த நிலையில் கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்த நிலையில் விஞ்ஞானிகள் பெறும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிகழ்வை பிரதமர் மோடி, இஸ்ரோ மையத்தில் இருந்து நேரடியாக பார்வையிட்டார். விக்ரம் உடனான தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்ற இந்நிலையில்,

சந்திரயான் 2 விண்கலத்துடனான தொடர்பு 5 சதவீதம் மட்டுமே இழந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

அத்தோடு விஞ்ஞானிகளிடம் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என தெரிவித்த பிரதமர் மோடி மேலும் தெரிவித்ததாவது,

"உங்களின் கனவுகளும், திட்டங்களும் என்னை விடவும் வலிமையானவை. உங்களை சந்தித்து உரையாட வந்த நான், உங்களிடம் இருந்து ஊக்கத்தை பெற்றுக் கொண்டேன் " என விஞ்ஞானிகளிடம் தெரிவித்தார்.

நம்பிக்கையான வார்த்தைகளை பேசிய  பிரதமர் மோடியின் உரையை கேட்ட பெண் விஞ்ஞானிகள் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

உரையை நிறைவு செய்து புறப்பட்ட மோடியை வழியனுப்ப சென்ற இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52