பலாலி விமான நிலையத்துக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இழப்பீடு - அர்ஜுன 

Published By: Vishnu

06 Sep, 2019 | 04:41 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான உரித்துக்களை உறுதிப்படுத்தினால் அதற்கான தக்க  இழப்பீடுகளை வழங்கத்  தயாராக இருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பாரளுமன்றில் தெரிவித்தார்.

அத்துடன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்தும் நோக்கில் 349 ஏக்கர் பொது மக்களின் காணிகள் 1950 – 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிகரிக்கப்பட்டன. 

716 பேர் இக்காணிகளின் உரிமையாளர்களாக இருந்துள்ள நிலையில், அவர்களில் 215 பேருக்கு மட்டுமே இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏனையவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதற்கான  சான்றுகள் இல்லை. இக்காணிகளுக்கான உரித்தை உரியவர்கள் உறுதிப்படுத்தினால் இழப்பீடுகளை வழங்க நான் தயார். 

மேலும், பலாலி விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கென 1984 ஆம் ஆண்டு 397 உரிமையாளர்களது 64 ஏக்கர் காணிகள்  சுவீகரிக்கப்பட்டன, இவர்களுக்கான இழப்பீடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை  காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் இறுதி செய்யப்பட்டதும் இவர்களுக்கான  இழப்பீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47