பலாலி விமான நிலைய நுழைவாயில் மாற்றத்திற்கு பொது மக்களின் காணிகள் மேலும் சுவீகரிக்கப்படுமா ? : டக்ளஸ்

Published By: R. Kalaichelvan

06 Sep, 2019 | 03:52 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பலாலி விமான நிலைய முதற்கட்ட அபிவிருத்திக்காக ஏற்கனவே பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் மாற்றத்திற்கு பொது மக்களின் காணிகள் மேலும் சுவீகரிக்கப்படுமா என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று 27/2 இன்  கீழ் சிறப்புக் கேள்வி ஒன்றினை எழுப்புகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்தும் நோக்கில் 349 ஏக்கர் பொது மக்களின் காணிகள் 1950 – 1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிகரிக்கப்பட்டதாகவும், 716 பேர் இக்காணிகளின் உரிமையாளர்களாக இருந்துள்ள நிலையில், அவர்களில் 215 பேருக்கு மட்டுமே இழப்பீடுகள் கிடைத்துள்ளதாகவும், மேற்படி காணி உரிமையாளர்களில் பலர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில், அவர்களின் உரித்தானவர்கள் உரிய உறுதிப்படுத்தல்கள் இன்மையால் குறிப்பிட்ட இழப்பீடுகளைப் பெற இயலாத நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், பலாலி விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கென 1984ஆம் ஆண்டு 397 உரிமையாளர்களது 64 ஏக்கர் காணிகள்  சுவீகரிக்கப்பட்டதாகவும், இவர்களுக்கான இழப்பீடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை எனவும் அறியக் கிடைத்துள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58