மேற்­கிந்­தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி­க­ளுக்­கி­டை­யி­லான தொடர் ஒன்றை இலங்கையில் நடத்­து­வ­தற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆலோ­சித்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பாகிஸ்­தானில் நில­வு­கின்ற பாது­காப்பு குறை­பா­டுகள் கார­ண­மாக சர்­வ­தேச கிரிக்கெட் அணிகள் அங்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யா­டு­வ­தற்கு அச்சம் தெரி­வித்­து­வ­ரு­கின்­றன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ஏகப்­பட்ட நஷ்­டம் ஏற்­பட்டு வரு­கின்­றது.

இந்­நி­லையில் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் பாகிஸ்தான் அணி தொடர்­களை நடத்­தி­வ­ரு­கி­றது. எனினும் அங்கு போட்­டி­களை நடத்­து­வ­தால் ஈட்­டப்­ப­டு­கின்ற வரு­மானம் போதா நிலை காணப்­ப­டு­வ­தா­க தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் இலங்­கையில் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் அளவில் மேற்­கிந்­தியத் தீவுகளுடனான கிரிக்கெட் தொடரை நடத்துவது குறித்து ஆராயப்படுவதாக கூறப்படுகிறது.