வழக்கை ஒத்திவைத்து தமிழ் குடும்பம் உடனடியாக நாடு கடத்தப்படுவதை தடுத்தது நீதிமன்றம்

Published By: Rajeeban

06 Sep, 2019 | 11:21 AM
image

இலங்கை தமிழ் தம்பதியினர் தொடர்பான வழக்கை  எதிர்வரும் 18 ம் திகதி வரை ஒத்திவைத்துள்ள அவுஸ்திரேலிய நீதிபதி தமிழ் தம்பதியினரின் இரண்டாவது மகளிற்கு பாதுகாப்பு கோருவதற்கான உரிமையில்லை என்பதற்கான  மேலதிக ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு அவுஸ்திரேலிய குடிவரவு துறை அமைச்சரிற்கு உத்தரவிட்டுள்ளார்.

செப்டம்பர் 18 ம் திகதி மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக நீதிபதி மொர்டெகாய் புரொம்பேர்க்  அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் நடேஸ் பிரியா தம்பதியினரையும் குழந்தைகளையும் நாடு கடத்த முடியாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

18 ம் திகதியே வழக்கின் இறுதி நாளாகயிருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை நான்கு மணிக்கு தமிழ் குடும்பத்தினர் நாடு கடத்தப்படவிருந்த நிலையிலேயே  நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளத.

நீதிபதியின் உத்தரவின் பின்னர் கருத்து தெரிவித்துள்ள நடேஸ்பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரினா போர்ட் தமிழ் குடும்பத்தினை அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிப்பதற்கு அரசாங்கம் அமைச்சரிற்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

இந்த விவகாரம் முழுமையான  நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டால் இறுதி முடிவெடுப்பதற்கு பல மாதங்கள் பிடிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அது வரை குடும்பத்தினர் கிறிஸ்மஸ் தீவிலேயே தங்கியிருக்கவேண்டிய நிலையேற்படும் அவர்கள் அவ்வாறு தடுத்துவைக்கப்படுவது திருப்திகரமான நடவடிக்கையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59