பிரித்­தா­னிய எலி­ஸபெத் மகா­ரா­ணியார் 10 வயது சிறு­மி­யாக இருந்த போது எடுக்­கப்­பட்ட இதற்கு முன் ஒரு­போதும் அறி­யப்­ப­டாத புகைப்­ப­ட­மொன்று முதல் தட­ வை­யாக சனிக்­கி­ழமை இரவு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

எலி­ஸபெத் மகா­ரா­ணி­யாரின் 90 ஆவது பிறந்தநாள் கொண்­டாட்­டங்­களை முன்­னிட்டு மேற்­படி புகைப்­படம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

1930 ஆம் ஆண்டில் வின்ட்ஸர் மாளி­கையில் எடுக்­கப்­பட்ட அந்தப் புகைப்­ப­டத்தில் எலி­ஸபெத் மகா­ரா­ணியார் தனது தந்­தை­யான ஆறாம் ஜோர்ஜ் மன்னர் மற் றும் சகோ­த­ரி­யான இள­வ­ரசி மார்க்­ரெட் சகிதம் காணப்­ப­டு­கிறார்.

மேற்­படி புகைப்­ப­டத்தில் மன்னர் ஜோர்ஜ் ஜும் இளவரசி மார்க்ரெட்டும் தமது வளர்ப்பு நாய்களுடன் காணப்படு கின்றனர்.