( க.கிஷாந்தன்)

 

கொலையுடன் தொடா்புடைய இரண்டு பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க  மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளார்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ஜின் தோட்டத்தில் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஒருவரின் கொலையுடன் தொடர்புபட்ட இருவருக்கே இத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து நடத்திய விசாரணைகளின் பின்னரே இவ்வாறு தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலையுடன் தொடா்புடைய 3 பேர் குற்றாவாளிகளாக இனம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

எல்ஜின் தோட்டத்தை சேர்ந்த இராஜேந்திரன் ரஜினிகாந்த் (வயது 31), பன்னீர்செல்வம் தியாகராஜா (வயது 29) ஆகிய இரண்டு பேருக்கும் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

மேற்படி சந்தேக நபா்கள் எல்ஜின் தோட்டத்தில் உள்ள சுப்பையா முருகையா என்பவரை தனிப்பட்ட பிரச்சினை காரணமாக அடித்து கொலை செய்துள்ளனர்.

இதேவேளை, இந்தக் கொலையுடன் தொடா்புடைய 3 ஆவது சந்தேக நபர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.