ஊவா மாகாண  தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டுகோள்

Published By: Digital Desk 4

05 Sep, 2019 | 06:53 PM
image

ஊவா மாகாணத்தின்  தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடடங்களுக்கு கல்வியியற் கல்லூரியில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை ஊவா மாகாணத்திலேயே தமிழ் மொழிமூலமான பாடசாலைகளில் காணப்படும்  சேவைக்கான வெற்றிடங்களில் நியமனங்களை பெற்றுத்தருமாறு ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான், கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுடன் சந்திப்பினை மேற்கொண்டார்.  

இதில் ஊவா மாகாணத்தில் மாத்திரம் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் 365 ஆசிரியர் வெற்றிடங்கள் கானப்படுகின்றன. இவ் ஆசிரியர் பற்றாக்குறை மத்தியிலேயே ஊவா மாகாணத்தை சேர்ந்த தமிழ் மொழிமூலமான பாடசாலையில் இருந்து மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று கல்வியற் கல்லூரிக்கு ஆசிரியர் பயிற்சிக்காக தெரிவாகி இருக்கின்றார்கள். 

தற்போது ஊவா மாகாணத்தில் தமிழ் மொழிமூலமான பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு ஊவா மாகாணத்தில் இருந்து கல்வியியற் கல்லூரியில் ஆசிரியர்களாக பயிற்சியை பூர்த்தி செய்தவர்களில் 13 ஆசிரியர்கள் மாத்திரமே ஊவா மாகாண தமிழ் மொழி மூலமாக பாடசாலைக்கு  நியமனங்கள் நியமிக்கப்பட்டுள்ளது. 

ஏனைய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வேறு மாகாணங்களுக்கு நியமனம் வழங்கப்படுவதாக அறியப்படுகின்றது. இதில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் சுமார் 200 கி.மீ க்கு தொலைவில் உள்ள பாடசாலைகளில் கடமை புரிய வேண்டிய  சூழ்நிலை ஏற்பட்டதுடன் இவ் நியமனங்களில் கூடுதலாக பெண்கள் அடங்கி உள்ளதாக அவதானிக்க கூடியதாக உள்ளதுடன் இவ் ஆசிரியர்கள் பாடசாலையில் தங்குமிடவசதிகள், போக்குவரத்து போன்ற பல இன்னல்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ் ஆசிரியர்கள் நலன் கருதி தாங்கள் மறுபரிசீலனை செய்து இவ் ஆசிரியர்களை ஊவாமாகாணத்திற்கு நியமனம் வழங்கம் பட்சத்தில் கூடுதலாக தமிழ் மொழி மூலம் பாடசாலைகளில் கல்வி தரத்தினை உயர்த்த முடியும். என ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் தீர்க்கமான முடிவொன்றை பெற்றுதருமாறு வேண்டுகோளென்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46