உலகின் மிகவும் வயதான நபராக இத்தாலிய பெண்மணி

Published By: Raam

16 May, 2016 | 08:47 AM
image

இத்தாலியைச் சேர்ந்த 116 வயதான எம்மா மொரானோ உலகின் மிகவும் வயதான நபர் என்ற பெயரைப் பெறுகிறார்.

உலகின் மிகவும் வயதான நபராக இதுவரை காலமும் விளங்கிய அமெரிக்காவைச் சேர்ந்த 116 வயதான சுஸன்னாஹ் முஷட் ஜோன்ஸ் கடந்த வியாழக்கிழமை மரணமானதையடுத்து அவரது இடத்தை எம்மா மொரானோ பெற்றுள்ளார்.

1899 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி 8 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்தவராக பிறந்த அவர், தனது இளைய சகோதர, சகோதரிகள் அனைவரை விடவும் அதிக காலம் உயிர் வாழ்ந்துள்ளார்.

அவரது கடைசி சகோதரி 5 வருடங்களுக்கு முன்னர் தனது 102 ஆவது வயதில் மரணமடைந்திருந்தார்.

2020 ஆம் ஆண்டு வரை வாழ்ந்து உலகில் அதிக காலம் உயிர் வாழ்ந்தவர் என்ற சாதனையைப் படைப்பதே தனது அடுத்த கட்ட இலட்சியம் என எம்மா தெரிவிக்கிறார்.

உலகில் இதுவரை அதிக காலம் வாழ்ந்த மனிதராக 1997 ஆம் ஆண்டில் தனது 122 ஆவது வயதில் மரணமான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் கால்மென்ட் விளங்குகிறார்.

நடக்கவோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கவோ முடியாத நிலையிலுள்ள எம்மா, கடந்த 25 வருட காலமாக தனது மாடிக் குடியிருப்பு வீட்டை விட்டு வெளியில் செல்லாது உள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52