இன்று தமி­ழக தேர்தல்

Published By: Raam

16 May, 2016 | 07:45 AM
image

தமி­ழ­கத்தின் 15-ஆவது சட்ட சபைக்கு உறுப்­பி­னர்­களை தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கான தேர்தல் இன்று திங்­கட்­கி­ழமை நடை பெறு­கின்­றது. மொத்தம் உள்ள 234 தொகு­தி­களில் 233 தொகு­தி­க­ளுக்கு இன்று தேர்தல் நடை­பெ­று­கின்­றது.

கரூர் மாவட்டம் அர­வக்­கு­றிச்சி தொகு­தியில் வாக்­கா­ளர்­க­ளுக்கு பணமும், பரிசுப் பொருட்­களும் விநி­யோ­கிக்­கப்­ப­டு­வ­தாக வந்த முறைப்­பாடு கார­ண­மாக அந்த தொகுதி தேர்தல் மட்டும் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. அங்கு எதிர்­வரும் 23ஆம் திகதி வாக்­குப்­ப­திவு நடை­பெறும் எனவும், 25 ஆம் திகதி வாக்கு எண்­ணிக்கை நடை பெறும் எனவும் தேர்தல் ஆணை­யகம் அறி­வித்­துள்­ளது.

இதனால் அர­வக்­கு­றிச்சி தவிர மற்ற 233 தொகு­தி­க­ளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்­குப்­ப­திவு தொடங்கி மாலை 6 மணி வரை மொத்தம் 11 மணி நேரம் இடை விடாது நடை­பெறும்.

மொத்தம் 5 கோடியே 82 இலட்சம் வாக்­கா­ளர்கள் வாக்­க­ளித்து தங்கள் பிர­தி­நி­தி­களை தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கான உரி­மையை இத் தேர்­தலில் பெற்­றுள்­ளனர்.

தமி­ழகம் முழு­வதும் மொத்தம் 66 ஆயி­ரத்து 7 வாக்குச் சாவ­டிகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த வாக்குச் சாவ­டி­க­ளுக்கு நேற்று காலை முதல் மின்­னணு வாக்குப் பதிவு இயந்­தி­ரங்­களும் வாக்குப் பதி­வுக்கு தேவை­யான 43 வகை­யான பொருட்­களும், பலத்த பாது­காப்­புடன் அனுப்பி வைக்கும் பணிகள் நடை­பெற்­றன.

தமி­ழ­கத்தில் உள்ள 234 தொகு­தி­க­ளிலும் மொத்தம் 3776 வேட்­பா­ளர்கள் களத்தில் உள்­ளனர். இதில் அர­வக்­கு­றிச்சி தொகுதி வேட்­பா­ளர்கள் மட்டும் 23ஆம் திகதி தேர்­தலை சந்­திக்­கி­றார்கள்.

தேர்தல் பணியில் மொத்தம் 4 இலட்­சத்து 70 ஆயிரம் அரசு ஊழி­யர்கள் ஈடு­ப­டுத்­தப்­பட்டு உள்­ளனர். வாக்­குப்­ப­தி­வுக்­காக 1 இலட்­சத்து 40 ஆயிரம் இயந்­தி­ரங்கள் பயன் படுத்­தப்­ப­டு­கின்­றன.

அனைத்து வாக்குச் சாவ­டி­க­ளிலும் சி.சி.டி.வி. கண்­கா­ணிப்பு காமி­ராக்கள் அமைக்­கப்­பட்டு வாக்குப் பதிவு கண்­கா­ணிக்­கப்­ப­டு­கி­றது. வாக்­குப்­ப­திவு காணொ­ளிலும்(வீடி­யோ­விலும்) பதிவு செய்­யப்­ப­டு­கி­றது.

முதியோர் மற்றும் ஊன முற்றோர் வாக்­குப்­ப­திவு செய்­வ­தற்­காக வாக்குச் சாவ­டி­க­ளுக்கு செல்ல சக்­கர நாற்­கா­லிகள்(வீல் சேர்கள்) ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

எந்­தெந்த வாக்குச் சாவ­டிக்­குட்­பட்ட பகு­தி­களில் முதியோர், ஊன­முற்றோர் எவ்­வ­ளவு பேர் உள்­ளனர், அங்கு எத்­தனை சக்­கர நாற்­கா­லிகள் (வீல் சேர்கள் ) தேவை என்­பதும் கணக்­கெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கி­ணங்க தமிழ்­நாடு முழு­வதும் 11 ஆயிரம் சக்­கர நாற்­கா­லிகள் வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

வாக்­குப்­ப­திவு மற்றும் வாக்­குப்­ப­திவு ஏற்­பா­டு­களை கண்­கா­ணிக்கும் பணியில் வெளி­மா­நி­லங்­களைச் சேர்ந்த 164 பொதுப்­பார்­வை­யா­ளர்­களும், 122 செல­வினப் பார்­வை­யா­ளர்­களும் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள்.

வாக்­குப்­ப­திவு அமை­தி­யாக நடை­பெ­றவும் வாக்­கா­ளர்கள் அச்­ச­மின்றி வாக்குப் பதிவு செய்­யவும் விரி­வான பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. இதற்­காக 300 கம்­பெ­னியைச் சேர்ந்த 18 ஆயிரம் துணை இரா­ணுவப் படை­யினர் வெளி மாநி­லங்­களில் இருந்து தமி­ழகம் வர­வ­ழைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அவர்கள் ஏற்­க­னவே தங்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட தொகு­தி­க­ளுக்கு சென்று பாது­காப்பு பொறுப்பை ஏற்­றுக்­கொண்­டனர்.

சென்­னையை தவிர்த்து 31 மாவட்­டங்­களில் உள்ள 58 ஆயி­ரத்து 468 வாக்குச் சாவ­டி­களில் 3,653 வாக்குச் சாவ­டிகள் பதட்­ட­மா­னவை என கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. சென்­னையில் உள்ள 3,773 வாக்குச் சாவ­டி­களில் 433 மையங்கள் பதட்­ட­மா­னவை என கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இங்கு துணை இரா­ணுவப் படை­யினர் பாது­காப்பு பணியில் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள்.

தேர்தல் பாது­காப்பு பணியில் 65 ஆயிரம் பொலி­ஸாரும், 18 ஆயிரம் துணை இரா­ணு­வத்­தி­னரும் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வது தவிர முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற வீரர்கள், ஊர்­காவல் படை­யினர் அதி­ர­டிப்­ப­டை­யினர் என மொத்தம் 1 இலட்­சத்து 38 பேர் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள்.

சென்­னையில் உள்ள 16 தொகு­தியில் 7,500 வாக்குச் சாவ­டிகள் அமைக்­கப்­பட்டு 20 ஆயிரம் அரசு ஊழி­யர்கள் பணியில் அமர்த்­தப்­பட்­டுள்­ளனர். மொத்தம் 40 இலட்சம் வாக்­கா­ளர்கள் ஓட்டுப் போடு­கி­றார்கள். இதில் பதட்­ட­மான 433 மையங்­களில் கூடுதல் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

அனைத்து மாவட்­டங்­க­ளிலும் மாநில சட்ட ஒழுங்கு டி.ஜி.பி. சைலேந்­தி­ர­பாபு மேற்­பார்­வை­யிலும், சென்­னையில் பொலிஸ் கமி­ஷனர் அசுதோஷ் சுக்லா தலை­மை­யிலும் பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

பாது­காப்பு பணி­களை மேற்­பார்­வை­யி­டவும், பாது­காப்பு பணியில் ஈடுபடவும் வெளிமாநிலங்களில் இருந்து 31 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தமிழகம் வந்துள்ளனர்.

தேர்தலை அமைதியாகவும் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி நடத்தவும் தேர்தல் ஆணையகமும் , பொலிஸாரும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

இன்று மாலை வாக்குப்பதிவுகள் முடிவடைந்ததும் மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். பின் 19ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52