"தேசிய உற்பத்தியை மேம்படுத்தினால் மாட்டுமே தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்" 

Published By: Vishnu

04 Sep, 2019 | 05:12 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய உற்பத்திகளை மேம்படுத்தினால் மாத்திரமே தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்  கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் சிறு ஏற்றுமதி உற்பத்தியாளர் சங்கத்தின்  தேசிய மாநாடு இன்று கொழும்பில் உள்ள  கண்காட்சி காட்சிப்படுத்தல் அரங்கில் இடம் பெற்றது. 

இந்நிகழ்வில் கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார.

கடந்த அரசாங்கத்தின் தேசிய உற்பத்திகளை வலுப்படுத்துவதற்கான  பல்வேறு  செயற்திட்டங்கள் கிராமத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டன. குறிப்பிட்ட சில  செயற்திட்டங்களும்  பாரிய வெற்றிப்பெற்றன. இச்செயற்திட்டங்கள் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லப்பட்டதா என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

தேசிய உற்பத்தியாளர்கள் இன்று  சுய தொழில்களை  கைவிட்டு இரண்டாம், மூன்றாம் தரப்பு வர்த்தக தொழில்களை தேசிய உற்பத்தியாளர்கள் பாதுகாக்கப்படவில்லை.  இறக்குமதி உற்பத்திகளுக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுக்கப்பட்டமையினால்  தேசிய உற்பத்திகள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஒரு சில மொத்த வியாபாரிகளின் சுய நல தேவைகளுக்காக ஒட்டுமொத்த  சிறு ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தேசிய பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய வேண்டுமாயின் தேசிய உற்பத்திகள் முன்னேற்றமடைய வேண்டியது. அவசியமாகும். .இன்று சிறு ஏற்றுமதி உற்பத்திகள் இறக்குமதி செய்யப்படும்நிலைக்கு தேசிய உற்பத்திகள்  பலவீனமடைந்துள்ளது. இந்நிலைமை முழுமையாக மாற்றியமைக்கும். எமது ஆட்சியில் தேசிய உற்பத்திகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04